Tuesday, August 1, 2017

30 நாள் கீரை வகை சமையல் - அவள் விகடன்


அவள் விகடன் 25.07.2017
30 நாள் கீரை ரெசிபி 
கேள்வி : இன்னைக்கு என்ன சாப்பாடு ?
பதில் : கீரை
கீரையா என்று முகம் சுழிக்கிறார்களா உங்கள் வீட்டு குட்டீஸ் சோ அல்லது கீரையே பிடிக்காதவர்கள் வாங்க அன்றாட செய்யும் மெனுவிலேயே எப்படி கீரையை சேர்த்து செய்யலான்னு நான் சொல்லி தரேன்
ஆமாம் தமிழில் நம்பர் ஒன் பெண்கள் இதழ் அவள் விகடனில் என் குறிப்புகள்
சமைக்க தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு போனால் பச்சை பசேலுன்னு எங்க காய்கறிய பார்த்தாலும் அதுவும் கீரையை பார்த்தான் என் கால்கள் அங்கு விட்டு நகராது. முதலில் கீரைவகைகளை வாங்கிட்டு தான் மற்ற சாமான்கள்
இதில் கொடுத்துள்ளது 30 வகைதான் ஆனால் இதுவரை நான் செய்ததோ 100 க்கும் மேல் My 30 type of spinach recipes has been published in Aval Vikatan Monthly Magazine (Tamil) on 25th July 2017.
Thank you very much Vaidehi Ranganathan for giving me the opportunity.


http://www.vikatan.com/avalvikatan/2017-aug-08/recipes/132967-thirty-type-of-spinach-recipes.html



உடல் ஆரோக்கியம் என்று பார்க்கும் போது குட்டீஸ்  முதல் பாட்டீஸ் வரை   சாப்பிட வேண்டிய முக்கியமான உணவு வகைகளில்  முதலிடம்  கீரை தான்.. ஆனால் இந்த கீரையை சாப்பிட பல குழந்தைகளுக்கோ அல்லது பெரிய குழந்தைகளுக்கு இது சாப்பிடுவது ரொம்பவே சிரமம்.
உடல் ஹிமோ குளோபின் , விட்டமின் டி , கால்சியம் ,அயர்ன் எல்லாமே சரியான விதத்தில் இருந்தால்தான் உடல் ஆரோக்கியம் சீராக அமையும்.

ஆனால் நம்மில் பலர் அதை சாப்பிட ரொம்பவே முகம் சுழிப்பனர், 

நாம் கீழே நான் கொடுத்துள்ள படி பல வகைகளாக மாற்றி சாப்பாட்டில் தினப்படி சமையலிலேயே கீரையை சேர்த்து செய்யலாம்....

விகடன் தீபாவளி மலர் 2011 கு பிறகு என் ரெசிபிகள் அவள் விகடனில் ரொம்ப சந்தோஷம்.
30 வகையான கீரை ரெசிபிகள்.

பச்சைப்பசேல் என அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் கீரை வகைள், பார்க்கும்போதே கண்களைக் கவர்ந்து வாங்கத் தூண்டும். பர்ஸையும் பதம் பார்க்காமல், சத்துகளையும் கொண்டுவந்து குவித்து `டூ இன் ஒன்’னாக சமையலில் கைகொடுத்து உதவும் கீரையில் கிரேவி, பொரியல் என்று மட்டுமல்லாமல்... புட்டு, நூடுல்ஸ், சூப், ஸ்பிரிங் ரோல் என்று 30 வகை

aval vikatan



  1. முருங்ககீரை முந்திரி பகோடா - Drumstick Leaves Cashew Pakoda
  2. மினி கீரின் தானிய அடை - Mini Green Multi Grain adai / Pan cake
  3. கம்பு – பாலக் கொழுக்கட்டை - Pearl Millet Palak Dumpling - kozukkattai
  4. ஸ்பினாச் பகோடா - Spinach Pakoda - Palak pakoda - 
  5. தேங்காய் – பாலக் புட்டு - Coconut Palak (Spinach) Puttu
  6. மூங்தால் – கீரை கூட்டு 
  7. பருப்பு கீரை வெஜ்ஜி நூடுல்ஸ்
  8. சிவப்பு பாலக் கீரை ஸ்பிரிங் ரோல் -  Red Spinach Spring Roll - Chinese Recipe
  9. பாலக் டோக்ளா - Palak Dhokla
  10. பாலக் பணியாரம் - Palak Paniyaram
  11. பொன்னாங்கண்ணிக்கீரை பகோடா
  12. தண்டு கீரை புளி கடைசல்
  13. தேங்காய் பால் கீரை
  14. பாலக் பாஸ்தா
  15. மூங்தால் பாலக் கபாப்
  16. சிவப்பு பாலக் கீரை சோம்பு பொரியல்
  17. பாலக் கீரை புளி கடைசல்
  18. பாலக் பட்டாணி சூப் - Palak Peas Soup
  19. சிறுகீரை வெஜ்ஜி கிரேவி
  20. பாலக் வெண்டைக்காய் மோர் குழம்பு Palak with Okra Moor kuzambu
  21. பாலக் – ரைஸ் டிக்கி - Palak Rice Tikki
  22. பாலக் – பருப்பு பொரியல்
  23. முடக்கத்தான் கீரை சப்பாத்தி - Mudakkaththaan kiirai Chappathi ( Cardiospermum halicacabum)
  24. கார்லிக் – பார்சிலி சூப் - Garlic Parsley Soup 
  25. ஸ்பைசி பஞ்சாபி மலாய் பாலக் - Spicy Panjabi Malay Palak
  26. பாலக் ஹமூஸ் -  Palak Hamuus
  27. பாலக் மினி ரொட்டி - Palak Mini Rotti 
  28. அரைகீரை மசூர் தால்
  29. பாலக் கீரை சிறுபருப்பு கடைசல்
  30. மேத்தி பாலக் குஸ்கா - Methi Palak KuSka
30 ரெசிப்பி லிஸ்ட் கொடுத்து இருக்கீறேன் ஒவ்வொன்றாக பதிவிடுகிறேன் . முதலில் எந்த ரெசிபி வேணும், என்று சொன்னாலும் அதன் படி பதிவிடுகிறேன்.

 பச்சை கலர் ரெசிபிகள், கீரை ரெசிபிகள்,Green Leaves Recipes, Spinach Recipes




https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

6 கருத்துகள்:

நட்புடன் ஜமால் said...

அருமை அக்கா
கீரையிலேயே 30 வகையா - சூப்பர்

நட்புடன் ஜமால் said...

மூச்சு பிடிப்பு வகை, வாயு தொல்லையிலிருந்து நீங்க
என்ன சாப்பிடனும், என்ன சாப்பிடக்கூடாது
ஒரு லிஸ்ட் ஆஃப் சமையல் குறிப்பு சொல்லுங்க

Unknown said...

Arumayana kurippukal

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் ஜலீலா.

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

அருமை. வாழ்த்துகள்!

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா