King Fish 65 & Prawn 65
சிம்பிள் அன்ட் ஈசி
தேவையான பொருட்கள்
கிங் பிஷ் அரை கிலோ
பூண்டு பேஸ்ட் ஓன்னறை தேக்கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் ஒரு மேசை கரண்டி
லெமன் ஜூஸ் ஒரு மேசை கரண்டி
கார்ன் ப்ளார் பவுடர் ஒரு மேசைகரண்டி
உப்பு
எண்ணை பொரிக்க தேவையான அளவு
செய்முறை
கிங் ஃபிஷ் ஐ நன்கு சுத்தம் செய்து அழுக்குகளை களைந்து அதில் சிறிது வினிகர் அல்லது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவவும்.
பிறகு மேலே குறிப்பிட்டுள்ள மசாலாக்களை ஒரு சிறிய கிண்ணத்தில் நன்கு கலக்கி மீனில் நன்றாக தடவவும்.
சிறிது நேரம் ஊறவைத்து ஒரு பானில் எண்ணை ஊற்றி சூடானதும் தீயின் தனலை மீடியமாக வைத்து கருகாமல் பொரித்து எடுக்கவும்.
பிளெயின் ரைஸ்,சப்பாத்தி ரொட்டி , வெரைட்டி ரைஸ் போன்றவைகளுக்கு ஏற்ற சைட் டிஷ்.
இதில் இதே மசாலா சேர்த்து இறாலிலும் செய்துள்ளேன்.
டிப்ஸ்: மீனை பொரித்ததும் அந்த எண்ணையை சால்னாவில் வில் ஊற்றினால் ருசி அதிகமாக இருக்கும். அப்ப எண்ணை அதிகமாகி விடாதா என்று கேட்பீர்கள், தாளிக்கும் போது கொஞ்சமாக எண்ணை விட்டு தாளிக்கனும். எண்ணை கரிந்து இருந்தால் தெளிவாக கருகாமல் இருக்கும் எண்ணையை மட்டும் ஊற்றனும்.
மீன் பொரித்ததும் எண்ணையை வடிய விட கொஞ்சம் சாதம் ப்ளேட்டில் வைத்து அதில் வடிய விடலாம், சூடாக பொரித்து ம்மீனை வைக்கும் போது சில நேரம் டிஸு பேப்பர் மீனில் ஒட்டி கொள்ளும்.
Tweet | ||||||
9 கருத்துகள்:
super sis...will try one day...
சூப்பர்... சூப்பர்...
மிக அருமையான குறிப்பு ஜலீலா! புகைப்படமும் மிக அழகு!
ஃப்ரை கலர் சிம்ப்ளி சூப்பர்ப்.
இறால் 65 , கிங் பிஷ் 65 போட்டு கலக்குறீங்க. பார்த்தாலே பசிக்குது. ரொம்ப அருமை. எப்படி இருக்கீங்க அக்கா?
படமும் குறிப்பும் மிக அருமை.த.ம 3
சூப்பர்...
வாழ்த்துக்கள்...
சூப்பர் டேஸ்ட் ஆக இருக்கும் போல... நன்றி ...
yummy fry akka
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா