பாரம்பரிய சமையலுடன் சிறப்பு விருந்தினர் பதிவு - ராபியத்துல் பஷரியா - வெந்தயக்களி
இந்த மாதம் பாரம்பரிய குறிப்பை நம்முடன் பகிரவுள்ள சிறப்பு விருந்தினர்
முக நூல் தோழி மற்றும் அறுசுவை டாட் காம் வாசகி + தோழி
ராபியத்துல் பஷரியா அவர்களின் குறிப்பு அதை நான் இங்கு செய்து பதிந்துள்ளேன்.
இதை சமையலில் 35 வருட அனுபவமுல்ல ராபியா அவர்களின் அனுபவ குறிப்பு. ராபியத்துல் பஷரியா மதுரையை சேர்ந்தவர்கள். ஒரு பெண் , இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் தான் மகனுக்கு திருமணம் ஆகியது, மணமக்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.மகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது, கடைசி மகன் படித்து கொண்டிருக்கிறார்.
வெந்தய களி சாப்பிடுவதின் பயன்கள்
.வெந்தயம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள புண்கள் குணமாகும். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் தீராத வயிற்று வலி, இடுப்பு வலி , கால் வலி க்கு இந்த களி ( வெந்தய ஹல்வா) வை செய்து சாப்பிட்டால் உடனே சரியாகும். கழுத்து நரம்பு வலி, மூட்டு வலிக்கும் நல்லது..எலும்பு வலிக்கும் நல்லது,ஆண்களும் இதை சாப்பிடலாம்.
வெந்தயக்களி (வெந்தய ஹல்வா)
பரிமாறும் அளவு - ஒரு நபருக்கு
தேவையான பொருட்கள்
வெந்தயம் - இரண்டு தேக்கரண்டி
நல்லெண்ணை - கால் கப்
கருப்பட்டி வெல்லம் - இரண்டு கட்டி (அ) 100 கிராம்
தண்ணீர் அரை டம்ளர் - அரை டம்ளர்
செய்முறை
- வெந்தயத்தை களைந்து கல் நீக்கி அதில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். ( இரவு ஊறவைக்கவும்)
- கருப்பட்டியை நன்கு இடித்து பொடித்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு பாகு எடுத்து வடிகட்டி வைக்கவும்.
- ஊறிய வெந்தயத்தை நன்கு மையாக அரைக்கவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தை சூடாக்கி நல்லெண்ணை அரைத்த வெந்தயம் கருப்பட்டி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு சிறிது வற்றி வரும் போது அடிபிடிக்காமல் கிளறவும்.
- நன்கு எண்ணை மேலே தெளிந்து லேகியம் போல் ஆகும் வரை சுருள கிளறி இரக்கவும்.
- இதை பெண்கள் மாதவிடாய் வரும் முன் தொடர்ந்து முன்று நாட்களுக்கு ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிடவும்.
கவனிக்க
கசப்பு தெரிந்தால் சிறிது தேன் சேர்த்து சாப்பிடுங்கள்.
இந்த ஒரு நபருக்கு அளவு முன்று வேளைக்கு சாப்பிட வரும்.
இன்னும் சுவை கூட வெந்தயத்துடன் சிறிது அரிசியையும் ஊறவைத்து அரைக்கவும்.
மேலும் தேங்காய் பால் சிறிது சேர்த்து கிளறி செய்யலாம்.
இது தோழி ராபியத்தில் பஷரியாவின் குறிப்பு. சாட்டில் சொன்னது நான் இங்கு செய்து போட்டுள்ளேன்.
***********************
வெந்தய களி சாப்பிடுவதின் பயன்கள் - கிழே உள்ளது என் டிப்ஸ்
வெரும் வயிற்றில் 5 வெந்ததயத்தை எடுத்து மாத்திரை போல் போட்டு தண்ணீர் அருந்தினால், எல்லாவிதமான நோயையும் சர்க்க்கரை வியாதியைவும் கட்டு படுத்தும், ( இது நான் என் பாட்டி வீட்டில் இருந்த போது அங்கு வீட்டில் ரொம்ப வருஷமாக வேலை பார்த்த பெண் (அவங்க இல்ல இல்லை) தினம் இதை சாப்பிடுவார்கள்.)
ஒல்லியாகனும் என்று நினைப்பவர்கள் வரும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டு தண்ணீர் அருந்தினால் நல்ல பலன் தெரியும்.
இரவில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை இரண்டு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து காலையில் அதை கொதிக்க வைத்து ஒரு டம்ளராக்கி குடித்து வருவது கூடிய சர்க்கரை வியாதிக்கு நல்லது.
வெந்தய பொடியை கருகாமல் வறுத்து பொடியாக்கி வைத்து கொண்டு புளி குழம்புகளில் , பொரியலில் கால் தேக்கரண்டி அளவு சேர்த்து கொண்டால் வயிற்றுக்கு மிகவும் நல்லது.
=========================************=================
நீங்களும் உங்கள் பாரம்பரிய சமையல் குறிப்புகளை இங்கு என்னுடன் பகிர விரும்பம் உள்ளவர்கள் உங்கள் ஊரின் பாரம்பரிய சமையல் குறிப்புகள் அல்லது நீங்கள் வசிக்கும் நாட்டின் பாரம்பரிய சமையல் குறிப்புகளை என்னுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.என்ன குறிப்பாக இருந்தாலும், அதாவது டிபன் வகை, மதிய உணவிற்கு செய்யும் கறி வகைகள், மாலை நேர சிற்றுண்டி மற்றும் இரவு சாப்பாடு வகைகள்.குழந்தைகளுக்கு செய்யும் உணவு, கர்பிணி பெண்களுக்கான உணவு, பூப்பெய்திய பெண்களுக்கான உணவு, பிள்ளை பெற்றவர்களின் பத்திய உணவு, திருமணத்தில் செய்யும் முக்கிய வகை உணவு, விஷேச நாட்களில் செய்யும் பலகாரம்மற்றும் பல.....வகைகளை அனுப்பலாம்.. நானும் சிலரை அழைக்கிறேன்...விருப்பம் உள்ளவர்கள் இங்கு கிழே என் பதிவின் கீழ் கருத்து தெரிவிக்கலாம் அல்லது கிழே கொடுக்கப்பட்டுள்ள என் முகவரிக்கு மெயில் அனுப்புமாறு கேட்டு கொள்கிறேன்.
feedbackjaleela@gmail.com or cookbookjaleela@gmail.com
Special Guest post with Traditional Recipe
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
7 கருத்துகள்:
செய்து பார்க்கிறோம்... ராபியத்துல் பஷரியா அவர்களுக்கும் நன்றி...
வெந்தயக்களி ..மிகவும் நல்லதின்னு கேள்விபட்டிருக்கேன் .இப்போதான் ரெசிப்பி தெரிந்துகொண்டேன்
பகிர்வுக்கு நன்றி .ஊரிலிருக்கும்போது வயிறு வலி வந்தா உடனே அம்மா தருவது ஒரு ஸ்பூன் வெந்தயம் ,கொஞ்சம் தேன் ஒரு கப் தண்ணீர் வலி காணமாபோயிடும்
தனபாலன் சார் என் பதிவுகளுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பதற்கு மிகவும் நன்றி
ஆமாம் ஏஞ்சலின் நானும் இது செய்ததில்லை அப்படியே வாயில் போட்டு வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்போம் அல்லது வெந்தய பொடி மோரில் கலந்து குடிப்போம். சமையலில் கலந்து கொள்வோம்,
ராபியத்துல் பஷரியாவின் குறிப்பு அனைத்து பெண்களுக்குமே மிகவும் பயனுள்ள்தாக இருக்கிறது.
இந்த குறிப்பு உங்கள் அம்மாவை நினைவு படுத்தியுள்ளது.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்
இது மிகவும் புதுமையாக உள்ளது அக்கா.
நிச்சயமாக இது உடம்புக்கு நல்லதுதான்.நானும் நிறைய வெந்தயம் சேர்த்து கொள்வேன்.இதையும் முயற்ச்சித்து பார்த்து விடுகிறேன்.பகிர்வுக்கு தங்களுக்கும்,இந்த சத்துள்ள குறிப்பை வழங்கிய சகோதரி ராபியாவுக்கும் பாராட்டுக்கள்.
அப்சரா.
ஆமாம் அபச்ரா நானும் இப்ப தான்முதல் தடவையாக செய்து சாப்பிட்டேன்.
நானும் வெந்தயத்தை அப்படியே தான் சேர்த்து கொள்ளுங்கள், வருகைக்கு மிகவும் நன்றி அப்சரா
மிக அருமையான குறிப்பு ஜலீலா. செய்து பார்க்கிறேன் :)
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா