கீழே உள்ளது என் ஐடியாவில் சேர்த்த பொருட்கள், டேஸ்ட் ரொம்ப நல்ல இருந்தது.
...
ப்ளக்சீட் கோக்கோ மினி கப் கேக் ( பேலியோ டிபன் அல்லது டின்னர்)
தேவையான பொருட்கள்
டார்க் சாக்லேட் 1 இன்ச் சைஸ் 5 பார்
முட்டை - ஒன்று
பட்டர் – இரண்டு மேசைகரண்டி
காபி பவுடர் – அரை தேக்கரண்டி
பைனாப்பிள் எசன்ஸ் – ஒரு துளி ( தேவைப்பட்டால்)
பேக்கிங் பவுடர் – அரை தேக்கரண்டி
கோக்கொ பவுடர் – ஒரு மேசை கரண்டி
தேங்காய் பவுடர் - ஒரு மேசைகரண்டி
ப்ளக்சீட் பவுடர் – இரண்டு மேசைகரண்டி
வால் நட் – பொடியாக அரிந்தது – ஒரு மேசை கரண்டி
செய்முறை
டார்க் சாக்லேட்டை உருக்கி அத்துடன் பட்டர் சேர்த்த்து நன்கு கலக்கவும்.
முட்டையை சேர்த்து நுரை பொங்க அடித்து பட்டர் சாக்லேட் கலவையுடன் சேர்க்கவும்
ப்ளாக்சீட் பவுடர், கோகோ பவுடர், காபி பவுடர்,பேக்கிங் பவுடர் எல்லாவற்றையும் நன்கு மிக்ஸ் செய்யவும்.
மிக்ஸ் செய்து முட்டை கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும்.
பொடியாக அரிந்த வால்நட்டை சேர்த்து கலக்வும்.
கலவையை கப் கேட் மோல்டில் ஊற்றி 250 டிகிரி செல்சியத்தில் 20 நிமிடம் முற்சூடு படுத்திய ஓவனில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
கவனிக்க: ஓவன், மைக்ரோ வேவ் அவன் இல்லாதவர்கள்.
இதை குக்கரில் கிழே உப்பை தூவி உள்ளே பேக் செய்யும் பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு விசில் போடாமல் 20 முற்சூடு செய்து விட்டு மேலும் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்
என் குறிப்பை இங்கும் கானலாம்
முன்னோர் உணவு
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
4 கருத்துகள்:
அக்கா,
1. இந்த அளவில் எத்தனை கப் கேக் வரும்?
2. ஃப்ளாக்ஸ் சீட் மாவுக்குப் பதிலாக, Almond Flour சேர்க்கலாமா? என்னிடம் ஃப்ளாக்ஸ் சீட் இல்லை.
1. 3 or 4 varum
2. almond powder seerkkalaam
இன்னிக்கு செய்தேன் அக்கா. ரொம்ப நல்லாருந்துது. நன்றி அக்கா. :-)
செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஹுஸைனாம்மா.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா