தேவையானவை
மைதா - 150 கிராம்
சர்க்கரை - 150 கிராம்
பட்டர் - 150 கிராம்
முட்டை - 3
பேக்கிங் பவுடர் - அரை ஸ்பூன்ஆரஞ்சு கலர் – 1 ட்ராப்
கோக்கோ - 25 கிராம்
சாக்லேட் எசனஸ் - 1 ட்ராப்
பச்சை(பிஸ்தா) எசன்ஸ் - 1 டிராப்
உப்பு – ஒரு சிட்டிக்கை
செய்முறை
மைதாமாவுடன் ,உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து கொள்ளவும்.
சர்க்கரை பொடித்து பட்டர் உடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
முட்டையை நுரை பொங்க அடுத்து சர்க்கரை கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
சலித்த மாவை கட்டி தட்டாமல் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த மாவு கலவையை முன்று பாகமாக பிரித்து கொள்ளவும்.
ஒன்றில் கோக்கோ பவுடர் மற்றும் சாக்லேட் எசன்ஸ் கலக்கவும்.
அடுத்து ஆரஞ்சு கலர் சிறிது தண்ணீரில் கலக்கி சேர்க்கவும்..
அடுத்து பிஸ்தா எசன்ஸ் கலக்கவும்.
இதில் பேக்கிங் ட்ரேவில் லைனாக ஓவ்வொரு கலராக ஊற்றவும். ஊற்றும் போது அதே சிறிது அங்காங்கு கலந்து கொள்ளும்.
பின்பு முற்சூடு செய்த அவனில் 170- 180 டிகிரியில் 35 - 40 நிமிடம் வைத்து எடுக்கவும். நன்றாக ஆறிய பின்பு கட் செய்து பரிமாறவும்.
கலர்ஃபுல் மார்பிள் கேக் ரெடி. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்/.
இது அன்பு தோழி ஆசியாவின் மார்பிள் கேக் , அவர்கள் டிப்ஸில் கொடுத்த்தை வைத்து சில மாற்றத்துடன் நான் இந்த கேக்கை முன்பு செய்த்து
.
கீழே உள்ளது ஆசியாவின் செய்முறை.
மாவை பேகிங் பவுடர் சேர்த்து மும்முறை சலித்து தனியே வைக்கவும்.சர்க்கரையை பொடித்து வைக்கவும்.
பேக்கிங் ட்ரேயை பட்டர் பேப்பர் போட்டு எண்ணெய் தடவி மாவு (டஸ்ட்) தூவி ரெடி செய்து வைக்கவும்.
பட்டரை பீட் செய்து, பின்பு அதனுடன் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும்.
முட்டையை ஒன்றன் பின் ஒன்றாக விட்டு வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.நன்றாக பீட் செய்து கொள்ளவும்.
சலித்தாமாவை கொஞ்சம் கொஞ்சமாக பட்டர் முட்டை கலவையில் போட்டு மெதுவாக கலந்து(fold)பிரட்டி கொள்ளவும்.
தயார் செய்த மாவுக்கலவையில் இருந்து ஒரு பகுதி எடுத்து அதனுடன், சாக்லேட் அல்லது கோக்கோ பவுடரை கட்டியாக கரைத்து சேர்க்கவும். இன்னும் கலர் டார்க்காக வேண்டும் என்றால் ப்ரவுன் கலர் சேர்த்துக்கொள்ளலாம்.
பேக்கிங் ட்ரேயில் சாக்லேட் பவுடர் சேர்த்த மாவுக் கலவையை ஸ்பூனால் எடுத்து ஆங்காங்கு எடுத்து வைக்கவும்,பின்பு இடை வெளிப்பகுதியில் மொத்த மாவுக்கலவையையும் ஸ்பூனால் இடையில் வைக்கவும். பின்பு ஃபோர்கினால் வரி போடுவது போல் மிக்ஸ்செய்யவும்,அதிகம் மிக்ஸ் செய்யக்கூடாது .ப்ரவுன் கலரும் கிரீம் கலரும் கலந்து மார்பிள் போல் இருக்கும்.
பின்பு முற்சூடு செய்த அவனில் 170- 180 டிகிரியில் 35 - 40 நிமிடம் வைத்து எடுக்கவும். நன்றாக ஆறிய பின்பு கட் செய்து பரிமாறவும்.
அழகான, சாஃப்டான, சுவையான மார்பிள் கேக் ரெடி.
Note:
இது போல் மற்ற கலரும் சேர்த்து மார்பிள் கேக் செய்யலாம்,(பின்க்,பச்சை,ஆரஞ்சு) கலரை 2-4 ட்ராப் சேர்த்து செய்து பார்க்கலாம்.
டிஸ்கி: கேக் என்றால் ஒன்லி லெமன் ஸ்பாஞ்ச் கேக், சாக்லேட் கேக் மட்டும் தான் அடிக்கடி செய்வது. இது வித்தியாசமாகவும் கலர்ஃபுல்லாகவும் பிள்ளைகளுக்கு பிடித்ததாகவும் இருந்தது என்ன கொஞ்சம் பொருமையாக செய்யனும்.
Tweet | ||||||
26 கருத்துகள்:
கேக் செய்ய ஆசைதான் ஆனால் நேரம் தான் இப்பொழுது கிடைப்பதில்லை.. நீங்க செய்த இந்த கேக் நல்லா இருக்கு.. நேரம் கிடைக்கும் பொழுது செய்து பார்க்கிறேன்..... ஆசியா அக்காவின் தெளிவான செய்முறையும் செய்ய தூண்டுகிறது
Delicious and yummy cake...
கிறிஸ்மசுக்கு அட்லீஸ்ட் எட்டு பலகாரமாவது செய்றேன்னு ஒரு இடத்தில சபதம் செஞ்சுட்டு வந்திருக்கேன் .
நம்பர் ஒன், ரெசிப்பி கிடைச்சாச்சு .நன்றி ஜலீலா .செய்முறை ஈசியா இருக்கு
பகிர்வுக்கு நன்றி சகோ
ஒய்வு நேரத்தில் செய்து பார்க்கலாம் நன்றி
தமிழ் ten இல் இந்த பதிவை இணைத்தேன் .is that alright jaleelaa
Wow colourful cake, attagasama irruku Jaleela..
வாவ்..கலஃபுல் கேக்.கண்டிப்பாக செய்து பார்த்து விடுகிறேன்.
கேக் கலர்புல்லாக இருக்கு.அருமை.
பேக்கிங்க் பவ்டர்ன்னா ?
கேக் கலரா நல்லா இருக்கு ஜலீலாக்கா...
யாராவது செஞ்சு குடுத்தா டேஸ்ட் பாக்கலாம்.
wow...
parkave supera irruku :)
ஜலீலா கமெண்ட் கொடுத்த நினைவு இருக்கு,கேக் கலர்ஃபுல்லாக அருமையாக இருக்கு.
உங்கள் குறிப்புகளைப் படித்தவுடனேயே கேக் செய்ய வேண்டும் ஆசை வந்துவிட்டது. கேக் சாப்பிடும் ஆசையும்தான்.. உங்கள் வலையில் பல நல்ல பயனுள்ள சமையல் குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. பயன்படுத்திக்கொள்கிறோம்.
இனி தொடர்ந்து தங்கள் வலைக்கு வந்து புதுப்பதிவுகளை ஒரு பிடி பிடிதுவிட்டுதான் மறுவேலை.
பகிர்வுக்கு நன்றி!வாழ்த்துகள்..!!
ஜலீலாக்கா சூப்பர். அதெப்படி ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு கலராக இருக்கே அவ்வ்வ்வ்வ்:)).
சகோ ஜமால் பேக்கிங் பவுட்ர் ந்னா
கேக், முஃபின், செய்ய பயன் பaடுuத்hத்ுவ்து
/இனி தொடர்ந்து தங்கள் வலைக்கு வந்து புதுப்பதிவுகளை ஒரு பிடி பிடிதுவிட்டுதான் மறுவேலை. ///
தங்கம் பழனி வருகைக்குீஅ நன்றி
படித்து விட்ு அப்படியே போய் விடகூடாது
உங்கள் கருத்தை சொல்லிட்டு போங்க
ஏஞ்சலின் கிருஸ்மச்சுக்க எட்டு ஸ்வீட்டா
வாவ்
நானே எட்ட்ு ஸ்வீ்டும் போஸ்ட் பண்றேன்
பாயிஜா என்க்கும்அவ்வளவா நேர கிடைப்பதில்லை/
அதுவும் ்கேக் செய்ய அவ்வளவா பொருமையும் கிடைய்ாது.
வருகை்கு மிக்க நன்றி பிரேமா
எம் ஆர் முடிந்த போத் செய்து பா்ருங்கள்
வருகைக்கு மிக்க் நன்றி
பிரியா உங்கள் பாரட்டு்கு மிக்கநன்றி
ஸாதிகா அக்கா உங்கள் பேரனுக்க் து கொடுங்்கள்.
உங்களுகும் நன்றி ஆசியா
சே குமார் (யாரவது செய்து கொடுத்தா நல்ல இருக்கும்) என்ன செய்வது இப்படி சொல்ல கேட்டும் போது வருத்தமாக இருக்கு.
இது் வெளி நாடுகளி னிற்ய பேச்ச்ுலரகள் சமைக்கிறார்க்ள் அவர்கலுக்ும் உதவும்
உங்கள் தொட்ர் ுகைக்கும் ஊக்கதுக்குக்கும் மிக்க நன்றி
கருத்துக்கு மிகக நன்றி அருனா
//ஜலீலாக்கா சூப்பர். அதெப்படி ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு கலராக இருக்கே அவ்வ்வ்வ்வ்:)).//
ட்
அதான் அட்டகாசம்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா