டயட் செய்பவர்களுக்கு மிக அருமையான சாலட், காலை நேரம் ஒரு பவுள் சாப்பிடலாம்.
கர்பிணி பெண்களுக்கும் சாப்பிட வாய்க்கு ருசியாக இருக்கும்.
பார்டியில் வைக்க சுலபமான சாலட் .பார்க்க கலர் ஃபுல்லாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
மாங்காய் - சிறியது ஒன்று
வேகவைத்த ராஜ்மா - 2 மேசை கரண்டி
கலக்க வேண்டிய சாஸ் வகைகள்:
லெமன்,தேன், மிளகு தூள், உப்பு - தலா கால் தேக்கரண்டி
செய்முறை:
மாங்காயை 2” நீளத்துக்கு ஸ்லைஸ் செய்யவும்.
அத்துடன் ராஜ்மாவை சேர்க்கவும்.
ட்ரெஸ்ஸிங் கலவையை நன்கு கலக்கி மாங்காய் ராஜ்மா கலவையுடன் சேர்க்கவும்.
குளிரூட்டியில் அரை மணி நேரம் குளிரவைத்து சாப்பிடவும்.
ராஜ்மா வேக வைக்கும் முறை: ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ராஜ்மாவை முழுகும் வரை தண்ணீர் சேர்த்து 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறியதும் குக்கரில் சிறிது உப்பு சேர்த்து ஒரிரு விசில் வைத்து இரக்கவும்.
வெந்ததை வடிக்கட்டி சாலட்க்கு பயன் படுத்தவும்.
வெளிநாடுகளில் டின் களில் கிடைக்கின்றன பேச்சுலர்களுக்கும் இன்னும் சுலபம், இப்போது மாங்காய் சீசன் என்பதால் அடிக்கடி வாங்கி இப்படி செய்து சாப்பிடலாம்.
இதே போல் கொண்டைகடலை வேர்கடலை போன்றவை வேகவைத்து அதனுடன் மாங்காய் சேர்த்து செய்தும் சாப்பிடலாம்.
. அவசர பசிக்கு உடனடி ஹெல்தி சாலட் . நல்லதொரு பில்லிங்காக இருக்கும்.
ராஜ்மா அதிக அளவில் உணவில் சேர்த்து கொண்டால் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.
இது என்னுடைய ஐடியா.ராஜ்மா மசாலாசெய்து சாண்ட்விச் செய்தேன், அப்படியே மீதமுள்ள ராஜ்மாவில் இபப்டி செய்தது.
எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது, உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
8 கருத்துகள்:
மாங்காய் ராஜ்மா சாலட் மிக நன்றாக இருக்கிறது ஜலீலா.
அதன் செய்முறை விளக்கம், மருத்துவ பயன்கள் எல்லாம் அருமை.
நன்றி.
நல்ல பகிர்வு....
ராஜ்மாவுடன் மாங்காய் - வித்தியாசமாகத் தான் இருக்கிறது.
சூப்பரான பதிவு.
பதிவைப் பார்த்ததும் படித்ததுமே மஸக்கைக்காரி போல மாங்காயைத் தேடுகிறது என் நாக்கு.;)))))
கர்ப்பணிப்பெண்களுக்கோ கேட்கவே வேண்டாம்.
மிக நல்ல பதிவு. ருசிமிக்கதாக உள்ளது. பாராட்டுக்கள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.
சிம்ப்ளி சூப்பர்ப்.
நல்ல சத்துமிகு சாலட் மற்ரும் சிம்பிளாக செய்யும் சாலட்.
ருசியான சாலட்டாக இருக்கும் போல் தெரிகிறது.
சலட் நன்றாக இருக்கின்றது.
அன்பின் ஜலீலா கமால் - செய்முறை விளக்கம் அருமை - மாங்காய் ராஜ்மா சாலட் - கர்ப்பிணீப் பெண்களுக்கான ஸ்பெஷலா ? நன்று நன்று - வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா