Sunday, May 23, 2010

எதுவும் நம் கையில் இல்லை

நேற்று நடந்த விமான விபத்து ரொம்பவே மனதை பாதித்து விட்டது.எனக்கு மட்டும் அல்ல இந்த செய்திய கேட்ட அனைவருக்கும். ஒரு அதிர்ச்சி தான்.
நேற்று முழுவது ஒன்றுமே ஓடல,மனசும் சரியில்லை.
இதில் கேரி போரில் வேலை பார்க்கும்,ஒரு கவுண்டர் சேல்ஸ்மேன் லீவே தர மாட்டேன் என்று சொன்ன மேலாளரிடம் ரொம்ப வாதாடி லீவு கேட்டு ஊருக்கு சென்றாராம், இப்ப அவரும் இல்லை.
புஜேரா ஹாஸ்பிட்டலில் உள்ள டாக்டர் தம்பதிகள் அவர்களும் இந்த விபத்தில். என்னத்த சொல்வது. ஹர்ஷினி இங்கு எங்க பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் , பெண்கள் படித்த பெண்ணாம்.இதை பற்றி சுந்தரா போட்டு இருகிறார்கள். இங்கு சென்று படிக்கவும். இன்னும் பல நம் மக்கள்.
நேற்று இரவு ஏர்போட்டில் காத்திருந்த போது காலை நடந்த விபத்தில் மடிந்தவர்க்ளை பற்றியே மனம் நினைத்தது. ரொம்ப வேதனையா இருந்தது. என்னால் பதிவு போட கூட முடியல.

நேற்று காலை தான் என் பையனும் ஊரிலிருந்து கிளம்பினான், இரவு அவன் வந்து சேரும் வரை மனம் படப்படப்பாவே இருந்தது.பையன் நல்ல படியாக வந்து சேர்ந்தான்.

இன்று நாம் இருக்கிறோம், நாளை என்ன நடக்கபோகுது என்பதை இறைவன் தான் அறிவான், எதுவும் நம் கையில் இல்லை, அவன் அன்று ஒரு அனுவும் அசையாது.

என்றும் பிரத்தனையோடு ஏக வல்ல இறைவனை வேண்டுவோம்.
என் பசங்க,வெளியில் கிளம்பும் போது அடிக்கடி சொல்வேன்,
அல்லாவுடைய காவல் சொல்லிட்டுபோமா, ஆயர்த்தில் குர்ஸி ஓதிட்டு போமா என்பேன்/
இந்த துஆவை அடிக்கடி ஓதிக்கொள்ளுங்கள்/
"யா அல்லாஹ்!உய‌ர‌த்திலிருந்து கீழே விழுந்தோ, இடிந்து விழுந்தோ, மூழ்கியோ, எரிந்தோ இற‌ப்ப‌தை விட்டும், ம‌ர‌ண‌ நேர‌த்தில் ஷைத்தான் என்னைத் தீண்டுவ‌தை விட்டும் உன்னுடைய‌ பாதையில் (போர் செய்யும் போது) புற‌முதுகு காட்டி ஓடி இற‌ப‌ப்தை விட்டும் நிச்ச‌ய‌மாக‌ நான் உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்."

19 கருத்துகள்:

எல் கே said...

அனைவரின் மன நிலைமையும் இதுதான் . உங்கள் மகன் நல்லபடியாக வந்து சேர்ந்ததில் மகிழ்ச்சி. இப்பொழுதெல்லாம் வீட்டை விட்டு கிளம்பினால் திரும்ப வீட்டுக்கு பத்திரமாக வருவது அந்த இறைவன் கையிலேதான் உள்ளது.

Anonymous said...

//அனைவரின் மன நிலைமையும் இதுதான் . உங்கள் மகன் நல்லபடியாக வந்து சேர்ந்ததில் மகிழ்ச்சி. இப்பொழுதெல்லாம் வீட்டை விட்டு கிளம்பினால் திரும்ப வீட்டுக்கு பத்திரமாக வருவது அந்த இறைவன் கையிலேதான் உள்ளது.//

Very True. =((

Chitra said...

Our life is in the Hands of our Creator. True.

Starjan (ஸ்டார்ஜன்) said...

மிகுந்த வருத்தத்தை தந்த சம்பவம். நேற்று செய்திக் கேட்டு அதிர்ச்சியானது.., ஒரு வேலையும் ஓடவில்லை. இப்ப வரைக்கும் அதே நினைப்பாகவே இருக்கிறது. என்ன செய்ய இதுமாதிரி விபத்துக்கள் ஏற்படாமல் அல்லாஹ் காப்பாற்றுவானாக.. இறந்தவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் சொர்க்கத்தை கொடுப்பானாக.. அவர்களின் குடும்பங்களின் இன்னல்களை காத்துஅருள்வானாக... ஆமீன்.

Prathap Kumar S. said...

வேதனையான நிகழ்வு... என்னத்த சொல்ல...

Asiya Omar said...

ஒருவருக்கொருவர் பகிர்ந்து ஆறுதல் படுவதை தவிர வேறு வழி தெரியவில்லை. மகன் விடுமுறையில் வந்தது குறித்து மகிழ்ச்சி.

ஜெய்லானி said...

:-((((((((

பருப்பு (a) Phantom Mohan said...

அக்கா இது ரொம்ப கொடுமையான ஒரு நிகழ்வு!

ஆனா நம்ம இன்னொன்னும் யோசிக்கணும், இது வரை இந்தியாவில் நடந்த மிகக்கொடுராமான விமான விபத்துக்கள் எட்டு, அதிலே air india நாலு, இந்தியன் ஏர்லைன்ஸ் ரெண்டு...ஒரு நாளைக்கு எத்தனையோ விமானம் இந்தியாவுக்கு வந்திட்டு போகுது, விபத்து நடந்தது என்னவோ நம்ம ஏர்லைன்ஸ் ல மட்டும் தான்....யார குத்தம் சொல்ல?

சுந்தரா said...

ஏர் இந்தியாவில் முன்கூட்டியே டிக்கெட் எடுத்த பலர் அதை ரிட்டர்ன் பண்ணப்போவதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், நடந்துமுடிந்த துயரத்துக்கு யாரைக் குறைசொல்ல? மனசு ஆறவேமாட்டேங்குது.

நீங்க சொன்னதுபோல எதுவும் நம் கையில் இல்லை :(

சீமான்கனி said...

வேதனையாகத்தான் அக்கா இருக்கு அவர்களுக்காக துவாக்கள் கேட்பதைதவிர என்ன செய்ய முடியும் எனக்கு பிடிட்த ஒரு அழகான வாக்கியம் நினைவுக்கு வருது ''இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது; இறைவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது.''......

:(

Anisha Yunus said...

கஷ்டமாத்தான்க்கா இருக்கு. சில நேரம் இதெல்லாம் பார்த்து பார்த்து மனசு மறத்துப் போச்சோன்னும் தோணுது. ஊருல அம்மா, அப்பா இந்த வருஷம் ஹஜ்ஜுக்குன்னு முடிவு பண்ணிட்டாங்க. ஒரு பக்கம் சந்தொஷம்னாலும் இன்னொரு பக்கம் பயம் குடலை வாட்டுது. நல்லபடியா திரும்பி வரணுமேன்னு. து'ஆ பண்ணுங்கக்கா...வேற என்ன சொல்ல. அல்லாஹ் போதுமானவன்.

நட்புடன் ஜமால் said...

ஆமாம் எதுவும் நம் கையில் இல்லை,

ரொம்பவும் மனதை உலுக்கிய செய்தி அது

அவர்களை இழந்து தவிப்பவர்களுக்காக பிரார்த்திப்போம் ...

Vikis Kitchen said...

I could not control myself yesterday morning when I read the news. Feel so sorry for the affected people. so many hard working people...so many dreams, so much hope, lot of depending families.....what to say? True words...we are all controlled by God and nothing else.

ஹுஸைனம்மா said...

எதுவுமே நம் கையில் இல்லை. இறைவன் காக்கட்டும்.

நாஸியா said...

அல்ஹம்துலில்லாஹ்.. மகனார் வந்துட்டாரா.. :) எப்படி இருக்காரு?
---


இன்னும் ஒரு மாச‌த்தில் ப‌ய‌ன‌ம் என்றிருக்கும்போது இது போன்ற‌ நிக‌ழ்வுக‌ள் க‌வலைய‌ளிக்கின்ற‌ன‌. இருந்தாலும் இறைவ‌ன் நாடினால் தான் எதுவுமே ந‌ட‌க்கும்.. ந‌ல்ல‌தும், கெட்ட‌தும்.

தவக்கல்த்து அலல்லாஹி.

SUFFIX said...

சித்ரா கூறியது போல், நமது உயிர் நம்மை படைத்தவன் வசம், வாழும் வரை நல்லபடியாக வாழவேண்டும், அவரவருக்குரிய நாள் வரும்போது சென்றே ஆக வேண்டும். உறவுகளை இழந்தோர் குடும்பத்திற்கு இறைவன் நிம்மதியை வழங்கிடுவானாக.

சிநேகிதன் அக்பர் said...

வருந்ததக்க நிகழ்வு. நாளை நம் கையில் இல்லை. இறைவனின் நாட்டப்படி நடக்கும்.

அப்துல்மாலிக் said...

இறந்த அனைவரின் குடும்பத்திற்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள், அனைவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இறப்பு
-எப்ப வரும்?
-எங்க வரும்?
-எப்படி வரும்?
தெரியாது.

ஆனால், இதுபோல்,
உடல் சிதவுற்று,
கோரமாக வரவேண்டாம்.
இறைவன் காக்கட்டும்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா