ஆம்பூர் மட்டன் பிரியாணி
சாதரணமாக வடித்து செய்யும் பிரியாணிக்கும் ஆம்பூர் பிரியாணிக்கு வித்தியாசம் இருக்கு. இது ரோட்டோர கடைகளில் பார்சல் பிரியாணிபோல் போடுவார்க்ள், மொத்தமா நிறைய வடித்து தட்ட முடியாது அதற்கு இது போல் வேகவைத்து தண்ணீர் அளந்து ஊற்றுவதால் ஈசியாக செய்து விடலாம்.
பேச்சுலர்களும் ஈசியாக செய்துடலாம்.
தேவையானவை
தரமான பாசுமதி அரிசி - ஒரு கிலோ
மட்டன் ஒரு கிலோ
வெங்காயம் - அரை கிலோ
பழுத்த தக்காளி - அரைகிலோ
பழுத்த ரெட் பச்ச மிளகாய் - ஆறு
காஷ்மீரிசில்லி (அ) மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
தயிர் - ஒரு கப்
கொத்துமல்லி தழை
புதினா
பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டு
பிரியாணி இலை -இரண்டு
உப்பு தூள் - தேவைக்கு (சுமார் ஆறு தேக்கரண்டி)
எண்ணை - 200 மில்லி
நெய் - 50 மில்லி
லெமன் -அரைபழம்
செய்முறை
1. அரிசியை லேசாக களைந்து ஊறவைக்கவும்.
2. மட்டனை கொழுப்பெடுத்து 5 முறை கழுவி தண்ணீரை வடிக்கவும்.
3. வாயகன்ற பாத்திரத்த காய வைத்து அதில் பட்டை ,ஏலம், கிராம்பு , பிரியாணி இலை போட்டு வெடியவிட்டு வெங்கயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து நன்கு வதக்கவும்.
4. வதக்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள்,
பழுத்த பச்சமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. பிறகு புதினா, தயிர் சேர்க்கவும், அடுத்து தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்கவும்.
6. அடுத்து உப்பு,மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயின் தனலை சிம்மில் வைத்து மட்டனை வேக விடவும்.
7. மட்டன் வெந்து கூட்டு கிரேவி பதம் வந்ததும்
8. மட்டன் கூட்டு அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தார் போல் தண்ணீர் ஊற்றவும்.
9. ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்னேகால் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும்.
தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் அரிசியை களைந்து போட்டு கொதிக்கவிடவும்.
10 முக்கால் பதம் வெந்ததும் கடைசியாக சிறிது நெய், லெமன் பிழிந்து ,பாதி அளவு வற்றும் போது அடுப்பின் மேல் தம் போடும் கருவியை வைத்து சாப்பாடு சட்டியின் மேல் கனமான பாத்திரத்தை வைத்து 20 நிமிடம் தம்மில் விடவும்.
சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.
தேங்காய் தயிர் சட்னி
இதற்குதொட்டு கொள்ள இஸ்லாமிய இல்ல திருமனங்களில் முன்பு செய்யும் தேஙகாய் தயிர் பச்சடி செய்துள்ளேன்.
தயிர் - ஒரு கப்
தேங்காய் துருவல் - கால் கப்
பொட்டு கடலை - ஒன்றும் பாதியுமாய் பொடித்தது இரண்டு மேசை கரண்டி
உப்பு சிறிது
பச்சமிளகாய் - இரண்டு( பொடியாக அரிந்தது)
வெங்காயம் - பெரியது ஒன்று (பொடியாக அரிந்தது)
கொத்து மல்லி தழை - சிறிது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.
டிஸ்கி: மகளிர் தினம் அன்று மண் சோறு செய்து அதில் ஒளித்து வைத்திருந்த முட்டை அதிராவிற்கு கிடைக்காமல் போகவே, ஆம்பூர் பிரியாணிக்குள் ஒளித்து வைத்துள்ள முட்டையை அதிராவிற்கு மட்டும் கொடுக்கிறேன்.
முதலில் இந்த பிரியாணிய செய்து சாப்பிடுங்கள், அடுத்து பிரெட் ஹல்வா போடுகிறேன்.
40 கருத்துகள்:
Sooper ... i'll try with vegetables ...thnx
I like that chutney Jaleela.
m.. Lucky Athira. ;)
சும்மா இல்லாமல் இந்த பக்கம் வந்து இப்ப கை ட்ரைபண்ணச் சொல்லுது..ஆமாம் லேசா பசிக்கவும் ஆரம்பிச்சிடுச்சி....
ம்..வாசனை இங்கே ஆளை தூக்குதே!!
அதிராவுக்கு முட்டை வேனாமாம் அதனால நா எடுத்துகிட்டேன்,
ஆஹா பார்க்கவே அசத்தலா இருக்கு மேடம். இதை தான் எதிர்பார்த்தேன். போட்டுடீங்க. இன்னிக்கே கிடா வெட்டிட வேண்டியது தான்.
+ 2 ரிசல்ட் வந்துடுச்சு, அதிராவுக்கு உள்ள முட்டையை ஜெய்லானி எடுத்து கொள்வதாக சொன்னார். + 2 ரிசல்ட்டுக்கும் இதுக்கும் ஏதும் உள்குத்து இருக்கா?
ஜலீலா அக்கா, அருமையான பிரியாணி.
//அதிராவுக்கு முட்டை வேனாமாம் அதனால நா எடுத்துகிட்டேன்,//
கடவுளே இது இன்னும் அதிரா கண்ணிலே படவில்லை போல் இருக்கு.
அந்த படதில் இருக்கும் பிரியாணி முழுதும் நீங்களா சாப்டேங்க..நாஸியா பியாணியாம் பார்துகோங்க...
jaleela ,idhu romba suuuuuuuuuuuuuuper.parkave romba nalla irukku.thanks for the recipe
மிகவும் அருமையாக இருக்கின்றது...சூப்பர்ப்...படிக்கும்பொழுதே ஆசையாக இருக்கின்றது...நானும் தேங்காய் பச்சடி செய்து இருக்கின்றேன்...ஆனால் பொட்டுகடலை சேர்த்ததில்லை...அடுத்ததடவை செய்து பார்க்கிறேன்...மிகவும் நன்றி....
வாவ்..ஆம்பூர் பிரியாணி வாசனை என்னை இழுத்துட்டு வந்துடுச்சு...நீங்க சென்னையா...நாளைக்கே வந்துடுறேன்..உங்க வீட்டுக்கு! :-)
தேங்காய் போட்டு தயிர் சட்னி, இதுவரை கவணித்ததில்லை.
ஜலீலாக்கா... மட்டின் பிரியாணி என்றால் கேட்கவும் வேண்டுமோ? நான் இதுக்குமேல இங்கு மட்டின் பற்றிக் கதைக்கமாட்டேன்ன்ன்.... கழுகுக்:) கண்ணோடெல்லாம் ஆட்கள் திரியினம் ஜலீலாக்கா... நல்ல வேளை ஜீனோ காணமுன் நான் ஓடிவந்திட்டேன்... மிக்க நன்றி முட்டைக்கு...
பை த வே.. ஒண்ணே ஒண்ணுதான் வச்சனீங்களோ? கொஞ்சம் கூட வச்சிருக்கப்படாதோ?? ஓக்கை ஓக்கை முறைக்க வாணாம்....
//அதிராவுக்கு முட்டை வேனாமாம் அதனால நா எடுத்துகிட்டேன்/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜலீலாக்கா பாருங்கோ ஜெய்..லானியை... இப்பூடி எல்லாம் கேட்காமல் எடுக்கப்படாதாம் எண்டு சொல்லுங்கோ. பாவம் அவருக்கு இரண்டு கொசுமுட்டை பொரிச்சுக் குடுங்கோ ஜலீலாக்கா.. நிலவைப் படமெடுக்க நித்திரை முழிப்பிருக்க வேணுமெல்லோ.
கடவுளே இது இன்னும் அதிரா கண்ணிலே படவில்லை போல் இருக்கு/// ஆ... எங்கட வாணி இண்டைக்குத்தான் அதிராவுக்கு சப்போட்டாப் பேசுறா.. தாரா பார்த்த எபெக்ட்டாக்கும்.. இமா சொல்லித்தான் பார்த்தேன் வாணி... பகலில் நேரம் என்னைத் துரத்துது...
ஆஹா...ஈசியாதான் அக்கா இருக்கு ஒருநாள் ட்ரை பண்ணிடுவோம்....நன்றி அக்கா...
@@@ athira //முட்டைக்கு...
பை த வே.. ஒண்ணே ஒண்ணுதான் வச்சனீங்களோ? கொஞ்சம் கூட வச்சிருக்கப்படாதோ?? ஓக்கை ஓக்கை முறைக்க வாணாம்....//
வச்ச அடுத்த வினாடியே முட்டையை அபேஸ் பண்ணியாச்சு.
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஜலீலாக்கா பாருங்கோ ஜெய்..லானியை... இப்பூடி எல்லாம் கேட்காமல் எடுக்கப்படாதாம் எண்டு சொல்லுங்கோ. பாவம் அவருக்கு இரண்டு கொசுமுட்டை பொரிச்சுக் குடுங்கோ ஜலீலாக்கா.. நிலவைப் படமெடுக்க நித்திரை முழிப்பிருக்க வேணுமெல்லோ.//
ஏவ்வ்வ்வ்வ்வ். இப்ப முட்டை மட்டுமே ஆட்டைய போட்டது அப்ப முழு பிரியாணியையுமா ? ஓக்கே..
என்ன தங்கமான மனசு !!!!
மனுஷனை சும்மா இருக்க விடமாட்டிய போல, ஆம்பூர் அசத்தல் பிரியாணி!!
நல்லா இருக்கு அக்கா, நல்ல விளக்கம். அக்கா நேரம் கிடைக்கும் போது உங்கள் template மாற்றவும். லோடு ஆக ரொம்ப நேரம் எடுக்கிறது.
இரண்டு நாளாய் பிஸி துபாய் ஷார்ஜா வருகை.இப்பதான் ஆம்பூர் பிரியாணி பார்த்தேன்.சூப்பர்.தயிர் பச்சடியில் பொட்டுக்கடலை சேர்ப்பது புதுசு.
நன்றி சித்ரா
நன்றி இமா
தமிழரசி வாங்க வந்தமைக்கு மிக்க நன்றி.
டிரை பண்ணுஙக்ள். நல்ல இருந்ததா என்று சொல்லுங்கள்.
ஜெய்லானி கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
முட்டை யாருக்கும் கிடையாது அதிராவிற்கு மட்டும் தான்.
உடனே செஞ்சு பார்த்திட வேண்டியதுதான்.
நன்றி அக்கா.
என்,அப்துல் காதர்.
வருகை தந்து பதில் அளித்தமைக்கும் மிக்க நன்றி.
//+ 2 ரிசல்ட் வந்துடுச்சு, அதிராவுக்கு உள்ள முட்டையை ஜெய்லானி எடுத்து கொள்வதாக சொன்னார். + 2 ரிசல்ட்டுக்கும் இதுக்கும் ஏதும் உள்குத்து இருக்கா//
+2 ரிசல்ட் டென்ஷன் போன வருடமே முடிந்து விட்டது. உள் குத்து வெளிகுத்து எல்லாம் ஒன்றூம் இல்லை.
வானதி வருகை தந்தமைக்கு . மிக்க நன்றி.
உங்களுக்கு வேண்டுமானால் பிறகு செய்து தாரேன்.
மலர் எல்லாத்தையும் நானே சாப்பிட்டா நான் என்ன ஆவது.
ஹி ஹி நாஸீயாவை கூப்பிட்டா வரல
ஏஞ்சலின் வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
கீதா ஆச்சல் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
இது இஸ்லாமிய இல்ல திருமணஙகளில் முன்பு செய்வார்கள்.
//வாவ்..ஆம்பூர் பிரியாணி வாசனை என்னை இழுத்துட்டு வந்துடுச்சு...நீங்க சென்னையா...நாளைக்கே வந்துடுறேன்..உங்க வீட்டுக்கு//
வாங்க சந்தன முல்லை , கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
சென்னையே தான் ஆனால் இப்ப் அங்கு இல்லை.
சகோ.ஜமால். இப்ப தேங்காய் போட்டு யாரும் செய்வதில்லை,
கருத்து தெரிவித்தமைக்கு நன்றி
அதிரா ஜலீலா அக்கா வாக்கு மீற மாட்டாங்க செய்து தரேன் சொன்னேன் , கொடுத்துட்டேன்.
ஒகே வா....
சீமான் கனி கண்டிப்பா செய்து பார்த்து எபப்டி இருந்தது என்று வந்து சொல்லவும்.
தொடர் வருகைக்கு மிக்க நன்றி
அதிரா கவலை வேண்டாம் இந்த முட்டை உங்களுக்கு தான்
ஜெய்லானிக்கு அமைச்சர் கொடுப்பார் கொசு முட்டைய.
உஙக்ளுக்கு முட்டைய ஒளித்து வைத்துள்ளேன் என்றூ சொன்னேன் , உள்ளே பார்க்கலையா ஒரு டஜன் அல்லவா வைத்துள்ளேன்.
ஷபிக்ஸ் உங்கள் தஙகமனி கிட்ட சொல்லி செய்ய சொல்லி சாப்பிடுங்கள்
//நல்லா இருக்கு அக்கா, நல்ல விளக்கம். அக்கா நேரம் கிடைக்கும் போது உங்கள் template மாற்றவும். லோடு ஆக ரொம்ப நேரம் எடுக்கிறது//
சசிகுமார் உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி.
டெம்லேட் அதிக குறிப்பு இருப்பதால் மாற்ற யோசனையாக இருக்கு.
//இரண்டு நாளாய் பிஸி துபாய் ஷார்ஜா வருகை.இப்பதான் ஆம்பூர் பிரியாணி பார்த்தேன்.சூப்பர்.தயிர் பச்சடியில் பொட்டுக்கடலை சேர்ப்பது புதுசு//
நானும் பிஸி , கெஸ்ட் வேற
எந்த பதிவும் இப்ப போடல் முன்பே போட்டு வைத்து இருநதது தான் பப்ளிஷ் செய்தேன்.
பொட்டுகடலை சேர்த்து இங்கு சென்னையில் கலறியில் செய்வார்கள், இப்ப வெரும் தயிர் பச்சடி தான் செய்கிறார்கள்.
அந்த நாள் ஞாபகம தான , அதான் செய்தேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா,
நான் உங்க வலைப்பூவை பார்த்ததுமே தெரிஞ்சுகிட்டேன். நீங்கதான் அறுசுவை வலையிலும் கலக்குறவங்கன்னு. என்ன நான் சொல்றது சரிதானே? உங்கள் செய்முறைகள் எல்லாமே எனக்கு பிடிக்கும். நிறைய செய்தும் சாப்பிட்டிருக்கின்றேன். வலையுலகம் எல்லாமே உங்களை சொந்தம் கொண்டாடுகின்ற மாதிரி ஒரு feeling. அப்பப்ப நம்ம இடத்திற்கும் வந்துட்டு போங்க. :)
வ ஸலாம்.
ஆம்பூர் பிரியாணியா!! நல்லது, ம்ம்...
அழகா விதவிதமாச் செய்றீங்க நீங்க!! ஆனா நான் எப்படி வித்தியாசமாச் செஞ்சாலும் பிரியாணி ஒரே மாதிரிதான் வருது!! ;-(
:-))
சூப்பர்ர்ர்,எனக்கு பிடித்த ஆம்பூர் பிரியாணி...சாதரண பிரியாணிக்கும் ஆம்பூர் பிரியாணிக்கும் என்னக்கா வித்தியாசம்???
ஆஹா இதோட மூணு தரம் இந்த பிரியாணி ஃபோட்டோவைப் பார்த்து நாக்கு ஊறிடுச்சு. இந்த வார special வேறென்ன?
ஆம்பூர் மட்டன் பிரியாணியும் தேங்காய் தயிர் சட்னியும் செய்து பார்த்தேன். செம அட்டகாசமான டேஸ்ட். ரெசிப்பிக்கு நன்றி!
Hai Jaleela, romba nalla irrukku biryani, I don't know how to type in tamil font. But super...
I didn't know this was also your blog, happily following you...
Thanks for biryani...
Hai Jaleela, romba nalla irrukku biryani, I don't know how to type in tamil font. But super...
I didn't know this was also your blog, happily following you...
Thanks for biryani...
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா