ஊருக்கு போனதும் வருசையா கல்யாணங்கள் தான், இது முதல் போனதும் வெட்டியாச்சு வாழை இலையில் உட்கார்ந்து பந்தியில் சொந்தங்களோடு உட்கார்ந்து சாப்பிடும் போது ஒரே ஆனந்தம் தான்.
இவ்வளவும் நான் சாப்பிடல சொந்தங்களை பார்த்ததே பாதி வயிறு நிறைந்து விட்டது. இது எதிரில் இருந்த இலை
மட்டன் பிரியாணி, தயிர் சட்னி, பிரெட் ஹல்வா, எண்ணை கத்திரிக்காய்.
(இது ஆசியா பிளாக்கில் இருந்து சுட்ட போட்டோ, முன்பே கல்யாணத்தில் களத்தில் எடுத்த போட்டோக்கள் எடுத்து பதிவு போட வைத்திருந்தேன், இப்ப எடுத்து எடிட் செய்ய நேரமில்லை.)
முன்பெல்லாம் களச்சாப்பாடு தான், பெரிய பெரிய தலாவில் ஐந்து நபர்கள் உட்கார்ந்து சாப்பிடுவோம்.
ரொம்ப நல்ல இருக்கும், யார் எவ்வளவு சாப்பிட்டார்கள் என்று கணக்கே தெரியாது.
நான் சின்ன வயசில் வெளியூரில் இருந்ததால் , களச்சாப்ப்ட்டில் உட்கார்ந்தால் ரொம்ப சுத்தம் பார்ப்பேன்.
கரெக்டா என்க்கு வரை பாத்தி கட்டி நடுவில் உள்ளது மட்டும் சாப்பிடூவேன், தெரியாத்தனாமா நாலு பெருசுகள் மத்தியில் மாட்டி கொண்டேன்.
அவஙக் நாலு பேரும் போட்டி போட்டு கொண்டு ரவுண்டு கட்டினார்கள் என்ன இந்த பொண்ணு சாப்பிடாம வேடிக்க்கை பார்க்குது என்று கிண்டாலாகவும் சொன்னார்கள்.
என்ன இது எல்லோரும் ஒரே தட்டில் சாப்பிடுகிறார்கள் என்று ஆச்சரியமாய் பார்த்தேன். கடைசியில் கல்யாணமாகி மாமியார் வீட்டில் , எல்லோரும் வந்தால் விசேஷங்களில் நாலு தாலா எடுத்து இரண்டு பந்தியும் சாப்பாடு களறி முடிந்துடும். அங்கு சாப்ப்பிட்டு பிறகு பழகி விட்டது. இப்ப வாழை இலையில் தான்
இங்குள்ள அரபிகளும் இப்படி தான் களச்சாப்பாடுதான். சாப்பிடுவார்கள். ஒருவீட்டுக்கு சாப்பாடு அனுப்புவதா இருந்தாலும் பெரிய தாலா(களத்தில்) தான் சாப்பாடு அனுப்புவார்கள்.
இப்படி தான் மஸ்கட் போயிருந்த போதுஅந்த வீட்டில் நான்கு பேமிலி பெரிய வில்லாவில் சேரிங் அதில் ஒரு சூடானி வீட்டில் நிறைய பேர், சமைத்து முடித்ததும் பிள்ளைகுட்டிகளோடு அவர்கள் ஒரே தாலாவில் அமர்ந்து சாப்பிட்டார்கள்.
இது எல்லா நாடுகளிலும் தொன்று தொட்டு வருகிறது போல.
நாங்களும் எல்லா பிள்ளைகலுக்கும் ஊட்டி விடுவதா இருந்தால் பெரிய தட்டில் மொத்தமா போட்டு உருட்டி ஊட்டி விடுவோம், பிள்ளைகள்போட்டி போட்டு கொண்டு சாப்பிடுவார்கள்.
இது அடுத்த கல்யாணம்
மட்டன் பிரியாணி, மிட்டா கானா, தயிர் சட்னி, எண்ணை கத்திரிக்காய், சிக்கன் பிரை, ஐஸ் கிரீம்.
முன்பெல்லாம் பெரிய 10 படி தேக் ஷாவில் செய்வார்கள் இப்ப சட்டியில் செய்கிறார்கள்.
இப்படி தான் சமையனாக்கள் முன்பெல்லாம் தெருவில்வைத்து நிறைய செய்வதா இருந்தால் செய்வார்கள் , ஆட்டோவில் போற வழியில் பார்த்ததும் பையன் தான் சொன்னான் உடனே போட்டோ எடுங்க மம்மி என்று உடனே ஒரு கிளிக்
இது நான் செய்த ஸ்பெஷல் மட்டன் பிரியாணி,கேபேஜ் கேரட் மையானஸ் சாலட்.
மீன் பிரியாணி
ஆம்பூர் மட்டன் பிரியாணி
வெஜ் பிரியாணி
மேலே உள்ள பிரியாணிகளை லேபிள் பகுதியில் பிரியாணியை கிளிக் செய்தால் வரும்
இன்னும் தொடரும் என் பிரியாணி குறிப்புகள் பல குறிப்புகள் செய்து (சிக்கன் பிரியாணி, இறால் பிரியாணி) வைத்து நேரமின்மையால் போஸ்ட் செய்ய முடியாமல் இருக்கு.
இது இஸ்லாமிய இல்ல கல்யாணத்தில் வைக்கும் மிட்டாகானா குறிப்பு பிறகு பார்க்கலாம்.
பிறகு தான் நாளடைவில் பிரியாணியா மாறி ஊர் ஊருக்கு பல ருசிகளில் பிரியாணி தயாரிக்கிறார்கள். தலப்பா கட்டுபிரியாணி, ஆம்பூர் பிரியாணி, செட்டி நாடு பிரியாணி, ஹைதராபாத் பிரியாணி,எங்க ஊர் கல்யாணபிரியாணி என்று இன்னும் பல பிரியாணி வகைகள்.
பிரியாணி எப்படி வந்தது, போன பதிவுல பஜ்ஜிய பற்றி அய்யுப் மூலமா தெரிந்து கொண்டோம். பிரியாணிய பற்றி இங்கு போய் தெரிந்து கொள்ளுங்கள். பிரியாணியின் வரலாறு.
Tweet | ||||||
48 கருத்துகள்:
ஆஹா..
சேஎ...சே....சே.... ஜலீலாக்கா இன்று எங்கேயும் வட கிடைக்கவில்லை:).
ஓக்கை அஜீஸ் பண்ணிக்கொள்கிறேன்.
என்ன இது இப்பூடி பிரியாணியைப்போட்டுக்காட்டி, காலையிலயே தூண்டிவிட்டுவிட்டீங்களே......
கண்ணைக் கொள்ளை கொள்ளுதேஏஏஏ..
சூப்பர் படங்கள் ஜலீலாக்கா.
ஏன் சைவ பிரியாணி ஏதும் போடவில்லையே... மட்டின் பிரியாணி முழுவதும் எனக்குத்தான்..... ஆருக்கும் கொடுக்கமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
அதிரா கொஞ்சம் கண்ணை கழுவிட்டு பாருங்கோ, கடைசியா சைவ பிரியாணி இருக்கு.
இது முதலே ஊரிலிருந்து வந்ததும் போட்டு வைத்த பதிவு,
நோன்பு ஆகையால் சில குறீப்புகளை போட்டு விட்டு இப்ப தான் பப்லிஷ் கொடுத்தேன்.
நன்றி புவனேஸ்வரி
சூப்பரா படங்கள் போட்டு இப்பவே பிரியாணி சாப்பிடனும்னு ஆசை வர வெச்சிட்டீங்க. :))
களச்சாப்பாடு பற்றிய குறிப்பு அருமை. குட்டிப் பசங்க ஒண்ணா உக்காந்து சாப்பிடறதைப் பாக்கவே அழகா இருக்கு.
இந்த மும்தாஜ் மேட்டர், உங்களுக்கோ பாயிஷாவுக்கோ நான் முன்பே பின்னூட்டம் கொடுத்த நினைவு இருக்கிறது.
அந்த வழியாக நகர்வலம் சென்ற ஷாஜகான் ஒரு நல்ல சமையல் வாசனை அவர் பசியை தூண்ட, தனக்கு கொஞ்சம் அந்த உணவை வாங்கி வர சேவகனை அனுப்பினார், புதுமையான அந்த உணவின் சுவையில் வியந்த ஷாஜகான், இதை சமைத்தவருக்கு பரிசு தர விரும்பி அவரை அழைத்து வர சொல்ல, வந்த அந்த பெண்ணின் அழகில் மயங்கி அவரை திருமணம் செய்து கொண்டதாக வரலாறு.
(இதில் இன்னும் சில வரலாறு உண்டு ஆனால் அது இந்த இடுகைக்கு இப்போது தேவை இல்லை என்று நினைக்கிறேன்.)
வந்தவர் மும்தாஜ், அவர் கொடுத்து அனுப்பிய உணவு பிரட்டல், நாளடைவில் பிரியாணி :-)
ஆஹா..ஒரே நேரத்துல இத்தனை பிரியாணியை காட்டி ..ஜொள் வடிய விடுறீங்களே...
//மட்டின் பிரியாணி முழுவதும் எனக்குத்தான்..... ஆருக்கும் கொடுக்கமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.//
என்னது இது வயிறு பூஸு சைஸா யானை சைஸா ..ஹி..ஹி..(( வயிறு ஏன் இன்னைக்கு இப்பிடி புகையிது))
//அதிரா கொஞ்சம் கண்ணை கழுவிட்டு பாருங்கோ, கடைசியா சைவ பிரியாணி இருக்கு.//
அதையாவது இந்த பக்கம் தள்ளுங்க :-)))
வரலாற்று ஆசிரியை ஜலீலாக்கா வாழ்க வாழ்க
-----------------
இருந்தாலும் நோன்பு நேரத்துல இப்படி கணினி முன்பு உட்கார்ந்து ஜொள்ளுவுடறது சரியே இல்லை
---- என்ன சொன்னேன்
எல்லாமே அட்டகாசமாக இருக்கு.
ஆஹா இப்பவே கண்ணா கட்டுதே...
hi,
biryani varalaru supero super...
sameena@www.myeasytocookrecipes.blogspot.com
நேரங்கெட்ட நேரத்தில் படிச்சிட்டு ஆசையை அடக்க முடியலை.....
தப்பு..தப்பு ..நீங்கள் எல்லோரும் சொன்னது தப்பு.
பிரியான் என்பது fபார்சி மொழி அதுக் காலப் போக்கில் பிரியாணியாகிவிட்டது.
அரபியர்களும் பாரசிகர்களும் விரும்பி உண்ணும் உணவு, கடல் வணிகர்கள் மூலம் இந்த உணவு வட இந்தியாவுக்கும் நமது பக்கத்து மாநிலமான கேரளாவுக்கும் 1800 ஆம் வருஷம் வந்து இறங்கியது.
மொகலாய மன்னர்களுக்கு பிரியாணி என்றால் எதுவுமே தெரியாது.
முதன் முதலாக 1856 ல் கல்கத்தா நவாப் வாஜி அலிஷா அவர்கள் கல்கத்தா பிரியாணி என்று பெயரிட்டார்.
இன்னும் நிறையா எழுதுலாம்னு பார்த்தேன் நோன்பு நேரம் அதுனாலே டைம் இல்லை.
ஈரானியன் பிர்யாணி, கோபோளி பிரியானி, மலேசியன் பிர்யாணி , இந்தோனேசியன் பிர்யாணி , சிந்தி பிர்யாணி இடியப்பம் பிர்யாணி from ஸ்ரீ லங்கா , காஷ்மிரி யக்ஹ்னி பிர்யாணி .இன்னும் நிறையா இருக்கு.
ச்சே ..அவசரத்துலே பிரியாணியைப் பற்றி ஒண்ணுமே சொல்லாமல் போயி விட்டேன்.
எல்லாம் நல்லாவே பண்ணிருக்கிக, ரொம்ப சந்தோசம்
Jaleela Kamal said...
அதிரா கொஞ்சம் கண்ணை கழுவிட்டு பாருங்கோ, கடைசியா சைவ பிரியாணி இருக்கு.
/// ஜலீலாக்கா எவ்வளவு நல்ல விஷயம் சொல்லியிருக்கிறேன் அதை எல்லாம் விட்டுப்போட்டு, இப்படிச் சொல்லிட்டீங்களே...:((( கர்ர்ர்ர்ர்ர்ர்ர், உண்மையிலயே நான் அதைக் கவனிக்கவில்லை, காரணம் சில நேரங்களில் படம் தெரிவதில்லை, எழுத்துமட்டுமே தெரியுது.
பிரியாணியைக் கிளிக் பண்ணினால் குறிப்பு வரவில்லையே படம்மட்டும்தான் வருது, அதன் குறிப்புக்களை எங்குபோய்ப் பார்க்கலாம்?.
ஜெய்லானி said...
//.//
என்னது இது வயிறு பூஸு சைஸா யானை சைஸா ..ஹி..ஹி..(( வயிறு ஏன் இன்னைக்கு இப்பிடி புகையிது))//// ஜெய்... ஒட்டகம்மாதிரி, கட்டிலுக்குக்கீழ பதுக்கிவைக்கத்தான்:), வட கிடைக்காத நேரத்தில பிரயோசனப்படுமெல்லோ?:))).
சைவ பிரியாணி முழுவதும் உங்களுக்கேதான்:))), வேணுமெண்டால் “அந்தக்கா:)”வுக்கு கொஞ்சம் பிச்சுக்கொடுங்கோ:))))).
அக்கா, பசிக்கும் போது இந்த பக்கம் வந்துட்டேன்... இப்போ ........ பிரியாணி வாசம் வேறு...... ம்ம்ம்ம்ம்ம்......
wowww looks tempting...
Super virunthu. I am hungry now:) True and beautiful history on Mumtaz and her biryani. That story inspired me to learn cooking, as in our childhood we always pretend like a princess:)
தகவல் புதுசா இருக்கு அக்கா...
//நான் சின்ன வயசில் வெளியூரில் இருந்ததால் , களச்சாப்ப்ட்டில் உட்கார்ந்தால் ரொம்ப சுத்தம் பார்ப்பேன்.
கரெக்டா என்க்கு வரை பாத்தி கட்டி நடுவில் உள்ளது மட்டும் சாப்பிடூவேன்,//
அட நானும் உங்களை மாதிரிதாங்க.
பிரியாணியைப்பற்றி பெரிய ஆராய்ச்சியே செஞ்சிட்டிங்க. கலக்கல்.
திருமண வீட்டிற்கு செல்லும் பொழுதும் மறவாமல் கேமரா எடுத்துப்போய் பக்கா பிளாக்கர் என்று நிரூபித்து விட்டீர்கள் ஜலி.பெருநாள் நெருங்குது..பிரியாணி பற்றிய செய்தி பொருத்தமாக உள்ளது.
புது வ்ருகை தீபா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க ந்னறி
குட்டி பசங்க தோழி ஆசியா வீட்டு பசங்க
சிங்ககுட்டி உண்மையான வரலாற்றை அழகாக விளக்கியமைக்கு மிக்க ந்ன்றீ
எனக்கு தெரிந்ததை போட்டேன்
ம்ம்ம் பொருங்க அதிரா, ஜெயலானி இருவருக்கும் பிரியாணி உண்டு
சகோ.ஜமால் அப்ப இனி மாலையில் தான் பதிவ பப்லிஷ் பண்ணனும் போல
இது ஏற்கனவே போட்டு வைத்ததால் வந்துள்ளது.
நன்றி ஆசியா
உங்கள் பாராட்டுக்கு நன்றி வெறும் பய
டாக்டர் சமீனா உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
நன்றி தமிழ் உலகம்
தமிழரசி வாங்க ரொம்ப நாள் கழித்து வந்தமைக்கு கருத்து தெரிவித்தமைக்கும் நன்றி
அய்யுப் நீங்க ஒரு பிளாக் ஆரம்பித்து வரலாறை போட்டுடுங்க.
ரொம்ப நன்றி உங்கள் மூலமாகவும் உண்மையான பிரியாணி வரலாற்ற அறிந்து கொண்டேன்.
அதிரா சும்ம்மா தமாசுக்கு தான் சொன்னேன்.பிரியானி படம் மட்டும் தான் போட்டேன் லிங்க் எடுத்து போட நேரமில்லை,, பிளாக்கில் லேபிலில் பிரியானி சொடுகுங்கோ எல்லா பிரியாணியும் வரும்.
தொடர் ஊக்க கமெண்டுக்கு மிக்க நன்றி சித்ரா
உங்கள் பாராட்டுக்கும் விளக்கத்துக்கும் மிக்க ந்னறீ அய்யுப்
நன்றி மேனகா
விக்கி நன்றி
நன்றி சினேகிதி
நன்றி அக்பர் பிரியானியா போடுகிறோம் அடிப்படையில் பிரியாணி எப்படி வந்தது என்று நமக்கு தெரியாது இல்லையா அதான் தெரிந்த சின்ன தகவல் களை போட்டேன்.
இன்னொரு விஷியம் கூட அந்த காலத்தில் பிரியாணியை இவ்வள்வு பக்குவமா செய்யும் முஸ்லிம் கள் எல்லா விஷியத்திலும் மிகவும் பக்குவபட்டவர்கள் என்று நிறைய பேர் முஸ்லீம் மதம் மாறியும் இருக்கின்றனர் என்றும்.. கூட கேள்வி பட்டுள்ளேன்
ஸாதிகா பிளாக்கர் என்கிற போது கையில் என்னேரமும் கேமரா இல்ல்லை என்றால் எபப்டி.. ஹிஹி
நான் ஒரு பிளாக்கர் என்று இதுவரை எங்கு மூச் கூட விடல
கருத்து தெரிவித்த்மைககு மிக்க நன்றீ
உங்கள் வலைத்தளத்தின் பெயரைப்போலவே....பிரியாணியும்!!
பிரியானி சூப்பர். அக்கா
முதல் பந்தியில சாப்பிடும் அந்த நாலு பெரியவர்கள் யாரு
பலே பிரியாணி வகைகள்....
ஜோரான பிரியாணி பெயர் விளக்கம்...
சூப்பரான பிரியாணி வரலாறு விளக்கம்..
கலக்கல் ஜலீலா....
இந்தியா, பாகிஸ்தான் வங்கதேசம் (பண்டைய இந்தியா) இலங்கை தவிர வேறு எந்த அரபு தேசமோ, துருக்கியிலோ கூட பிரியாணி இல்லை அங்கெல்லாம் வெரும் புலாவ் (pilaf) தான். அது ஏன் ?
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). என் பெயர் அப்பாஸ். என்னுடைய ஊர் அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம். உங்கள் பதிப்புகளை நான் தவறாம்ல் படிக்கின்றேன். அதில் தக்காளி ரசம் மட்டும் செய்து பார்த்தேன். நன்றாக இருந்தது. மேலும் உங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன். நோன்பு நேரத்தில் அனைத்து வகை பிரியாணிகளையும் படம் போட்டு காண்பித்து ஈமானை சோதிக்கிறீர்களே! நன்றி.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா