Saturday, December 7, 2013

சங்கரா மீன் டிக்கா ஃப்ரை - Red Snapper Tikka Fry






மீன் வகைகளிலேயே எனக்கு ரொம்ப பிடித்த மீன் இந்த சங்கரா மீன், ஆனால் முள் பார்த்து சாப்பிடனும்.பள்ளி நாட்களில் லன்ச் பாக்ஸ்க்கு காலை டிபனே தான் பெரும்பாலும் கொண்டு செல்வோம். ஆனால் மாலை வரும் போது என் அம்மா வாரம் ஒரு முறை எனக்கு பிடித்த இந்த சங்கரா மீனை வாங்கி சுட சுட பொரித்து கொடுத்து , அந்த சால்னாவாவும் பொரிச்ச மீனும் வைத்து மாலை வந்து சாப்பிட ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா அப்படி இருக்கும். நான் கொஞ்சம் காரம் எல்லாம் குறைவாக தான் செய்வேன். ஆனால் எங்கம்மா சும்மா சுல்லுன்னு காரம் சாரமாக , உப்பு உரப்பா, புளிப்பு சுவை நாவில் ஸ்ஸ்ஸ் அப்படி தட்டும் அப்படி செய்வார்கள். ஏன்ன்னா இப்படி செய்தால் தான் எங்க டாடிக்கு பிடிக்கும்.எங்க டாடி இத சாப்பிட்டு முடித்ததும் வேர்கடலை உருண்டை சாப்பிடுவது வழக்கம். நாங்களும் சாப்பிடுவோம் ,இன்னும் இப்ப கூட எனக்கு மீன் சாப்பிட்டால் கண்டிப்பாக வேர்கடலை பர்பியோ அல்லது உருண்டையோ சாப்பிடும் பழக்கம் எனக்கும் உண்டு.

தேவையானவை

சங்கரா மீன் ‍ அரை கிலோ
சிவப்பு மிளகாய் தூள் ‍ 1 தேக்கரண்டி
ஷான் சிக்கன் டிக்கா மசாலா ‍ ஒரு மேசை கரண்டி
லெமன் சாறு  ‍ ‍ஒரு தேக்கரண்டி
தயிர் ‍ ஒரு தேக்கரண்டி
கார்ன் ப்ளார் பவுடர் ‍ ஒரு தேக்கரண்டி
உப்பு ‍ தேவைக்கு
பொடியாக நறுக்கிய கொத்து மல்லி தழை சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் ‍ ஓன்னறை தேக்கரண்டி

அலங்கரிக்க‌
கொத்துமல்லி தழை

செய்முறை
சங்கரா மீனை கழுவி தலையை ஆய்ந்து எடுக்காமல் வயிற்று பகுதியில் உள்ள அழுக்கை மட்டும் கத்தி கொண்டு கீறி எடுக்கவும்.

சைடில் உள்ள முள், மேலே உள்ள சராம்பல் எல்லாம் கத்திரி கொண்டு வெட்டி எடுக்கவும்.

சைடில் நன்கு ஆழமாக இருபுறமும் கீறி விடவும்.அப்போது தான் மசாலா உள்ளே வரை செல்லும்.



சங்காரா மீன் டிக்கா ஃப்ரை - Red Snapper Tikka Fry

மீனை மஞ்சள் தூள் போட்டு நன்கு பிரட்டி 5 நிமிடம் ஊறவைத்து நன்கு கழுவி எடுக்கவும்.

மீனுக்கு போட வேண்டிய மசாலாக்களை ஒரு சின்ன கிண்ணத்தில் சிறிது தண்ணீர்விட்டு கலக்கி வைக்கவும்.

மீனை நன்கு கழுவி தண்ணீரை வடித்து.  
கலக்கிய மசாலாவை மீனுடன் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கி மீனை போட்டு அதன் மேல் ஒரு முடியை போட்டு மூடி நன்கு குலுக்கவும். மசாலா மீனின் எல்லா பகுதியிலும் ஒரு சேர சேர்ந்து இருக்கும். மசாலாக்கள் போட்டு பிரட்டியதும் ஒரு மணி நேரம் ஊறவிடவும்.

நான் ஸ்டிக் பேனில் எண்ணையை ஊற்றி சூடு படுத்தி மீனை போட்டு நன்கு பொன்னிறமாக கருகாமல் பொரியவிடவும்.
சூப்பரான சுவையான சங்கரா மீன் ஃப்ரை ரெடி,

சைட் டிஸ்ஸாகவும் சாப்பிடலாம். ஸ்டாட்டராகவும் சாப்பிடலாம்.


https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

பசிக்குது சாமியோவ்...! ஹிஹி... நன்றி சகோதரி...

'பரிவை' சே.குமார் said...

ஆஹா...

மசாலா புதுவகையா இருக்கு...

பார்க்கயிலயே பசிக்குது அக்கா.

Asiya Omar said...

என்னோட ஃபேவரைட். சூப்பர்.

எம் அப்துல் காதர் said...

ம்ம்ம்... இன்னைக்கு அந்த மீனை வாங்க வச்சிட்டீங்க!!!

shameeskitchen said...

பார்த்ததுமே ஆப்பிடனும் போல இருக்கு...சூப்பர் ...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா