இறாலில் கூட்டு மற்றும் சால்னா பிரியாணி செய்து அலுத்து போனால் இது போல் மஞ் சூரியன் கிரேவி போல் செய்தால் இரவு வேளை சாப்பாத்தி , ரொட்டி நாண் வகைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
ஹோட்டலில் போனால் பெருமபாலும் அநேகமாக அனைவரும் ஆர்டர் செய்வது சிக்கன் ம்ஞ்சூரியன் வெஜ் பிரியர்கள் காலிப்ளவர் மஞ்சூரியன் தான், அதே நாம வீட்டிலேயே எளிமையாக தயாரித்து விடலாம்.
பரிமாறும் அளவு : 3 Persons
பிரான் மஞ்சூரியன் கிரேவி
பிரான் (பெரியது) – கால் கிலோ
கிரேவிக்கு
எண்ணை + பட்டர் – இரண்டு மேசை கரண்டி
வெங்காயம் – ஒன்று
பூண்டு – நான்கு பல்
வெங்காய தாள் – இரண்டு ஸ்ரிக்
சோயா சாஸ் – முன்று குழி கரண்டி
கெட்சப் – இரண்டு மேசை கரண்டி
சர்க்கரை – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
மிளகாய் தூள் – அரை தேக்க்ரண்டி
கார்ன் மாவு – ஒரு மேசை கரண்டி
பிரான் பொரிக்க
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி (அ) வெள்ளைமிளகு தூள்)
உப்பு – சிறிது
மைதா – ஒரு குழிகரண்டி
கார்ன் மாவு – ஒரு மேசை கரண்டி
முட்டை – ஒன்றில் பாதி
செய்முறை
1. பிரானை சுத்தம் செய்து அதில் பொரிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 5 நிமிடம் ஊறவைக்கவும்
2. ஊறிய பிரானை எண்ணையில் பொரித்து எடுத்து தனியாக வைக்கவும்.
3. எண்ணை + பட்டரை காயவைத்து வெங்காயம், பூண்டு , ஸ்ப்ரிங் ஆனியனை போட்டு வதக்கவும்.
4. அதில் சோயா சாஸ், கெட்சப், உப்பு, மிளகாய் தூள் ,சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
5. கடைசியாக கார்ன் மாவை முக்கால் டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க் விடவும்
6. பொரித்து வைத்த பிரானை சேர்த்து மீண்டு கொதிக்கவிட்டு இரக்கவும்.
7. சுவையான பிரான் மஞ்சூரியன் கிரேவி ரெடி
8. பரோட்டா, சப்பாத்தி, தந்தூரி ரொட்டி , பிரைட் ரைஸுக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்.
இந்த குறிப்பு இரண்டு வருடம் முன்பே தமிழ்குடும்பம் டாட் காமில் பகிர்ந்த குறிப்பு தான்.
Tweet | ||||||
11 கருத்துகள்:
I just loveeee prawn..Such a crazy fan I'm.. This surely is a treat for me, looks really delicious.Kindly visit my new domain and continue ur support as ever..
Kitchen Secrets and Snippets(formerly jellybelly-shanavi)
ஆஹா! சூப்பர், எனக்கு பிடித்தமான டிஷ்.
கிரேவி சூப்பர். கொஞ்சம் பொறுமை வேணும்போல இதைச் செய்வதற்கு.
Aha paka supera iruku, I love manchurians..Looks too tempting akka.. :)
அருமையான சுவையான கிரேவி... நன்றி சகோதரி... (2)
ஹோட்டல் கிரேவி போல் இருக்கு.
மிக்க நன்றி ஷான்வி
நன்றி ஆசியா
அதிரா இதற்கு பொறுமை எல்லாம் தேவையில்லை மிகச்சுலபம்
வருகைக்கு மிக்க நன்றி திவ்யா
நன்றி தனபாலன் சார்
ஆமாம் ஸாதிகா அக்கா ஹோட்டலில் சாப்பிடுவது போலவே இருக்கும்
ஹனிபுக்கு மஞ்சூரியன் என்றால் ரொம்ப் பிடிக்கும்
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா