இது இஸ்லாமிய இல்ல கல்யாண விருந்துகளில் மாப்பிள்ளை தஸ்தரில் வைக்கும் பல வித கீர் வகைகளில் ஒன்று அரிசி பாதம் கீர், இதில் தர்பூசணி ஜூஸ் மட்டும் கூட சேர்த்து இருக்கு அவ்வளவு தான்.
முன்பே இங்கு முந்திரி ரவை கீர், பேரிட்சை , ஜவ்வரிசி கீர், ரைஸ் பிஸ்தா கீர் எல்லாம் பகிர்ந்து இருக்கிறேன்
தேவையான பொருட்கள்
தரமான பாசுமதி அரிசி - 25 கிராம்
தர்பூசனி ஜூஸ் - 100 மில்லி
பால் - 100 மில்லி
பாதம் பருப்பு - 10 எண்ணிக்கை
முந்திரி - 6 எண்ணிக்கை
ஏலம் - 3 எண்ணிக்கை
சர்க்கரை - 50 கிராம்
ஸ்வீட்ன் கண்டென்ஸ்ட் மில்க் - சிறிய டின் - 1
கால் சிட்டிக்கை கலர் பொடி
செய்முறை
பாசுமதி அரிசியை பொடித்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
பாதத்த்தை வெண்ணீரில் ஊறவைத்து தோலை எடுக்கவும்.
பாதம் பருப்பையும் அரிசியையும் சேர்த்து முக்கால் பதத்துக்கு அரைத்து கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பால் , ஏலம், அரைத்த விழுது அனைத்தையும் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
அதில் தர்பூசனி சாறு, கண்டென்ஸ்ட் மில்க், சர்க்கரை, கலர் பொடி சேர்த்து கலக்கி சிறிது நேரம் திக்காக ஆகும் வரை 2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு இரக்கவும்.
கடைசியாக சிறிது நெய்யில் முந்திரியை வறுத்து தர்பூசனி கீரில் சேர்க்கவும்.
சுவையான மனமான தர்பூசனி பாதாம் ரைஸ் கீர் ரெடி.
முஸ்லீம் திருமணங்களில்
மாப்பிள்ளை தஸ்தரில் வைக்கும் சுவையான பிர்ணி இது , இதை வெள்ளை பீர்னி ,மஞ்சள் பீர்னி என இருவகைகளாக தயாரிப்போம். வெள்ளை
பீர்ணி என்பது ரவை முந்திரி சேர்த்து செய்வது அல்லது அரிசி , முந்திரி, பாதாம் அரைத்து
செய்வது ஒரு வகை, மஞ்சள் பீர்னி என்பது ரவை பாதம் சாப்ரான் சேர்த்து அரைத்து செய்வது
அல்லது அரிசி பாதாம் , சாஃப்ரான் சேர்த்து அரைத்து செய்வது. கொஞ்சம் கலர் பொடியும் சேர்த்து செய்யலாம், இது மற்றொரு வகை.
இதில் நான் தர்பூசணி
ஜூஸ் சேர்த்து செய்துள்ளேன். வேண்டாம் என்றால் அதை தவிர்த்து வெறும் பீர்னி யாக வும்
தயாரித்து கொள்ளலாம்.
*********
ஆங்கில பிலாக்கில் நிறைய தோழிகள் மாதந்திர ஈவண்ட்களும் நடத்தி வருகின்றனர்.
சில ஈவண்டில் சமையல் செய்யும் (magic mingle two ingredients) இரண்டு தேவையான பொருட்கள் கொடுத்து செய்ய சொல்வார்கள்,அதில் இந்த இந்த மாதம் செய்ய கொடுத்துள்ள இரண்டு பொருட்கள் அரிசி, தர்பூசணி.
இதனால் ஒன்றும் அவார்டோ பரிசோ ஏதும் கிடையாது, சும்மா சும்மா சும்மா தான்.
இப்படி யோசித்து புதுசாக செய்வது எனக்கு பிடித்துள்ளது ஆகையால் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.
இதுக்குன்னு நெட்டில் போய் தேடுவது கிடையாது .வழமையாக செய்யும் சமையலிலேயே இதை சேர்த்து செய்ய முடியுமான்னு யோசித்து தான் மாத மாதம் அந்த ஈவண்டுக்கு செய்து லின்க் பன்ணி கொண்டு இருக்கிறேன்.
போன மாதம் விருந்து உண்ண வாங்க விஜி ஈவண்டுக்கு யோசித்து வைத்து செய்வதற்குள் ஈவண்ட் தேதியே முடிந்து விட்டது.
இந்த மாதம் இரண்டு ரெசிபி செய்தேன். இன்னும் இதில் நிறைய ஐடியா இருக்கு பின்பு செய்து பார்த்தால் பகிர்கிறேன்.
தர்பூசணி அரிசி வெல்ல உருண்டை
தர்பூசணி அரிசி பாதாம் கீர்.
இரண்டுமே சூப்பராக இருந்தது.
பதிவுலக தோழ தோழியர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
14 கருத்துகள்:
அருமையான குறிப்பு...
YESTERDAY I'S LOOKING FPR UR POST BUT DIN'T DISPLAY..THANKS FOR SHARING SIS, BEEN LOOKING FOR THIS A WHILE..SURE MAKING THIS..
தர்பூசணி அரிசி பாதம்கீர் மிகவும் நன்றாக இருக்கிறது.
ஜலி இந்த கீர் நான் சாப்பிட்டதே இல்லையே.
உங்கள் பையன் திருமணத்தின் போது கிடைக்கும்தானே?
ஸாதிகா அக்கா பையன் திருமணத்துக்கு இன்னும் நாள் இருக்கும் அதற்கிடையில் சந்தித்தால் இன்ஷா அல்லா செய்து தருகிறேன்
கோமதி அக்கா வருகைக்கு மிக்க நன்றி
உங்கள் பதிவு தான் பார்க்க முடியவில்லை
தவறாமல் வருகை புரிவதற்கு மிக்க நன்றி சே குமார்
பாதாம் கீர் தர்பூசணி சேர்த்து மிக நன்றாக இருக்கிறது ஜலீலா!
சுவையான பாதாம் கீர் + தர்பூசணி... நன்றி சகோதரி...
உங்கள் தளம் எனது டாஷ்போர்டில் வருவதில்லை... என்னவென்று பார்க்கிறேன்...
தாங்கள் பதிவு எழுதியவுடன் dindiguldhanabalan@yahoo.com-க்கு மெயில் அனுப்பவும்... நன்றி...
எந்த தளம் என்றாலும் முதலில் தமிழ்மணம் ஓட்டளித்து விடுவேன்... இது தங்களின் தகவலுக்காக...
தொடர வாழ்த்துக்கள் சகோதரி...
மிகவும் ருசிகரமான அழகான பதிவு.
செய்முறைகள் சூப்பர்.
படங்கள் அத்தனையும் அருமை,
பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.
அருமை.
தர்பூசணி கீர் சுவையாக இருக்கின்றது.
ஆவ்வ்வ் புதுமுறையா இருக்கே, பார்க்கவே சூப்பர்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா