Sunday, August 20, 2017

கிளியர் முருங்கக்காய் சூப் - Clear Drumstick Soup



தண்ணீ சூப் என்பது காய்களை வேகவைத்து அந்த தண்ணீரை மட்டும் சூடாகா பருகுவது. இது நாள் பட்ட நோயாளிகளுக்கு , அல்லது குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம். இது போல எல்லா வகை காய்களை மூன்று காய்கள் சேர்த்து கூட செய்து சாப்பிடலாம்.

கிளியர் முருங்க்கக்காய் சூப்

முருங்க்காய் – 2 இன்ச் சைஸ் 6 துண்டுகள்
பெப்பர் பவுடர்கால் தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
பூண்டு – 1 பல் பொடியாக அரிந்த்து.
வெங்காயம் ஒன்றுபொடியாக அரிந்த்து
பட்டர்கால் தேக்கரண்டி




செய்முறை
முருங்கக்காயை கழுவி அதில் மிளகு தூள், உப்பு தூள், பூண்டு, வெங்காயம்.
இரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேகவைக்கவும் .
நன்கு மசிய வெந்த்தும் அதை நன்கு கரண்டியால் மசித்து வடிக்கட்டவும்.

சத்தான சூப் குழந்தைகளுக்கு, டயட்டில் இருப்பவரக்ளுக்கு ,வயதானவர்களுகு மற்றும் நோயாளிகளுக்கு இந்த கிளியர் சூப்பை செய்து கொடுக்கலாம்.
பேலியோ டயட் ரெசிபிகள், சூப் வகைகள், மஞ்சள் பூசனி, தில் கீரை பாலக் கீரை,
Paleo Diet Recipes, Clear Soup, Liquid Diet Recipes. லிக்கியுட் டயட் சூப்


கவனிக்க: ஆப்ரேஷன் பண்ணி இருக்கும் போது, குழந்தைகளுக்கு பேதி ஆகும் போது , தெம்பில்லாத போது தொடர்ந்து ஏதாவது ஒரு சூப் வகைகள் குடித்தால் கூடிய விரைவில் நலம் பெறலாம். லிக்விட் ஃபுட் கொடுங்க என்று டாக்டர்கள் சொல்வார்கள். நிறைய தண்ணீர் குடிக்கனும் , அதை ஜூஸாகவோ, சூப்ப்பாகவோ குடிக்க சொல்வார்கள். அதற்கு இது போல் கிளியர் சூப் செய்து கொடுக்கலாம். இதே போல மற்ற காய்கள், சிக்கன் மட்டன் எலும்புகளில், கீரையிலும் செய்து கொடுக்கலாம்.சிலருக்கு வாய் புண் ஏற்பட்டால் கூட வாயில் சாப்பாடு வைத்து மென்று சாப்பிட முடியாது அப்படி இருக்கும் போது கிளியர் சூப் அல்லது ஜூஸ் செய்து ஈசியாக பருகலாம்.,
Clear Diet Soup

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

1 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் said...

ஆஹா... ரொம்பச் சுலபம் போல...
இந்த வாரம் செய்து பார்த்துடணும் அக்கா...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா