ஒரு சந்தோஷமான விசியம் பார்லிஜி பிஸ்கட் நடத்திய பண்டிகை பலகாரங்கள் சமையல் போட்டிக்கு நான் அனுப்பிய (ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட் பேரிட்சை ஹல்வா மற்றும் ஹைட் அன்ட் சீக் தேங்காய் பிஸ்தா பர்பி) இரண்டும் தேர்வாகி போட்டியில் பங்கு பெற அழைப்பு வந்தது, நான் இது வரை நேரடி சமையல் போட்டிகளில் கலந்து கொண்டதில்லை இது தான் முதல் தடவை, அங்கு சென்று மறுபடி ஹைட் அன்ட் சீக் தேங்காய் பிஸ்தா பர்பி செய்து கொண்டு போய் வைத்தேன். அதில் 75 பேர் கலந்து கொண்டனர் 21 பேர் பைனல்க்கு தேர்வாகியதில் அதில் நான் ஒன்று.
இங்கு இந்த பதிவை பார்ப்பவர்கள் அந்த லைவ் குக்குங் யுடியுப் போஸ்டில் ஒரு உங்கள் கருத்துக்களை ஷேர்செய்யலாமே..
இனிப்பு,ஹல்வா,பண்டிகை கால பலகாரங்கள்
16.12.18
பிறகு அங்கு 21 பேரையும் இரண்டு பேட்சாக சமைக்க சொல்லி 20 நிமிடம் கொடுத்தார்கள்.தேவையான பொருட்களும் அவர்கள் அங்கு என்ன வைத்துள்ளார்களோ அதில் தான் செய்யனும்.
எனக்கு ஒரேடென்ஷன் செலக்ட் ஆகிறோமோ இல்லையோ ஆனால் ஏதாவது ஒரு ரெசிபி செய்துடனும் என்று ஹல்வா செய்துட்டேன். கிழே படம் இனைக்கிறேன்.
அங்கு செப்ஃப் ராகேஷ் ரகுநாதன் அவர்களை சந்தித்தோம் அவரும் ஶ்ரீ கிருஷனா ஸ்வீட்ஸ் செப்ஃப் களும் தான் அனைவருடைய பலகாரங்களையும் டேஸ்ட் செய்து மார்க் கொடுத்த்தது, அங்கு செலக்ட் ஆன ரெசிபிகள் சர்க்கரை பொங்கல் , பால் கொழுக்கட்டை மற்றும் சாக்லேட் பர்பி.
கிழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள் லைவ் குக்கிங் ,
இன்னும் நான் ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட் சேர்த்து கேசரியும் செய்து எடுத்து சென்றேன், செஃப் என் ரெசிபிகளை ருசி பார்த்தார், ரொம்ப அருமையாக இருக்கிறது என்றார். பர்ஃபி,கேசரி, ஹல்வா முன்றையும் அவர்கள் ருசி பார்த்ததில் மிகவும் சந்தோஷம்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
1 கருத்துகள்:
உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜலீலா.
எல்லா கணொளிகளையும் பொங்கல் முடிந்தவுடன் பார்க்கிறேன்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா