ஏர் ப்ரையர் கிரில்
பிஷ்
Air Fryer
Grill Fish Fry
சங்கரா மீன் –
அரை கிலோ
உப்பு – முக்கால்
தேக்கரண்டி
ஆச்சி மீன் ப்ரை
மசாலா – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
ஆனியன் பொடி –
ஒரு தேக்கரண்டி
பூண்டு பொடி –
ஒரு தேக்கரண்டி
தேங்காய் எண்ணை
– தேவையான அளவு
செய்முறை
மீனை கழுவி சுத்தம் செய்து அங்காங்கே குறுக்காக கீறி
விடவும் ( மசாலா நன்கு மீனுக்கு செல்ல) 10 நிமிடம் ஊறவைக்கவும்.
ஏர் ப்ரையரை ஆன்
செய்து 16 நிமிடத்துக்கு செட் செய்து தேங்காய் எண்ணையை மீனின் மேலே முழுவதும் படுமாறு
பரவலாக ஊற்றி விடவும்.
ஒரு பக்கம் 8 நிமிடம்
கிரில் ஆனதும் , திருப்பி போட்டு மறுபக்கம் தேங்காய் எண்ணை தடவி 8 நிமிடம் கிரில் செய்யவும்.
இருபுறமும் மொருகலாக
கிரில் ஆகி அருமையாக இருக்கும்.
ரொம்ப ஈசியான ஏர்
ப்ரையர் கிரில் ஃபிஷ் ரெடி
பேலியோ டயட் ரெசிபி, மீன் வறுவல், ஏர் ப்ரையர் ரெசிபி
How to make Air Friyer Fish Fry
Paleo Diet Dinner Recipe
இந்த ஏர்ப்ரையரில் சிக்கன் மற்றும் காய்கறிகளுக்கு நடுவில் சுற்றுவது போல் ( கிரைண்டர் சுற்றுவது போல ) ரோலர் இருக்கும் , மீனுக்கு மட்டும் அதை எடுத்து வைத்து விட்டு தவ்வா போல அப்படியே இரண்டு பக்கமும் வைத்து டைம் செட் பண்ணால் போதும்/
Tweet | ||||||
3 கருத்துகள்:
நமக்கு மீன், சிக்கன்லாம் வெங்காயம், தக்காளில மிதக்க்கனும்.
வாஙக் ராஜி வெங்காயம் தக்காளில மிதப்பது சால்னா வாச்சே
இது பேச்சுலர்களுக்கு ஈசியா செய்து சாப்பிடலாம்.
மீன் மார்க்கெட் ல யே மீனை வெட்டி சுத்தம் செய்து கொடுத்துட்டுவாங்க ஜஸ்ட் கழுவி மசாலா போட்டு இதில் பொரித்து எடுக்கலாம்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா