தேவையான பொருட்கள்
பிரெட் பாக்கெட் – 1 சிறிய பாக்கெட்
பால் – 4 டம்ளர்
நெய் – 50 கிராம்
டால்டா – பிரெட் பொரிக்க தேவையான அளவு
பாதம் – 50 கிராம்
முந்திரி – 50 கிராம்
கிஸ்மிஸ் – சிறிது
ஏலக்காய் – 2
ரெட் கலர் பொடி – சிறிது
ஸ்வீட்ன கண்டென்ஸ்ட் மில்க் – சிறிய டின்
சர்க்கரை – 200 கிராம்
செய்முறை
பாலில் ஏலம் சேர்த்து கால் பாகம் வற்றும் அளவிற்கு காய்ச்சவும்
பிரெட்டை டால்டாவில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
எல்லா பிரெட்டையும் பொரித்து எடுக்கவும்
பாலில் பொரித்து வைத்துள்ள பிரெட்டை உதிர்த்து சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி பிறகு சர்க்கரையையும் போட்டு நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.
கடைசியாக ஸ்வீட்ன் கண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கவும்
கடைசியாக முந்திரியை பொடியாக அரிந்து , ரெயிஸின்ஸுடன் நெயில் வறுத்து சேர்க்கவும்
குறிப்பு:
கொஞ்சம் தளர்வாக கிளறினால் தான் நல்ல இருக்கும் ரொம்ப ரிச் ஸ்வீட்.
இன்னும் ஒன்று பாதத்தை முதலே பாலில் சேர்த்து கிளறுவதை விட கடைசியாக சேர்த்து கிளறினாலும் நரு நருன்னு நல்ல இருக்கும்.
டிஸ்கி: இது பிரியாணி நாஸியா செய்ய சொல்லி கேட்டாங்க.
Tweet | ||||||
49 கருத்துகள்:
ஹை(யா)தை டபுள்கா
நேற்று தான் சாப்பிட்டேன் நண்பர் வீட்டில்
எனக்கு மிகவும் பிடிக்கும்
:)
எங்க ஊருல விருந்துக்கு பிரியாணி செஞ்சா, கூடவே இந்த ஹல்வாவும் கொடுப்பாங்க, இது ரெண்டையும் சாப்பிடதும் ஒரு தூக்கம் வரும் பாருங்க.....:)
ஹல்வா போச்சே ஹல்வா போச்சே!! :((
இன்ஷா அல்லாஹ் செஞ்சு பார்க்கனும்
பார்க்கும் போதே நாக்கு ஊறுது அக்கா... ஸ்வீட் னா எனக்கு உயிரு...அதுவும் லட்டு, பூந்தின்னு சொன்னா போதும்....என் குடும்பத்தையே டைவர்ஸ் பண்ணிட்டு, பின்னாடியே போய்டுவேன்...
இந்த மண்ணுப் பய ஊருல பூந்தி கிடைக்க மாட்டேங்குது அக்கா...கொஞ்சம் ஈசியா, சட்டு புட்டுன்னு பூந்தி செய்றது எப்டின்னு சொல்லி குடுங்க...
ப்ரெட் ஹல்வா ரிச்சாக அருமையாக இருக்கு.
பிரட் அல்வா பார்க்கவே அழகாயிருக்கு.. சாப்பிட்டா ரொம்ப நல்லாயிருக்கும்போல... முயற்சி செய்வோம்..
ப்ரெட் ஹல்வா அருமையாக இருக்குக்கா...
ஒரு ஹோட்டலில் பிரியாணி சாப்பிடும் முன் இதை கொடுத்தார்கள். இப்போதுதான் அதைப்பற்றி தெரிந்தது.நல்ல பதிவு அருமை(சகோதரிக்கு - இங்கு அதிகாலை 6 மணியிலிருந்து 10 மணிவரை கரண்ட் கட் செய்துவிடுவதால் பதிவிற்கு வரும் நேரம் குறைந்துவிட்டது.தவறாக நினைக்கவேண்டாம்.நேரம் கிடைக்கும் சமயம் அவசியம் வருகின்றேன்)வாழ்க வளமுடன்,வேலன்.
அக்கா கொஞ்ச நாளா ப்ளாக் வர முடியலே.... இப்போ உங்க ப்ளாக்யை ஒரு ரவுண்டு அடிக்கிறேன்...
பாக்கும் போதே சாப்பிடனும்னு தோணுது,,,என் அம்மாவிடம் செய்ய சொல்லணும்......
வாங்க போனி பேஸ் வருகைக்கு மிக்க நன்றி,+ சந்தோஷம்/
என்ன ரவுண்டு அடிக்க போறிஙக்ளா? பார்த்து மயக்கம் வந்துட போகுது.
delicious and lovely halwa..my favourite too..
லேட்டா செஞ்சாலும் லேட்டஸ்ட்டா இருக்கு!!
ஷார்ஜாவில ஒரே ஒரு ஹோட்டலில் மட்டுமே கிடைத்து சாப்பிட்டது அதுவும் வாரம் ஒரு தடவை மட்டுமே கிடைக்கும். இதுக்காகவே அங்கே போவதுண்டு.
உண்மையிலேயே அதன் டேஸ்டே தனி..
ரெஸிபி கிடைத்து விட்டது . இனி டெய்லி கொண்டாட்டம்தான்.
ஈஸியா இருக்கு. டாங்ஸுங்கோ!!!!
:-))))))))))))))))))))))))))))
@@@ பருப்பு The Great said...
// இந்த மண்ணுப் பய ஊருல பூந்தி கிடைக்க மாட்டேங்குது அக்கா...கொஞ்சம் ஈசியா, சட்டு புட்டுன்னு பூந்தி செய்றது எப்டின்னு சொல்லி குடுங்க...//
லட்டு செஞ்சிட்டு சுத்தியலால உடைச்சா அதுப்பேரு பூந்தி ..ஹி..ஹி..
ஜலி கா...எப்படிக்கா இப்டி புதுசு புதுசா போட்டு தாக்குறீங்க...சூப்பர்...நாக்குல தண்ணி வருது....ஹும்மம்ம்ம்ம்.....
சூப்பர் ஜலீலாக்கா... எப்படியும் செய்து பார்த்திடவேண்டும்.
Bread halwa super yummy! first time here,lot of yummy recipes.following u.
எனக்கு ரொம்ப புடிச்ச ஐடம்
ஜலீலா!! பிரட் ஹல்வா செய்முறை மிகவும் நன்றாக இருக்கிறது.
சூப்பரா இருக்கு ஜலீலாக்கா!
ஆம்பூர் மட்டன் பிரியாணியை அடுத்து அதற்கு மேச்சாக பிரட் அல்வாவா?அசத்துங்கள் ஜலி.
வழக்கம் போல நல்லா இருக்கு அக்கா ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாவ்... சூப்பர் ... வரப்போற திருமண நாளுக்கு இது தான் எங்க வீட்டு ஸ்வீட்... சிம்பிள் அண்ட் nice . நன்றிங்க ஜலீலா பகிர்ந்து கொண்டதுக்கு
PLZ HELP ME MAM,MY DAUGHTER IS 0NE YEAR OLD.DAILY MOTION KASTAM ILLAMA PORATHUKU TIPS SOLLUNGA PLZ.ROMBA KASTAP PADURA.ORU NAAL VITU OR 2 OR 3 DAYS KALICHU APDI THAN SHE IS GOING.PLZ PLZ HELP ME MAM.
ஆமினா கொஞ்சம் வெயிட் பண்ணுஙக்ள் பிஸியா இருப்பதால் பதில் போட முடியல.
பதிவில் போடுகிறேன்/
நட்புடன் ஜமால், டபுள் கா மீட்டா ரொமப் நல்ல இருக்கும், இதை தூளாகி கிளறனும் , அது பொரித்த பிரெட்டில் எல்லாத்தையும் ஊற்றனும் , கருத்து தெரிவித்தமைக்கு நன்றி
//எங்க ஊருல விருந்துக்கு பிரியாணி செஞ்சா, கூடவே இந்த ஹல்வாவும் கொடுப்பாங்க, இது ரெண்டையும் சாப்பிடதும் ஒரு தூக்கம் வரும் பாருங்க//.
பார்த்து ஷபி இத பார்த்துட்டு ஆபிஸுல தூங்கிடாதீஙக்
வருகைக்கு மிக்க நன்றி.
நாஸியா என்ன செய்வது ரிஸ்கு அல்லா எப்ப வைத்துள்ளானோ அப்ப தான் கிடைக்கும்.
.//பார்க்கும் போதே நாக்கு ஊறுது அக்கா... ஸ்வீட் னா எனக்கு உயிரு...அதுவும் லட்டு, பூந்தின்னு சொன்னா போதும்....என் குடும்பத்தையே டைவர்ஸ் பண்ணிட்டு, பின்னாடியே போய்டுவேன்.//
இது ரொம்ப ஓவரா இல்ல
பூந்தி தானே போட்டுடுவோம்
தொடர் வருகை தந்து கமண்ட் இடுவதற்கு மிக்க நன்றி ஆசியா
அகமது இர்ஷாத் செய்து சாப்பிட்டு பார்த்து சொல்லுஙக்
நன்றி மேனகா
வருகை தந்தமைக்கு மிக்க நன்றி வேலன் சார். பரவாயில்லை முடிந்த போது வாங்க
நீத்து மிக்க ந்னறீ
சைவ கொத்து பரோட்டா உங்கள் தொடர் வருகைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க ந்ன்றி
ஜெய்லானி அப்ப தினம் பிரெட் ஹல்வவா.
பார்த்து சுகர் உங்கள பிடிச்சிக்க போகுது,
சீமான் தவறாமல் வந்து பின்னூட்டம் அளித்து உற்சாக ப்படுத்துவதற்கு மிக்க நன்றி
அதிரா எப்படியும் இல்லை எப்படியாவது செய்து பாருங்கள்
என்ன பூஸார் ரொமப் பிஸி போல
பிரெம லதா உங்கல் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி
நன்றி அமைச்சரே,
புச்ச் அயிட்டமா> அப்ப தங்கமணி கிட்ட சொல்லிடுங்கொ. செய்து கொடுப்பாங்க
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி
நன்றி மகி
ஸாதிகாஅக்கா ஆமாம் பிரியாணி கூட வே போட்டா பெரிய பதிவா போய் விடும் ஆகையால் அடுத்த பதிவு உடனே போட்டுட்டேன்.
சசிகுமார் தொடர்வருகை தந்து கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி
அப்பாவி தங்கமணி உஙக்ள் திருமண நாளுக்கு முன்பே வாழ்த்தி விடுகிரேன்.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
வருகைக்கு மிக்க நன்றி
ஜலீலாக்கா,நானும் என் கணவருக்கு ஹல்வா கொடுத்துட்டேன்..ஹி,ஹி!
ரொம்ப நல்லா இருந்தது ஹல்வா..நன்றி!
மகி ரொம்ப சந்தோஷம் நீங்க செய்து பார்த்து வந்து சொன்னதற்கு. அப்ப உஙக்ள் கணவருக்கு ஹல்வா கொடுத்தாச்சு.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா