Wednesday, August 18, 2010

ரெட் காக்டெயில் ஜூஸ் - red cocktail juice

எப்போது பழங்களை முன்று பழங்கள் சேர்த்து ஜூஸ் தயாரிப்பேன். அதில் இது ரெட் காக்டெயில் (ஏற்கனவே முக்கனி (காக்டெயில் ஜூஸ் இரண்டு கொடுத்துள்ளேன்) இன்னும் தொடரும் என் காக்டெயில் ஜூஸ்கள்.



தேவையானவை


தர்பூசனி - இரண்டு கப்

பிளம்ஸ் - முன்று பழங்கள்

மாதுளை - ஒரு பழம்

சர்க்கரை - தேவைக்கு

சுக்கு தூள் - அரை தேக்கரண்டி

ரூ ஆப் ஷா எஸன்ஸ் - ஒரு மேசை கரண்டி

தண்ணீர் - தேவைக்கு

ஐஸ் கட்டிகள் - எட்டு





செய்முறை


தர்பூசானியை கொட்டை நீக்கி இரண்டு கப் அளவு எடுத்து கொள்ளவும்.


பிளம்ஸ் (ஊட்டி ஆப்பில்) கொட்டை நீக்கியது முன்று பழம் தேவைப்பட்டல் இன்னும் இரண்டு அதிகம் சேர்த்து கொள்ளலாம்.


மாதுளை ஒன்று முழுவதும் பிரித்து எடுத்து கொள்ளவும்.



ஜூஸ் அடிக்கும் மிக்சியில் அனைத்து பழங்கள், சுக்கு,தேவைக்கு தண்ணீர் மற்றும் சர்க்கரை, ரூ ஆப்ஷா (அ) ரோஸ் எஸன்ஸ் சேர்த்து நன்கு கரைய அடித்து பெரிய துளையுள்ள வடிகட்டியில் வடித்து குடிக்கவும்.




வடிகட்டியில் வடிக்க முடிய விலை என்றால் அடித்து ஜூஸை சிறித் நேரம் வைத்தால் அதில் உள்ள கொட்டைகள் தெளிந்து அடியில் தங்கிவிடும். மேலோடு ஜுஸ் மற்றும் வடித்து கொள்ளலாம், இல்லை மஸ்லின் துணியில் வடித்து கொள்ளுங்கள்.







சுவையான் ரெட் காக்டெயில் ரெடி.


( நோன்பு காலங்களில் தினம் ஒரு வகை ஃபுரூட் ஜூஸ் (அ) ஜூஸ் வகைகள், ஜூஸும் நோன்பு கஞ்சியும் இருந்தாலே போதும்.) ஏற்கனவே போன வருட நோன்பில் நிறைய ஜூஸ் வகைகள் போட்டுள்ளேன், சில லிங்குகளை ஓவ்வொரு குறிப்பு கொடுக்கும் போதும் லிங்க் தருகிறேன்.
இதில் ரோஸ் மில்க் லிங்க் உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் பழைய போஸ்டுக்கும் உங்கள் அன்பான கமெண்டையும் ஓட்டையும் தெரிவிக்கலாம்.

(இதில் சுக்கு சேர்த்துள்ளது சளி பிடிக்காமல் இருக்க, சுக்குக்கு பதில் சிறிது இஞ்சி சாறு (அ) சிறிது மிளகுதூள் கூட சேர்க்கலாம்)
இதில் எட்டு டம்ளர் வரும்


31 கருத்துகள்:

jokkiri said...

ரெட் காக்டெயில் ஜூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..

ஜில்...ஜில்...ஜில்லுனு இருக்கு.....

ஜெய்லானி said...

ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சே...!!

ஜெய்லானி said...

இன்னும் நேரம் இருக்கு(இஃப்தார்) அதனால் நோ கமெண்ட்ஸ்..

Jaleela Kamal said...

முதல் கமெண்டுக்க்கு மிக்க நன்றி கோபி.

இத பார்த்ததும் எல்லோருக்கும் உடனே செய்ய தோனும்,

Jaleela Kamal said...

நன்றி ஜெய்லானி
நோன்பு திறக்கும் போது குடித்தால் நல்ல வயிறுக்கு ஜுல்லுன்னு இருக்கும்.

நட்புடன் ஜமால் said...

சுக்குமா!!!

சசிகுமார் said...

வழக்கம் போல கலக்குங்க அக்கா

Jaleela Kamal said...

சகோ ஜமால் வாங்க , நலமா?ஹாஜர் எப்படி இருக்காங்க
சுக்கு சளி பிடிக்காமல் இருக்க சிறிது சேர்த்துள்ளேன்.
குறிப்பிலும் எழுதி உள்ளேன் பாருங்கல்.

Jaleela Kamal said...

நன்றி சசி தம்பி

ஸாதிகா said...

நோன்புகாலத்திற்கேற்ற அருமையான உணவு வகைகளை அள்ளித்தரும் ஜலீலாவுக்கு நன்றிகள்.

Asiya Omar said...

அருமையான ஜூஸ்.

சாருஸ்ரீராஜ் said...

ரெட் காக்டெயில் ஜூஸ் சூப்பர்......

GEETHA ACHAL said...

ஜுஸ் சூப்பர்ப்...ஒரே சிவப்பு மயமாக இருக்கின்றது....

தெய்வசுகந்தி said...

சூப்பர் ஜூஸ்!!!!

Menaga Sathia said...

சூப்பர்ர் கலர்புல் ஜூஸ்...


உங்களின் மட்டன் கீமா கஞ்சியை நான் சோயாவில் செய்து பார்த்து பதிவு போட்டுள்ளேன்..சுவையான் குறிப்பு மிக்க நன்றி அக்கா..

Praveenkumar said...

ம்.. ம்.. தொடர்ந்து சுவாரஸ்யமான.. சமையல் குறிப்புகள் கொடுத்து அசத்துறீங்க.. கலக்குங்க.. மேடம்

Angel said...

tasty coctail.i ve voted for this recipe

Chitra said...

Tasty cool summer treat drink! :-)

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஜூஸ் அப்படியே குடிக்கணும்போல இருக்கு..

R.Gopi said...

ஜலீலா மேடம்....

உங்களின் இந்த பதிவிற்கு தமிழிஷ்/இண்ட்லியில் வாக்களிக்க / ஓட்டளிக்க முற்பட்டபோது, நானே அதை சமர்பிக்க வேண்டியதாகி விட்டது...

ஆகவே, இந்த பாராட்டு உங்களை சேர வேண்டியது... நான் சமர்பித்ததால் என்னை தேடி வந்தது... அதை அப்படியே உங்களுக்கு அனுப்புகிறேன்..

Hi rgopi3000,

Congrats!

Your story titled 'ரெட் காக்டெயில் ஜூஸ் - red cocktail juice' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 19th August 2010 09:00:03 AM GMT



Here is the link to the story: http://ta.indli.com/story/323501

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

நட்புடன் ஜமால் said...

டேஸ்ட் நல்லா இருக்குமா என்பதற்காக கேட்டேன் - முயற்சித்து தான் பார்ப்போமே!

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா ரொம்ப நாள் கழித்து இங்கு பார்ப்பது ரொம்ப சந்தோஷம்.

நோன்பில் வேலை அதிகமா.

Jaleela Kamal said...

நன்றி ஆசியா
நன்றி சாரு
நன்றி கீதா ஆச்சல்

Jaleela Kamal said...

நன்றி தெய்வ் சுகந்தி

நன்றி மேனகா
கஞ்சி செய்து பார்த்து உங்கள் முறையில் போட்டது ரொம்ப சந்தோஷம்

Jaleela Kamal said...

பிரவின் குமார் உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

ஓட்டுக்க்கும், கமெண்டுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின், வருகைக்கும் மிக்க நன்றி

Jaleela Kamal said...

நன்றி
சித்ரா

Jaleela Kamal said...

ஸ்டார்ஜன் நீங்கள் தான் சமையல் ராஜா வாச்சே உடனே ஐந்து நொடியில் தயாரித்து குடிக்கலாமே.

Jaleela Kamal said...

கோபி உங்கள் தொடர் வருகைக்கும், கமெண்டுக்கும், சம்மிட் செய்ததற்கும் மிக்க நன்றி

Kanchana Radhakrishnan said...

சூப்பர் ஜூஸ்!!!!

Jaleela Kamal said...

நன்றி காஞ்சனா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா