சாஃப்ட் கோதுமைமாவு பூரி /Wheat Puri & உருளை கிழங்கு மசலா
Serves : 7 Person
Preparation Time + Cooking Time -
Puri Baji/Puri Masala
தேவையான பொருட்கள்.
சக்கி ப்ரஷ் chakki fresh or daily fresh கோதுமை மாவு – 800 கிராம்
உப்பு – இரண்டு தேக்கரண்டி
சூடானா பால் – அரை டம்ளர்
சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
தண்ணீர் – முக்கால் டம்ளர் + தேவைக்கு
இட்லி சோடா – ஒரு பின்ச்
செய்முறை
தண்ணீரில் உப்பு, இட்லி சோடா, சேர்த்து , மாவில் ஊற்றி கலக்கவும், சூடானா பாலையும் சேர்த்து நன்கு பிசையவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்து பிசைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
அதற்குள் தேவையான உருளை மசாலாவை தயாரித்து விடலாம்.
குழைத்த மாவை நெல்லிக்காய் அளவுக்கு உருண்டை பிடித்து சிறிய வட்ட வடிவ பூரிகளாக இடவும்.
ஒரு இரும்பு வானலியை சூடு படுத்தி ஒவ்வொன்றாக போட்டு பொங்க விட்டு சுட்டு எடுக்கவும்.
பூரியை கொதிக்கும் எண்ணையில் போடும் போது தீயின் தனலை மிதமாக வைக்கவேண்டும்.
பூரியை எண்ணையில் போட்டதும் சும்மா சும்மா திருப்பி போட கூடாது , அப்படி போட்டால் எண்ணை அதிகமாக உள்ளே இழுத்து கொள்ளும்.
உருளை மசாலா ( இது என் அம்மாவின் ஸ்பெஷல் உருளை மசாலா)
தேவையான பொருட்கள்.
உருளை கிழங்கு – அரை கிலோ
நீளமாக நருக்கிய வெங்காயம் – கால் கிலோ
பொடியாக நருக்கிய பச்ச மிளகாய் – 2
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிக்கை
உப்பு – ஒரு தேக்கரண்டி
தக்காளி – அரை பழம்
தாளிக்க
எண்ணை – 5 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
கடலை பருப்பு – அரை தேக்கரண்டி
காஞ்ச மிளகாய் – இரண்டு
கருவேப்பிலை – சிறிது
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
கொத்து மல்லி தழை – சிறிது
செய்முறை
உருளை கிழங்கை குக்கரில் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து சிறிது உப்பு போட்டு 4 , 5 விசில் விட்டு வேகவைக்கவும்.
குக்கர் ஆவி அடங்கியதும். கிழங்கை எடுத்து தண்ணீரை வடித்து தோலை நீக்கி விட்டு நன்கு மசித்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற வானலியை சூடு படுத்தி எண்ணை விட்டு காயவைத்து கடுகு, காஞ்ச மிளகாய், உ.பருப்பு, க.பருப்பு கருவேப்பிலை, சிறிது வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கருகாமல் தாளிக்கவும்.
மீதி உள்ள எல்லா வெங்காயம் + பச்சமிளகாய் சேர்த்து வதக்கி மூடி போட்டு 2 நிமிடம் மடங்க விடவும்.
பிறகு தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி மேலும் 2 நிமிடம் வதங்க விடவும்.
பிறகு மசித்து வைத்துள்ள உருளையை சேர்த்து நன்கு கிளறி கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு நன்கு ஒரு சேர வேக விடவும்.
கடைசியாக கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.
சுவையான உருளை மசாலா ரெடி, இது என் அம்மாவின் செய்முறை பள்ளி நாட்களில் வாரம் ஒரு முறை கண்டிப்பாக காலை டிபனும் மதிய டிபனுக்கும் இதான். எனக்கும் ரொம்ப பிடிச்ச டிபன், அதே போல் என் பையன்களுக்கும் இதை செய்து சாண்ட்விச் போல செய்து கொடுப்பேன். என் பையன்களின் ப்ரண்ட்ஸ் பேவரிட்டாகவும் ஆகிவிட்டது. என் கணவரும் எடுத்து செல்வார், அங்கு எல்லாருடைய பேவரிட் டிபன் ஆகிவிட்டது.
கவனிக்க
பூரிக்கு மாவு குழைக்கும் போது கொஞ்சம் கெட்டியாக குழைத்து சிறிது நேரம் ஊறவைத்து சிறிய உருண்டைகளாக போட்டு , லேசாக எண்ணை தொட்டு உருட்டவேண்டும். எண்ணை அதிக சூடும் ஆகக்கூடாது. பூரியை போட்டத்தும் அடிக்கடி பிரட்டி விடகூடாது. மாவு வட்டவடிவமாக சமமாக சற்று தடிமனாக உருட்டனும்.
How to Make Soft Puri?
முகநூலில்
அனீஸ் பர்வீன் உமர் காக போட்டுள்ளேன்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
4 கருத்துகள்:
எங்களுக்கும் இனி மேல் பேவரிட் டிபன்... நன்றி சகோதரி...
பூரிக்கும் எனக்கும் 8ம்பொருத்தம். எண்ணெய் குடித்துவிடும்.அதனால் செய்வதில்லை.மகனுக்கு விருப்பம். உங்க செய்முறையை நிச்சயம் செய்துபார்க்கிறேன்.டிப்ஸுடன் பகிர்வுக்கு நன்றி ஜலீலாக்கா.
பூரி,உருளைக்கிழங்கு மசாலா இரண்டும் அசத்தலா இருக்கு.இது எங்களுக்கு மிகவும் பிடித்த டிபன்.
ஆஹா.என் உருளைக்கிழங்கே. மசலா இதுபோல சாப்பிட்டு எத்தனை நாளாச்சு,. எங்க அம்மா பக்குவம் போல இருக்கு ஜலீலா. கடக் முடக்குனு பருப்பு பல்லில் அகப்பட் அ குழைந்த உ கிழங்கு நாக்கில் கரைய. இதையே ஒரு மீல் ஆக சாப்பிட நான் ரெடி.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா