கடல் பாசி என்னும் அகர் அகர், சைனா கிராஸ் ஏற்கனவே போன வருடம் நோன்பு நேரத்தில் இதன் விளக்கங்கள் போட்டுள்ளேன்.
அதுபோல் நீர்சத்து அதிகமுள்ள காய்களை உட்கொள்வதும் நல்லது.
வெயில் காலத்தில் ஏற்படும் கொப்புளங்கள், வேனல் கட்டிகள், வயிற்று புண் அல்சர்,வாய் புண் எல்லா வற்றிற்கும் இது நல்லது. உடலுக்கு குளிர்சி தரக்கூடியது. இது ரெஸ்டாரன்களில் அதிகமாக பயன் படுத்துவார்கள், ஜெல்லி வகைகளுக்கு, ஐஸ்கீரிம், புட்டிங் ஆகியவற்றிற்கு அதிகமாக பயன் படுத்துவார்கள்.
இது கடல் பாசியை ஏற்கனவே, டேங்க் கடல் பாசி,இளநீர் கடல் பாசி, ஜவ்வரிசி கடல் பாசி, ரோஸ் மில்க் கடல் பாசி, புரூட் கடல் பாசி, பால் கடல் பாசி, நட்ஸ் கடல் பாசி என பல வகையாக செய்யலாம் என்று சொல்லி இருக்கேன்.
இது நான் நேற்று முயற்சி செய்தது கலர் புல் கடல்பாசி.
பார்த்ததும் வைத்ததும் உடனே தட்டு காலி.
சரியாக அரெஞ்ச் செய்து போட்டோ எடுக்கல, அதுவரை பொருமை இல்லை, அடுத்த முறை இன்னும் சூப்பரா போட்டோ போட்டுடுவோம்.
இந்த கலர் புல்லே முன்று வகையான எசன்ஸில் செய்துள்ளேன்.
முதலில் பிளைனாக கடல் பாசியை எடுத்து ஒரு கை பிடி அளவு ஒன்னறை டம்ளர் தண்ணீரில் உதிர்த்து போட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கெட்டியாகும் போது முன்று பாகமாக பிரித்து கிண்ணங்களில் ஊற்றி ஒரு கிண்ண்டத்தில் பாதம் எஸன்ஸ், அடுத்துள்ள கிண்ணத்தில் ரோஸ் எஸன்ஸ், மறொரு கிண்ணத்தில் ஆரஞ்சு புட் கலர் சேர்த்து ஆரவிட்டு , பிரிட்ஜில் வைத்து குளிர வைத்து கட் செய்து சாப்பிடவும்.
இதில் கலர் சேர்த்ததும் சிறிது நட்ஸ் வகைகள் (அ) பழங்கள் சேர்த்து செய்தாலும் இன்னும் நல்ல இருக்கும்.
இதில் பச்சை வண்ணம் சேர்த்து செய்தால் இன்னும் நல்ல கலர் ஃபுல்லாக இருக்கும்
Tweet | ||||||
45 கருத்துகள்:
ஒரு தொகுப்புறையே நிகழ்த்திட்டீங்க போல.
வெயிலுக்கேற்ற நல்ல டிப்ஸுங்க, நன்றி.
ithu veg or non-veg????
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!
பார்த்தாலே சாப்பிடணும்போல இருக்கு! நாளைக்கே பண்ணப்போறேன்.. வீக்கெண்டு ஸ்பெஷல்!
வழக்கம் போல நல்லா இருக்கு அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பார்க்கவே கலர்புல்லா இருக்குக்கா....
ஜலீ சூப்பர். பார்த்ததும் உடனே செய்து சாப்பிடனும் போல் இருக்கு. இங்கு எல்லா கடைகளிலும் கிடைக்காது ட்ரை செய்கிறேன்.
என் குட்டிஸுக்கு ரொம்ப பிடிக்கும். 2 வருடங்களுக்கு முன் ஒரு பாகிஸ்தானி தோழி செய்து குடுத்தாங்க ரொம்ப நன்றாக இருந்தது.
Colorful! Cheerful! :-)
கலர்ஃபுல் கடல்பாசியை இப்படி கலர்கலராக குறிப்பு கொடுத்து அசத்துகின்றீர்களா?அட்டகாசம் பண்ணுகின்றீர்களா ஜலி..தூள்...
பார்க்கவே கலர்ஃபுல்லா அழகா இருக்குதுங்க!!!சைனா கிராஸ் நான் வாங்குனதே இல்ல. அடுத்த முறை வாங்கி ட்ரை செய்கிறேன்.
பார்க்கும்பொழுது கலர்புல்லாக இருக்கின்றது...சூப்பர்ப்...
Dear jaleela
I am silent reader of ur blog.. i have agar-agar and i dont know how to use that. U gave lot of recipes.. thank u so much..
Gowri
'கடல் பாசி' ஒரு விருந்து ஒன்றில் சுவைக்க நேர்ந்தது. அதை பற்றி தெரியாத எனக்கு தங்களது பதிவு தெரிந்துக் கொள்ள உதவியது.
கூடவே செய்முறையும் தந்துள்ளீர்கள் நன்று.
அன்புடன்
தோழன் மபா
Wow, thanks for this recipe, I have a box of china grass/our kadal paasi lying in my pantry. SImply adore ur recipes:):)
சூப்பர் ஜலீலா :-)
சின்ன வயதில் நாங்கள் இதை செய்து நண்பர்களுக்கு விற்பனை செய்வோம் :-).
மறந்து போன ஒரு விசையத்தை மீண்டும் நினைவில் கொண்டு வந்தமைக்கு மீண்டும் என் நன்றி.
தொடர்ந்து கலக்குங்க உங்க அட்டகாசத்த :-).
என்னுடைய ஃபேவரைட் கடல்பாசியும் , வட்டலாப்பமும் இனைபிரியாத நன்பர்கள் ஊரில் இருக்கும் போது அடிக்கடி செய்ய சொல்லி ருசிப்பதுண்டு.
என்னதான் நாம செய்தாலும் வீட்டு பெண்களின் கை ருசி போல வருவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.
மீண்டும் நோன்பு நேரத்தை நினைவு படுத்திட்டீங்க....
கடல்பாசி என்றதும் எனக்கு நோன்பு காலங்கள்தான் நினைவுக்கு வருது...
வெயிலுக்கேற்ற நல்ல உணவு நன்றி அக்கா...
ஜலீலாக்கா அப்ப தொடக்கம் நானும் இதைத் தேடித்திரிகிறேன் என் கண்ணுக்கு அகப்படுவதாகவே இல்லை:(. இனி சைனீஷ் கடைக்கும்போகும்போது மறக்காமல் கேட்கவேண்டும்.
ஜெய்லானி said...
என்னுடைய ஃபேவரைட் கடல்பாசியும் , வட்டலாப்பமும் இனைபிரியாத நன்பர்கள் ஊரில் இருக்கும் போது அடிக்கடி செய்ய சொல்லி ருசிப்பதுண்டு./// ஜலீலாக்கா ஜெய்..லானியைக் கவலைப்படவாணாம் எனச் சொல்லுங்கோ, வேணுமெண்டால் இங்கு எங்கட கடலில் நிறையப்பாசி இருக்கு நான் இலவசமாக அனுப்பிவைக்கிறேன்....
எனக்கு சைனா கிராஸ் ரொம்ப பிடிக்கும்.ஆனால் இப்போ புது வீடு மாறி இருப்பதால் இங்கு எங்கு கிடைக்கும் என்று தெரியவில்லை.உங்கள் தலைப்பிற்கு ஏற்றாற்போல் டிஷ் கலர்புல்லா இருக்கு.
அன்பு ஜலீலா உங்க விருதுக்கு நன்றி ரொம்ப சந்தோஷமாக இருக்கு...என் பலாக் எர்ரர் வருதுன்னு சொல்லியிருக்கீங்க...சரி பார்க்கிறேன்.. நானும் தவறாமல் உங்க பதிவுகளை படித்து வருகிறேன் ஆனால் பின்னுட்டமிடுவதில்லை...சில சிக்கன் வெரைட்டீஸ் ட்ரை பண்ணியும் இருக்கேன்.. நான் வெஸ் பிரியரான என் மகன் உங்க சமையல் பகுதியின் ரசிகன் பல நாள் இங்க சிலைட் ஷோவில் வரும் உணவு வகைகளை பார்த்து பெருமூச்சு விடுவான்... உங்க அன்புக்கும் விருதுக்கும் நன்றிடா
@@@athira--//
ஜலீலாக்கா அப்ப தொடக்கம் நானும் இதைத் தேடித்திரிகிறேன் என் கண்ணுக்கு அகப்படுவதாகவே இல்லை:(. //
அட பூஸாருக்கு கண்ணு தெரியலயா ?...இக்..கி..க்கி...க்கீஈஈஈஈஈஈஈஈ. பரவாயில்லை உண்மைய ஒத்துக்கிட்டதுக்கு பராட்டனும்.
//இனி சைனீஷ் கடைக்கும்போகும்போது மறக்காமல் கேட்கவேண்டும் //
அகர் அகர் மட்டும் கேளுங்க . இல்லாட்டி மண்புழு , வெள்ளை அட்டை , நாக்கு பூச்சி போட்டு செஞ்சது கிடைக்கும் வித்தியாசம் தெரியாதூஊஊஊஊஊ.
ஏன்னா இப்பவே கண்ணு கானல. அப்புறம் ஜலீலாக்கிட்ட சொல்லி வருத்தப் படகூடாது .
//ஜலீலாக்கா ஜெய்..லானியைக் கவலைப்படவாணாம் எனச் சொல்லுங்கோ, வேணுமெண்டால் இங்கு எங்கட கடலில் நிறையப்பாசி இருக்கு நான் இலவசமாக அனுப்பிவைக்கிறேன்....//
கொஞ்சம் போதும் அதிகம் வேனாம் ஒரு கண்டெய்னர் மட்டும். ஆமா எப்ப வரும் ?
சகோ. ஜமால் ஆமாம் நிறைய பேர் இந்த் கடல் பாசியை நோன்பு காலங்களில் மட்டும் சாப்பிடுவர்கள்.
அதான் வெயில் காலங்களிலும் சாப்பிடலாம் என்பதை தெரிய படுத்தவே இந்த பதிவு.
உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றிங்கோ
எல். கே.. இது வெஜ் உண்வு தான்
அநன்யா செய்து பார்த்து சொல்லுங்கள்
சசிகுமார் உங்கள் தொடர் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
நேரமின்மையால் உங்கள் பக்கம் தொடர்ந்து வர முடியல முடிந்த போது வ்ருகிறேன்
ஆம்மா உங்கள் ஷிவானிக்கும் செய்து கொடுங்கல், உள்ளே போவதே தெரியாது,
ஆமாம் விஜி இது வெஜ் உண்வு நான் கொடுத்துள்ள எல்லா முறையிலும் செய்து பாருங்கள்,
நன்றி சித்ரா தொடர்ந்து ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி
ஆமாம் ஸாதிகா அக்கா செய்ததும் போட்டோ எடுக்க கூட யாருக்கும் பொருக்கல், அபப்டி ஒரு அட்ராக்ஷன். உடனே சாப்பிட,
சாப்பிடாதவர்களையும் சாப்பிட வைக்கும்.
திவ்ய சுகந்தி கண்டிப்பா வாஙகி முயற்சி செய்து எபப்டி இருந்தது என்று வந்து சொல்லுங்கள்
கீதா ஆச்சல் எல்லோரும் கலர் ஃபுல்லுன்னு சொல்ல சொல்ல எனக்கு மறுபடியும் இபப் உடனே செய்ய்யனும் போல இருக்கு.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
குட்டி சைலண்ட் ரீடரா இருந்தும் இந்த கலர் ஃபுல்லை பார்த்ததும் வந்து பின்னூட்டமிட்டமைக்கு ரொம்ப சந்தோஷம்.
தமிழன் வீதி, உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி+சந்தோஷம்.
malar gandhi thank you very much for your valuable comment.
சிங்கக்குட்டி ரொமப் நாள் கழித்து கமெண்ட் போட்டு இருக்கீங்க.
ஓ நீஙக் இதை தொழிலாகவே செய்தீர்களா?
பழச நினைக்கும் போது என்றும் இனிமை தான்
ஜெய்லானி, கடல் பாசி, முட்டை வட்லாப்பம், எல்லாம் இஸ்லாமிய இல்ல ஸ்பெஷல் உணவாச்சே.
உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி
சீமான் கனி தவறாமல் தொடர்ந்து வந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி.
நேரமின்மையால் சில பேர் பதிவுகளுக்கு தொடர்ந்து வரமுடியல, முடிந்த போது வருகிறேன்.
//ஜலீலாக்கா ஜெய்..லானியைக் கவலைப்படவாணாம் எனச் சொல்லுங்கோ, வேணுமெண்டால் இங்கு எங்கட கடலில் நிறையப்பாசி இருக்கு நான் இலவசமாக அனுப்பிவைக்கிறேன்....//
அதிரா ஜெய்லானிக்கு ஒரு கண்டெயினரா, அப்ப மங்க் வேற பங்கு கேட்குமே.
எதுக்கும் இரண்டு கண்டெயினர் அனுப்புங்க.
அம்மு மது கிடைக்கும் போது செய்து பாருங்கள், குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
அன்பு ஜலீலா உங்க விருதுக்கு நன்றி ரொம்ப சந்தோஷமாக இருக்கு...என் பலாக் எர்ரர் வருதுன்னு சொல்லியிருக்கீங்க...சரி பார்க்கிறேன்.. நானும் தவறாமல் உங்க பதிவுகளை படித்து வருகிறேன் ஆனால் பின்னுட்டமிடுவதில்லை...சில சிக்கன் வெரைட்டீஸ் ட்ரை பண்ணியும் இருக்கேன்.. நான் வெஸ் பிரியரான என் மகன் உங்க சமையல் பகுதியின் ரசிகன் பல நாள் இங்க சிலைட் ஷோவில் வரும் உணவு வகைகளை பார்த்து பெருமூச்சு விடுவான்... உங்க அன்புக்கும் விருதுக்கும் நன்றிடா//
தமிழரசி வருகை தந்தமைக்கு மிக்க நன்றி . எனக்கும் அப்ப்டி தான் சில பதிவுகளை படிக்கிறேன் ஆனால் பின்னூட்டமிட நேரமில்லை, முடிந்த போது வாங்க.
ஜலீலாக்கா,நான் ஒருமுறை அகர்-அகர் பவுடர் வாங்கினேன்.அதை தண்ணீரில் கரைத்து கொதிக்க வைத்தப்போ,அந்த ஸ்மெல் புடிக்கல. அப்படியே தூக்கிப் போட்டேன். :(
உங்களோட கலர்புல் கடல் பாசி சூப்பரா இருக்கு!
மகி ஏன் ஸ்மெல் வந்தது,
பழையதான்னு பாருங்கள்.
வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.
கடல் பாசி எனக்கு விருப்பமானதொன்று. அம்மாவுக்கு செய்யத் தெரியாது. சமையல் ஐயா செய்வார். ரொம்ப நன்றாக இருக்கும். ஒரு சட்டியில் கொடுத்தாலும் சாப்பிட்டு முடித்து விடுவேன். ஹி ஹி. ஆனால் இனிப்பு அளவாக/குறைவாக போட வேண்டும்.
அகர் அகர் நல்ல கலர் கலர்
Really very colourful and looks very yummy. Thank you for linking it with Any One Can Cook.
how festive and delicious, thanks for sending it to my event
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா