Thursday, January 9, 2014

சிறப்பு விருந்தினர் பதிவு /கவுனி அரிசி இனிப்பு பொங்கல்/மனோ அக்கா



என் பிளாக் பார்வையாளர்க்ளின் விருப்பத்திற்காக பல ஊர்களின் பாரம்பரிய சமையல் வகைகள் இங்கு பகிரலாம் என்று பாரம்பரிய குறிப்புகளுடன் சிறப்பு விருந்தினர் பதிவு அறிவித்து இருந்தேன்.

இதில் முதல் முதலாக பாரம்பரிய சமையலை நம்முடன் பகிரவந்திருப்பவர்க திருமதி.மனோ சாமிநாதன் அவர்கள்.

மனோ அக்காவை பற்றி இங்குள்ள பிளாக்கர்கள் மற்றும் அறுசுவை தளத்தில் உள்ளவர்கள் அறிந்திருப்பீர்கள்.

என் பார்வையில் மனோ அக்காவை பற்றி....
மனோ அக்காவை எனக்கு அறுசுவை மூலமாக தெரியும். ஒரு முறை நாங்க பிளாக் தோழிகள் சந்திப்பு நடக்கும் போது நேரில் சந்தித்துக்கொண்டோம்.அழகான புன்சிரிப்புடன் பழக இனிமையானவர்கள்.நேர்த்தியான பல குறிப்புகள் அறுசுவையில் பகிர்ந்து இருக்கிறார்கள்.  கேக் ரெசிபிகளின் விளக்கத்தை அறுசுவை டாட்காமில் கொடுத்தது பலருக்கும் மிக உதவியாக இருந்ந்தது, சமையல் , தவிர ஓவியம் வரைவதில் கைதேர்ந்தவர்.மனோ அக்கா வரைந்த ஓவியம் பார்க்க அப்படியே தத்ரூபமாக இருக்கும்.


முத்துச்சிதறல் என்ற தமிழ் வலைப்பூவும் , மனோஸ் கிச்சன் என்ற ஆங்கில வலைப்பூவும் எழுதி வருகிறார்கள். பிளாக்கின் பெயருக்கு ஏற்ப பல வகையான் முத்து சிதறல்கள் பரந்து கிடக்கின்றன வகை வகையான சமையல் முத்து, அனுபவ முத்து , சிந்தனை முத்து, ஓவிய முத்து , குறிப்பு முத்து 



 அவர்கள் வரைந்த ஓவியத்தில்  என்னை மிகவும் கவர்ந்தது இந்த பசுமையுடன் இளமை அழகு , இதில் அந்த காஷ்மீர் பெண்ணில் கையில் அழகான ஆட்டு குட்டி பார்க்க என்ன அழகு.. 
இந்த படத்துக்கு நம்ம பூஸார் ஆஷா பேஸ்லே சூப்பரான கவிதையும் தொகுத்து இருக்கிறார்கள்.



முத்துக்குவியலில்
கண்டெடுத்த
காஷ்மீர் பெண்ணே....
முற்பிறவியில்
செய்த பயனால்
இப்பிறவியில்
ஆட்டுக்குட்டியாகி
உன் வளைக் கரத்துள்
அடைக்கல மாகிவிட்டேன்!!!


 2004லிருந்து கீழ்க்கண்ட வலைத்தளத்தில் பல நூறு சமையல் குறிப்புகள் கொடுத்து, 13 லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்களை பெற்றிருக்கிறார்கள்.

அதிலுள்ள சில குறிப்புகள் மட்டும் கீழ்க்கண்ட  தளத்தில் காணலாம்..http://manosdelicacies.blogspot.ae/

www.arusuvai.com நூற்றிற்கும் மேல் குறிப்புகள் கொடுத்து அசத்தி இருக்கிறார்கள்.

******************************







நம் பாரம்பரிய பழக்க வழக்கங்கள், சமையல் முறைகள் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கொண்டே போகின்ற
இந்தக்கால‌த்தில் திருமதி.. ஜலீலா பாரம்பரிய சமையல் பற்றி என்னை எழுத அழைத்தது மிகுந்த மகிழ்வைக்கொடுத்தது. அவருக்கு என் அன்பான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என் பார்வையில் சமையல் அட்டகாசங்கள்
ஜலீலாவின் சமையல் அட்டகாசங்கள்வலைத்தள‌த்தை ஆரம்பம் முதலே ரசித்து வருகிறேன். சமையல் குறிப்புகள் மட்டுமல்லாதுடிப்ஸ்மருத்துவக்குறிப்புக்கள்,உடல்நலக்குறிப்புகள் என்று கொடுப்பதில் திறமையானவர். ஜலீலாவின் சமையல் குறிப்புகள் அனைத்துமே அருமையானவை என்றாலும் அவரின் ஆம்பூர் பிரியாணிமுர்தபாஇளநீர் கடல்பாசி, அரேபிய நோன்புக்கஞ்சியான ஹரீஸ் குறிப்புகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை.///
 ***************************************
 பாரம்பரிய உண‌வுப்பழக்கங்கள் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. வெல்லம், கருப்பட்டி கலந்த இனிப்பு வகைகள், அரிசியைக் குறைவாகவும் சாமை, கவுனி, வரகு, கோதுமை, கம்பு கலந்த உணவுகள் அதிமாகவும் தினசரி உண்பது அந்தக்கால பழக்கமாக இருந்தது.
அதிக அளவில் சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் வசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. நாகரிகம் என்ற பெயரில் பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்கள் இன்றைய சமுதாயத்தினரிடம் மறைந்து வருகிறது. தவறான உணவுப் பழக்கங்களை அறிமுகப்படுத்தி விடும் பெரியவர்களிடம் தான் குற்ற‌ம் அதிகமாக இருக்கிறது.

பூப்பெய்திய பெண்களுக்கான டிப்ஸ்:
ளம் பெண்கள் பூப்பெய்திய பின் மாதாமாதம் அவர்களுக்கு முட்டையை உடைத்து அதில் நல்லெண்ணையும் சீனியும் போட்டுக்க‌லந்து உண்ண வைப்பார்கள். சாப்பிட அத்தனை கஷ்டமாயிருக்கும். இடுப்பு எலும்பிற்கு வலு சேர்க்கும் என்று அதட்டிச் சொல்லி சாப்பிட வைப்பார்கள். பிற்காலத்தில் வரவிருக்கும் பிரசவ வலியின்போது அந்தக் கஷ்டத்தைத்தாங்கக்கூடிய அளவு சிறு வயதிலிருந்தே எலும்புகள் பலம் பெற நம் முன்னோர்கள் செய்திருந்த ஏற்பாடு இது.
இரண்டு மாதங்களுக்கொரு முறை நிச்சயம் விளக்கெண்ணெய் குடித்தே ஆக வேன்டும்.  வயிற்றுப்பூச்சிகளை அவ்வப்போது நீக்குவதற்கான வழி முறை இது.

சளித்தொல்லைக்கான கை வைத்தியம்:
ச‌ளி பிடித்தால் தூதுவளைத்துவையல் அரைத்து சாப்பிடச் சொல்வார்கள். அப்போதெல்லாம்  மருத்துவரிடம் போவதற்கான அவ‌சியம் வந்ததேயில்லை. எதற்கெடுத்தாலும் மருத்துவரைப்போய் பார்க்கும் பழக்கமும் இருந்ததேயில்லை.



சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம், வாகு, மக்காச்சோளம், குதிரைவாலி போன்ற தானியங்களை நமது உணவில் முற்றிலும் தவிர்த்து, அரிசியை மட்டுமே பயன்படுத்துவதால் உடலுக்குத் தேவையான சரிவிகித உணவு கிடைப்பதில்லை.


புழுங்கலரிசி, கைக்குத்தல் அரிசி, சிகப்பரிசி, கவுனி அரிசி, வரகு அரிசி, தினை அரிசி, சாமை அரிசி இவை அத்தனையுமே ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருபவை. காரணம், இவை அனைத்திலும் சாப்பிட்டதும்  ரத்தத்தில் கலக்கும் ஆற்றல் குறைவு. கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்பு சத்து குறையும். உடல் பருமன்  ஏற்படாது. ஜீரண சக்தியை அதிகரிப்பதுடன்
வேண்டாத கொழுப்புகளை கரைக்கும் சக்தி படைத்தவை.
புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்பு சத்து, தாது, உப்பு, இரும்பு சத்து மற்றும் உயிர்ச்சத்துகளும் இவற்றில் இருக்கின்றன.

சிறு தானியங்களில் கவுனி அரிசி பற்றி சொல்ல வேன்டும். இது கருஞ்சிவப்பாக தோற்றமளிக்கும். விலை உயர்ந்ததும் கூட!

 கவுனி அரிசி 'அரசர்களின் அரிசி' என்று அழைக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இது ஓர் அற்புதமான Antioxidant.. Anthocyanin என்கிற வேதிப்பொருள், இந்த அரிசியின் கறுப்பு நிறத்துக்குக் காரணம்.

இதய நோய், இரத்தக்கொதிப்பு, மாரடைப்பு, சிறுநீரகப் பாதிப்பு, புற்றுநோய், சர்க்கரை நோய் ஆகிய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கவுனி அரிசிக்கு உண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த அரிசியில், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்துக்கள் தவிர, அபரிமிதமான நார்ச்சத்தும் இருக்கின்றன. இரும்பு, தாமிரம், துத்தநாகம், மெக்னீஷியம், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும், 'பி’ 'ஏ’, 'இ’ ஆகிய வைட்டமின்களும், உடலுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் அமினோ அமிலங்களும்  நிறைந்துள்ளன. 'ஆர்ஜினைன்’ என்ற அமினோ அமிலம், 'நைட்ரிக் ஆக்ஸைடு’ என்கிற வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. மெல்லிய இரத்தக்குழாய்களை விரிவடையச் செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. இதுவே இதயப் பாதுகாப்புக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

இந்த கவுனி அரிசியில் புட்டு, தோசை, பாயசம், இனிப்புப்பொங்கல் போன்ற உணவு வகைகள் செய்யலாம். இங்கே நான் தரப்போகும் குறிப்பு கவுனி அரிசியில் செய்யப்படும் இனிப்புப்பொங்கல்!!!

முதல் முதலாக மனோ அக்காவை அழைத்தேன்பலவேலைகளுக்கு இடையில் இப்போது உஙக்ளுக்க்காக இனிப்புடன் சத்தான கவுனி அரிசி பொங்கல். இந்த குறிப்பை நம்முடன் பகிர்ந்து இருக்கிறார்கள். முதல் முதலாக இனிப்புடன் ஆரம்பமானது எனக்கு ரொம்ப சந்தோஷம்.

கவுனி அரிசி இனிப்புப்பொங்கல்:

தேவையான பொருள்கள்:

கவுனி அரிசி‍ 1 கப்
சர்க்கரை‍ முக்கால் கப்
தேங்காய்த்துருவல் 1 கப்
நெய்‍ 1 மேசைக்கர்ண்டி
முந்திரிப்பருப்பு 10
ஏலப்பொடி‍ 1 ஸ்பூன்

செய்முறை:

கவுனி அரிசி வேக நெடு நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் அதை முதல் நாள் இரவே இரண்டு தடவை க‌ழுவி அரிசி மட்டத்திலிருந்து ஒரு இஞ்ச் அளவு தண்ணீர் இருக்குமாறு ஊற்றி ஊற வைக்கவும். மறு நாள் காலை பொங்கல் செய்யலாம்.

அரிசி யில் ஊற வைத்த‌ தண்ணீர் இப்போது கருஞ்சிவப்பாக மாறியிருக்கும்.
அதை அப்படியே அரிசியுடன் குக்கரில் 8 விசில் வரை வேக வைக்கவும்.
ஆவி அடங்கியதும் சூடாக இருக்கும்போதே சீனியை பவுடர் செய்து ஏலப்பொடியுடன் சேர்த்து வேக வைத்த சாதத்தில் கொட்டவும்.
இப்போது MASH பண்ணும் கரண்டி உதவியுடன் மசிக்கவும்.
பொங்கல் போல மிருதுவாக, பசையாக மாறும்.
பின்னர் தேங்காய்த்துருவல் சேர்த்துக்கிளறவும்.
நெய்யை சூடாகி முந்திரிப்பருப்புகளை வறுத்துக்கொட்டவும்.
சுவையான கவுனி அரிசி இனிப்புப் பொங்கல் தயார்!!





 மிக அருமையான சத்தான கவுனி அரிசி பொங்கல். மிக்க நன்றி மனோ அக்கா.. இது கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

நாங்களும் எங்கள் இஸ்லாமிய இல்லங்களில் அரிசிமாவு ரொட்டி, புட்டு , கறி தக்குடி, இனிப்பு சுத்திரியான் , வெல்லம் உருண்டை இதுபோல் பல சமையல் வகைகளுக்கு வறுத்த சிகப்பரிசி தான் பயன்படுத்துவது.
கவுனி அரிசி இங்கு துபாயில் ஆதில் சூப்பர் மார்க்கேடில் கிடைக்கும் என நினைக்கிறேன்.

 இதை பார்வையிடும் உங்களுக்கும் உங்கள் ஊர் பாரம்பரிய சமையலை பகிர ஆர்வம் இருந்தால் எனக்கு புகைப்படத்துடன் உங்கள் குறிப்பை என் மெயிலுக்கு அனுப்பபலாம். இல்லை முக நூல் மெசேஜ் பாக்ஸிலும் கொடுக்க்கலாம்.
feedbackjaleela@gmail.com
cookbookjaleela@gmail.com
Traditional Recipes with Special Guest Post/



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

16 கருத்துகள்:

ஸாதிகா said...

அருமையான அறிமுகம்.தொடர வாழ்த்துக்கள்.இடம்பெற்ற மனோ அக்காவுக்கும்,அறிமுகப்படுத்திய ஜலீலாவுக்கும் வாழ்த்துக்கள்.கூடவே நல்ல நல்ல குறிப்புகளோடு அருமையான ஒரு பாரம்பர்ய சமையலையும் தந்து மகிழ்வித்துவிட்டீர்கள்.நன்றி.

Asiya Omar said...

சூப்பர் பகிர்வு.மனோ அக்காவின் அசத்தலான குறிப்புடன் நல்ல ஆரம்பம்.
மனோ அக்காவிற்கும் தங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்கள்.

நண்பா said...

வணக்கம் ஜலீலாக்கா,
மிக அருமையான தகவல்கள். மிக நன்றி.. கவுனி அரிசியின் ஆங்கில பெயர் வேண்டும்.
நன்றி..

Jaleela Kamal said...

வாங்க நண்பா வருகைக்கு மிக்க நன்றி
கவுனி அரிசி ஆங்கில பெயர்

Kavuni rice in english- Black glutinous rice

'பரிவை' சே.குமார் said...

மனோ அம்மாவின் சமையல் குறிப்பை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் அக்கா.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு பகிர்வு சகோதரி... குறிப்பிற்கு நன்றி...

வாழ்த்துக்கள்...

ADHI VENKAT said...

சுவையான சத்தான குறிப்பு... பகிர்ந்த மனோம்மாவுக்கும் தங்களுக்கும் பாராட்டுகள்..

மனோ சாமிநாதன் said...

என்னுடைய கருத்துக்களையும் சமையல் குறிப்பையும் மற்றும் என்னைப்பற்றிய தகவல்களையும் அழகாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள் ஜலீலா!! அன்பு நன்றியும் பாராட்டுக்களும்!!

apsara-illam said...

ஆரம்பமே அசத்தல் அக்கா...
வாழ்த்துக்கள்.
சத்துள்ள குறிப்பை பகிர்ந்து கொண்ட மனோ அம்மாவுக்கு என் பாராட்டுக்களும்,வாழ்த்துக்கள்.

அப்சரா.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

பிலஹரி:) ) அதிரா said...

அடடா நான் கொஞ்சம் லேட்டாகிட்டேன் போல. புது முயற்சியில் இறங்கியிருக்கிறீங்க ஜல் அக்கா... நல்ல முயற்சி.. இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.

மனோ அக்கா பற்றி மிக நல்ல அறிமுகம். எனக்கும் அவவை அறிமுகப் படுத்தியது அறுசுவையின் பட்டிமன்றம்தான்:). பட்டிமன்ற வாதத்தில் தான் அவ அறிமுகமானா எனக்கு.

நல்ல சத்தான ஒரு பொங்கல் அறிமுகப்படுத்தியிருக்கிறா பார்க்கவே ஆசையாக இருக்கு. சூப்பராக இருக்கு மனோ அக்கா.

இந்த றைஸ் இங்கு கிடைக்குமா தெரியல்ல, பார்ப்போம்.

Vijiskitchencreations said...

வாழ்த்துக்கள். நல்ல புது வித முயற்ச்சி.

Angel said...

:))) ..என்னான்னு தெரியாமலேயே தாய் ப்ளாக் ரைஸ் அஞ்சு கிலோ பாக் வாங்கினேன் டிசம்பர் மாதம் ..
இப்போ நிறைய ரெசிப்பி கிடைச்சிருக்கு ..மிக்க நன்றி மனோ அக்கா மற்றும் ஜலீலா ,

pudugaithendral said...

சூப்பர் பகிர்வு மனோ மேடம்,

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா