மீட் பால்ஸ் ஸ்பெகதி /(ஃபட்டூஸின்)
ஸ்பெகதி இது ஒரு இத்தாலி , அரபிக், பிலிப்பைனிகளின் உணவு
இது நூடுல்ஸ் க்கு அண்ணன் ன்னு சொல்லிக்கலாம்.
தேவையான பொருட்கள்
ஸ்பெகதி - 400 கிராம்
மீட் பால்ஸ் செய்ய
எலும்பில்லாத ஆட்டு கறி - 250 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
பப்பரிக்கா பவுடர் - 1/2 தேக்கரண்டி
அரிந்த கொத்து மல்லிகீரை - 3 மேசை கரண்டி
ஒரிகானா - - அரை தேக்கரண்டி
லெமன் சாறு - ஒரு தேக்கரண்டி
பட்டை பொடி - கால் தேக்கரண்டி
கிராம்பு பொடி - கால் தேக்கரண்டி
பிரட் கிரம்ஸ் - 1 மேசைகரண்டி
பொட்டு கடலை - 1 மேசை கரண்டி
ஸ்பெகதி கிரேவி
தக்காளி - 200 கிராம்
தக்காளி பேஸ்ட் =- இரண்டு தேக்கரண்டி
வெங்காயம் - 150 கிராம்
பூண்டு – 5 பல்
சிக்கன் ஸ்டாக் மசாலா மேகி அல்லது நார் ப்ராண்ட் -அரை கியுப்
ரெட்சில்லி ஃப்லேக்ஸ் - அரை தேக்கரண்டி
ஹக்கா நூடுல்ஸ் மசாலா - அரை தேக்கரண்டி
ஹக்கா நூடுல்ஸ் மசாலா - அரை தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு மேசைகரண்டி
பச்ச மிளகாய் - ஒன்று
கேரட் ( துருவியது) - இரண்டு மேசைக்கரண்டி
வெங்காய தாள் - ஒன்று
உப்பு - தேவைக்கு
கேப்சிகம் - கொட மொளகா - 1 மேசைக்கரண்டி
செய்முறை
For Spaghetti
ஒரு வாயகன்ற சட்டியில் தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு தேக்கரண்டி உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணை விடவும்.
ஸ்பெகதியை போட்டு நன்கு கொதிக்க விட்டு வேகவைத்து வடிக்கவும்.
10 நிமிடத்தில் வெந்து விடும். வடித்த ஸ்பெகதியை சிறிது எண்ணை தெளித்து பிசறி வைக்கவும்.
Meat Ball
மட்டன் துண்டுகளுடன் கொத்துமல்லி , இஞ்சி பூண்டுபேஸ்ட், பப்பரிக்கா, மிளகு தூள், லெமன் சாறு , பட்டை பொடி, கிராம்பு பொடி எல்லாவற்றையும் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த கறியில் கிரம்ஸ் பவுடர் மற்றும் பொட்டுகடலை பொடியை சேர்த்து நன்கு பிசறி உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
Gravy
ஒரு வாயகன்ற பெரிய பேனில் எண்ணை + பட்டர் ஊற்றி வெங்காயம் பச்சமிளகாய், சேர்த்து வதக்கவும் அடுத்து தக்காளி பேஸ்ட் காய் கறிகள் அனைத்தையும் சேர்த்த்து வதக்கவும். ஹக்கா நூடுல்ஸ் மசாலா மற்றும் சிக்கன் ஸ்டாக் மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்
மிக்சியில் ரெட் சில்லி ப்லேக்ஸ், பூண்டு , தக்காளி சேர்த்து அரைத்து ஊற்றவும். தேவைக்கு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பொரித்த மீட் பால்ஸ், வடித்த ஸ்பேகதி யை சேர்த்து ஒரு சேர கிளறி சிறிது சர்க்கரை தூவி கிளறி இரக்கவும். சுவையான மீட் பால்ஸ் ஸ்பெகதி ரெடி.
இதை பாஸ்தாவுடனும் இதே போல செய்யலாம்.
ரெட் சில்லி ப்ளேக்ஸ் என்பது முழு சிவப்பு மிளகாய் ( காஞ்ச மிளகாயை உள்ளே உள்ள விதையை நீக்கி விட்டு கொஞ்சம் தண்ணீரில் ஊறவைத்து அரைத்தால் நல்ல இருக்கும். காஷ்மீரி ஹோல் ரெடி சில்லி வாங்கி கொண்டால் நல்ல சிவப்பு நிறம் கிடைக்கும்.
Meat Ball Fettuccineடிபன் வகைகள், இத்தாலியன் உணவு, பிலிப்பைனி உணவு, அயல் நாட்டு உணவு,
Step By Step Recipe, Meat Ball Italian Fettuccine
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா