- சிக்கன் எலும்பில்லாதது 150 கிராம்
- புரொக்கோலி 50 கிராம்
- கேபேஜ் 50 கிராம்
- கேரட் 25 கிராம்
- கொடமிளகாய் 25 கிராம்
- வெங்காயம் 1
- இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி
- ஒரிகானோ 1/2 தேக்கரண்டி
- உப்பு
- சர்க்கரை
- பட்டர் + எண்ணை 3 தேக்கரண்டி
- ப்ரட் ஸ்லைஸ் 10
- ஒரு ப்ரை பேனில் எண்ணை + பட்டரை காயவைத்து வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
- பிறகு சிக்கன் மற்றும் ஒரிகானோ சேர்த்து வதக்கி 2 நிமிடம் வேக விடவும்.
- பிறகு கேரட், பீன்ஸ்,கேபேஜ் சேர்த்து வதக்கி கடைசியாக புரோக்கோலி, கொடமிளகாய்,உப்பு , சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கி இரக்கி ஆறவைக்கவும்.
- பிரட் ஸலைஸ்களை பட்டர் சேர்த்து தவ்வாவில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்து அதன் இருபுறமும் கெட்சப் தடவி. வதக்கிய பில்லிங்கை ப்ரட்டின் ஒரு புறம் வைத்து மற்றொரு பிரட்டை வைத்து மூடவும்.
இதை த்வ்வாவில் பொரிப்பதற்கு பதில் டோஸ்டரிலும் ஈசியாக் செய்துவிடலாம்.
இந்த சாண்ட்விச் ரொம்ப அருமையாக இருக்கும் , படங்கள் தான் சரியாக எடுக்க முடியவில்லை, நிறைய ரெசிபி படங்கள் சரியாக இல்லாததால் போஸ்ட் பண்ண முடியாமல் இருக்கு. இது முன்பு பிட்சா செய்துட்டு மீதி பில்லிஙகை இப்படி சாண்ட் விச்சாக தயாரித்து என் பையனுக்கு பள்ளி லன்ச்க்கு கொடுத்து அனுப்பினேன் . அங்குள்ள எல்லா பிள்ளைகளுக்கும் ரொம்ப பிடிச்சி இருந்தது என்றான்.
Ragi Rava Dosa
http://samaiyalattakaasam.blogspot.com/2014/03/ragi-dosai.html
Coconut Mini Pancake
http://samaiyalattakaasam.blogspot.com/2014/01/coconut-mini-pancake.html
| Tweet | ||||||





2 கருத்துகள்:
உங்கள் தளத்தில் கருத்துரை இடுவது உட்பட எதை சொடுக்கினாலும், புதிய தேவையில்லாத... ????????????? !!!!!!!!!!!!!!!!
எதற்கும் இதை வாசிக்கவும் --> http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-4.html
Thanks for the entry!..looks quite good..
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா