ஸ்ராபெர்ரி கேசரி
நாம் அடிக்கடி செய்யும் கேசரி தான் ஆனால் அதே சிறிது பழம் சேர்த்து அல்லது காய் சேர்த்து செய்தால் சத்தாக சாப்பிடலாமே
கேசரியில் பல விதம் பைனாப்பிள் கேசரி, பீட்ரூட் கேசரி,கேரட் கேசரி,என்று பட்டியிலிட்டு கொண்டே போகலாம். ஆனால் குழந்தைகளுக்கு பிடித்த ஸ்ட்ராபெர்ரி கேசரியை செய்து பாருங்கள் சுவையே அலாதி தான்..பார்ட்டியில் வைக்கும் போது வித்தியாசமான சுவையில் கலரும் சிவப்பு வண்ணதில் பார்க்கவே அசத்தலாக இருக்கும்.
Strawberry Kesariஇ
தேவையான பொருடகள்
ஸ்ராபெர்ரி பழம்
– 5
ரவை – 100 கிராம்
சர்க்கரை – 75
கிராம்
தண்ணீர் – 200
மில்லி
பிஸ்தா ப்ளேக்ஸ்
– இரண்டு ஸ்பூன்
முந்திரி – 6 நெய்யில்
வறுத்தது
நெய் – 2 தேக்கரண்டி
பட்டர் – ஒரு மேசைகரண்டி
செய்முறை
பட்டரில் ரவையை
கருகாமல் வறுக்கவும்.
ஸ்ட்ராபெர்ரி பழத்தை
மிக்ஸியில் அரைக்கவும்
200 மில்லி தண்ணீரை
சூடுபடுத்தி அதில் சர்க்கரையை கொட்டி கரைந்ததும் அதில் ஸ்ட்ராபெர்ரி பழத்தை சேர்த்து
கொதிக்க விட்டவும்
தீயின் தனலை குறைவாக
வைத்து விட்டு வறுத்து வைத்துள்ள ரவையை தூவி கிளறவும்.
கிளறும் போது இடையில்
நெய்விட்டு வறுத்த முந்திரி சேர்த்து நன்கு சுருள கிளறி இரக்கவும்.
பிஸ்தா பிலேக்ஸ்
தூவி தட்டில் கொட்டி ஆறவைத்து இதய வடிவில் அல்லதுவேண்டிய வடிவில் துண்டுகள் போட்டு
பரிமாறவும்.
மூவர்ண கேசரி .
பைனாப்பிள் கேசரி
சாப்ரான் நட்ஸ் பிலைன் கேசரி
சிம்பிள் ஸ்வீட் , ஈத் ஸ்பெஷல்ல்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா