
Arabic Sweet Recipes/Healthy Sweet Recipes
ஹைட் அன்ட் சீக் டேட்ஸ் ஹல்வா
ஹைட் அன்ட் சீக் டேட்ஸ் ஹல்வா
தேவையான பொருட்கள்
பேரிட்ச்சை பழம் = 250 கிராம்
ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட் = அரை பாக்கெட்
தேன் = ஒரு மேசைகரண்டி
வறுத்த முந்திரி = 50 கிராம்
உப்பு = அரை சிட்டிக்கை
பட்டர் 3 மேசைகரண்டி
ப்ரவுன் சுகர் = 1 மேசைகரண்டி
செய்முறை
பேரிட்சைபழத்தை சுடு வெண்ணீரில் ஊறவைத்து சிறிது ஷாப்ட் ஆனது கொட்டையை எடுத்து விட்டு மிக்சியில் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
ஒரு பேனில் பட்டரை உறுக்கி அதில் அரைத்த பேரிட்சை விழுதை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்
அடுத்து ஹைட் அன்ட் சீக் பிஸ்கேட்டை பொடித்து சேர்க்கவும். அடுத்து உப்பு, ப்ரவுன் சுகர் சேர்த்து நன்கு ஹல்வா பதத்துக்கு கிளறி கடைசியாக தேன் மற்றும் வறுத்த முந்திரியில் 35 கிராம் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
நன்கு கிளறி பரிமாறும் பவுளில் மாற்றி விட்டு மேலே மீதி இருக்கும் முந்திரியை கொண்டு அலங்கரிக்கவும்.
சுவையான பேரிட்சை பழ ஹைட் அன்ட் சீக் ஹல்வா ரெடி.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா