தேவையானவை
தாய்லாந்து ரைஸ் – 50 கிராம்
கட்டியான தேங்காய் பால் – கால் கப்
கருப்பெட்டி வெல்லம் – 25 கிராம் ( ருசிக்கு தேவையான அளவு)
பிஸ்தா – பொடியாக அரிந்த்து ஒரு தேக்கரண்டி
//இது ஸ்டிக்கி ரைஸ், தாய்லாந்து அரிசியில் செய்த்து. அரிசி பார்க்கவே சில்கியா இருக்கும். இது பிலிப்பைனிகளின் காலை நேர உணவும் ஆகும் ரைஸ் கேக். என்று சொல்வார்கள்.//
செய்முறை
அரிசியை ஒரு நாள் முழுவதும் ஊறவைக்கனும், இரண்டு முறை தண்ணீரை மாற்றவும்.
ஊறிய அரிசியை வடிகட்டி இட்லி பானையில் வைத்து 45 நிமிஷம் அவிய விடவும். 10 நிமிடம் மட்டும் அதிக தணலிலும், பிறகு சிம்மில் வைத்து அவிய விட்டு இரக்கவும்.
கருப்பட்டி வெல்லத்தை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க் விட்டு கரைந்த்தும் வடிக்கவும்.
வடித்த வெல்ல கரைசலுடன் கட்டியான தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டவும்.
கொதித்து கட்டியாக இருக்கும். அவித்து வைத்துள்ள அரிசியில் கொட்டி கிளறி சமப்படுத்தி வைக்கவும்.சிறிது நேரம் கழித்து செட்டாகிவிடும்.பிஸ்தா தூவி அலங்கரிக்கவும்.
குறிப்பு
சுவையான பீக்கோ ரெடி , இது நான் சுவைத்த சுவையின் படி இதை செய்துள்ளேன்.
கேரிஃபோர் , மாயாலால்ஸ் போன்ற இடங்களில் ஃபுட் செக்ஷனில் பிலிப்பைனிகளுக்கு ரெடி மேட் காலை உணவு இருக்கும்,அதில் ஒன்று தான் இந்த பீக்கோ, வாங்கி வந்து சுவைத்து செய்துள்ளேன்.அது இன்னும் புட்டரிசி போல் மென்று சாப்பிடுவது போல் இருந்தது, நான் கொஞ்சம் நல்லவே வேகவைத்தேன்.
இது பிலிப்பைனிகளின் உணவு, அவர்கள் ஓவனில் வைத்து செய்வார்கள். கருப்பட்டிக்கு பதில் அவர்கள் பிரவுன் சுகர் கேக்குக்கு பயன் படுத்துவது சேர்த்து செய்வார்கள்.
இதே இஸ்லாமியர்கள் இனிப்பு உருண்டை சோறு என்று குக்க்கரில் அரிசி+ வெல்லத்தை வேகவைத்து உருண்டை பிடித்து துருவிய தேங்காய் சேர்த்து செய்வார்கள்.
நொய் உருண்டை வெல்லஞ்சோறு
Tweet | ||||||
28 கருத்துகள்:
different one
Biko superaa irruku, namba ooru sakkarai pongal madhriye irruku..
பயனுள்ள சமையல் குறிப்புகள்.
New dish to me. Looks nice.
vithyasamana recepie
Thanks
வித்தியாசமா நல்லாயிருக்கு...
சூப்பராக இருக்கு...வித்தியசமான இருக்கு...
//கருப்பட்டிக்கு பதில் அவர்கள் பிரவுன் சுகர் கேக்குக்கு பயன் படுத்துவது சேர்த்து செய்வார்கள்.//
ஏங்க நான் இமாராத்தில இருப்பது பிடிகலையா..
பிரவுன் சுகர் பேரை கேட்டாலே 12 வருஷம் ,
உள்ளே கொபூஸ தவிர வேற ஒன்னும் கிடைக்காதாமே..!!
new recipe.
இதில் நாங்கள் சர்க்கரை சேர்த்து செய்வோம்.பார்க்க நன்றாக உள்ளது ஜலி.
something new, ungal blog super!
good jalila, seithu parthura vendiyathuthan
ஜலீலா அவர்களே....
கடல் தாண்டி, நாடு தாண்டி இப்போது ஃபிலிப்பைனிகளுக்கும் ரெசிப்பி தர ஆரம்பித்து விட்டீர்களா?
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........
//கருப்பட்டிக்கு பதில் அவர்கள் பிரவுன் சுகர் கேக்குக்கு பயன் படுத்துவது சேர்த்து செய்வார்கள்//
*********
”பிரவுன் ஷுகர்” - இப்படி எல்லாம் ரெசிப்பி பார்த்து ட்ரை பண்ணினா உள்ளார போட்டுடுவாங்களாம் இங்க (துபாய்ல....).....
அப்புறம் ஜெய்லானி சொன்ன மாதிரி வெறும் குபூஸ் மட்டும் தான்...
ஹை சூப்பர்..மீண்டும் சந்திக்கும்போது இதக்கொண்டுவரனும் ஓகே..
@@@அன்புடன் மலிக்கா--// ஹை சூப்பர்..மீண்டும் சந்திக்கும்போது இதக்கொண்டுவரனும் ஓகே..//
கொழுக்கட்டையே இன்னும் கிடைக்கல இதுல பிலிப்பைனி ஐட்டமா..? அவ்வ்வ்வ்வ்வ்வ்
(( நா என்னைய சொன்னேன் )) ஹி..ஹி..
இதை நாம சாப்பிடலாமாக்கா??? அவ்வவ்வ்வ்வ்
சரி நேத்தும் உங்க பேனர்ல இந்த 'பிகோ' வை ரிலீஸ் செய்துட்டு, இன்றைக்கு ஜெய்லானி பேனர்ல ரிலீஸ் செய்திருக்கிறீர்களே. என்னா சங்கதி!! இதென்ன தியேட்டர் மாற்றி தியேட்டர் சினிமா மாதிரி சமையல் அட்டகாசம் கன்னா பின்னான்னு போகுது!! அவ்வ்வ்வவ்
எல்.கே வருகைக்க்கு மிக்க நன்றி, ஆமாம் வித்தியாசமான உணவு ரொம்ப நல்ல இருந்தது.
ஆமாம் பிரியா இது நம்ம ஊரு சர்க்கரை பொங்கல் மாதிரி ஆனால் சர்கக்ரை பொங்கல் இல்லை
நன்றி பிரவின் குமார்.
நன்றி காயத்திரி
நன்றி சாரு
நன்றி சசி
நன்றி மேனகா
நன்றி கீதா ஆச்சல்
ஜெய்லானி நானும் யோசித்தேன், அந்த சாப்பாடு பேக்கப்பைல்,அட அந்த இப்படி தான் போட்டு இருந்தது, உடனே பிரவுன் சுகர் வாங்கலாம்ன்னு போனேன், பெரிய பாக்கெட் , இந்த ஒரு ரெசிப்பிக்காக வாஙகனுமா என்று கருப்பட்டி வெல்லத்த போட்டு செய்தேன் சுவை அபாரம்.
அந்த கொழுக்கட்டைய இன்னுமா மரக்கல எப்படியாவது பார்சல் அனுப்பிடனும்.
சுத்தி வைத்து தட்டியாவது சாப்பிடுங்கள்
எம் அப்துல் காதர் நாம சாப்பிடாத ஐட்டமா(ஹலால் இலலை என்றால்) இருந்தால் நான் செய்து இருப்பேனா?
சாப்பிடலாம்.
நம்ம ஊரு பால் சோறு வெல்லஞ்சோறு போல் தான்
கோபி என்ன இப்படி பயம் காண்பிகிறீஙக்.
இதுல இபப்டி ஒரு வில்லங்கம் இருகாஅ?
நலல் வேளை என் குறிப்பு அரபியில் இல்லை.
வருகைக்கு மிக்க ந்ன்றி
நன்றி கஞ்சனா
ஆமாம் ஸாதிகா அக்கா இது பிசின் அரிசி சாதம் போல் தான் அதை தான் முதலில் செய்தேன், ரெசிபி போட்டு வைத்துள்ளேன்.
வாங்க பிரியா ஸ்ரீராம் வருகைக்கு மிக்க
நன்றி
மலிக்கா அடுத்த முறை கண்டிப்பாக கொண்டு வரேன்
ஆஹா சுதாகர் சார் வேற வந்தாச்சு, மூக்குல வேத்துடும்
I can't read it thank you for linking looks good
நம்ம ஜெய்லானிக்கு பிலிப்பைனி என்று சொன்னாலே வாயில் தண்ணீர் வந்துவிடும்.:))))
ஆமாம்அம்பது கிராம் அரிசியை வேக வைக்க 45 நிமிஷமா ??? அந்த கன்றாவி அரிசி சாமான்யத்தில் வேகாது.
நம்மவர்களுக்கு அதன் கடின தன்மை பிடிப்பதில்லை. எனினும் பிளிபைனிகளின் காலை நேர உணவு என்பதாலும், ஏதாவது சொன்னால் ஜெய்லானி கும்மி விடுவார் என்பதாலும் இப்போ ஜூட்.
// ஆமாம் பிரியா இது நம்ம ஊரு சர்க்கரை பொங்கல் மாதிரி ஆனால் சர்கக்ரை பொங்கல் இல்லை//
Jaleela Kamal said...
அதான் தெரியுமே,கருப்பட்டி பொங்கல் :)))
//நம்ம ஜெய்லானிக்கு பிலிப்பைனி என்று சொன்னாலே வாயில் தண்ணீர் வந்துவிடும்.:)))) //
வாத்யாரே ..டாக்டர் பட்டம் குடுக்கும் போது கூடவே ரெண்டுகேட்டது என் தப்புதான் அதுக்காக தேடிப்போய் என் பழைய கமெண்டுகளை ஆராய்வது அத்தனை சரியில்லை சொல்லிட்டேன் :-) :-)
//ஆமாம்அம்பது கிராம் அரிசியை வேக வைக்க 45 நிமிஷமா ??? அந்த கன்றாவி அரிசி சாமான்யத்தில் வேகாது.//
அந்த அளவு பொருமை கூடவா இல்லை ஹய்யோ..ஹய்யோ... :-)
//நம்மவர்களுக்கு அதன் கடின தன்மை பிடிப்பதில்லை. எனினும் பிளிபைனிகளின் காலை நேர உணவு என்பதாலும், ஏதாவது சொன்னால் ஜெய்லானி கும்மி விடுவார் என்பதாலும் இப்போ ஜூட்.//
செய்யறவங்க செஞ்சி குடுத்தா...செங்கல்லா இருந்தாலும் செறிக்காம போவாது ,தட்டிலே இட்டு தட்டி குடுத்தால் தகரமாய் இருந்தாலும் தண்ணீராய் போகுமப்பா
-ஜெய்லானந்தா
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா