Thursday, April 25, 2013

முக்கனி ஜூஸ் (மா பலா வாழை)












முக்கனி ஜூஸ் ( மா பலா வாழை ) முன்றும் முக்கனி இது என் கிரான்பாவிற்கு  ரொம்ப பிடித்தமான ஜூஸ் என்று என் கிரான் மா அடிக்கடிசொல்வார்கள்.
கிரான்பாவை (அம்மாவுடைய அப்பா) பார்த்தது கிடையாது. அவர்கள் ரங்கூனில் இருந்து அங்கேயே காலமாகிவிட்டார்கள்.



தேவையானவை


மாம்ப‌ழ‌ம் = ஒன்று
ப‌லா ப‌ழ‌ம் = ஐந்து
வாழைப‌ழ‌ம் = ஒன்று
பால் = முன்று ட‌ம்ள‌ர்
த‌ண்ணீர் = ஒரு ட‌ம்ள‌ர்
ஐஸ் க‌ட்டிக‌ள் = ப‌த்து
சர்க்கரை (தேவை பட்டால் சேர்த்து கொள்ளலாம்)

செய்முறை

மாம்ப‌ழ‌ம் ம‌ற்றும் ப‌லாப‌ழ‌த்தை கொட்டை இல்லாம‌ல் பொடியாக‌ அரிந்து எடுத்து கொள்ள‌வும்.வழை பழத்தையும் பொடியாக அரிந்து கொள்ளவும்.
பாலை காய்ச்சி ஆற‌வைக்க‌வும்.
மிக்சியில் ப‌ழ‌ங்க‌ள், பால், த‌ண்ணீர்,ஐஸ் க‌ட்டிக‌ள் அனைத்தையும் சேர்த்து ந‌ன்கு நுரை பொங்க‌ அடித்து ஜூஸ் ட‌ம்ள‌ரில் ஊற்றி குடிக்க‌வும்.


வித்தியாச‌மான‌ காம்பினேஷ‌னில் சூப்ப‌ர் பான‌ம்.

படம் சரியாக வரவில்லை, இது நான் நான்கு வருடம்  முன்பு எடுத்தது. பழைய போஸ்ட் தான் ரீபோஸ்ட் செய்துள்ளேன்.

இங்கு துபாயில் பலாபழம் கிடைக்க  வில்லை, .டின் ஃபுட்டில் ரெடி மேட் பலா தான் கிடைக்கிறது. அப்படியே கிடைத்தாலும் சுவை இருககாது. ஒரு முறை ஆசை பட்டு வாங்கிட்டு வீணாகி விட்டது.

ஊருக்கு போனால் முதல் வேலை இங்கு கிடைக்காத பழம், காய், கீரைகளை தேடி வாங்கி செய்து சாப்பிடுவோம்.

அதில் பலாபழம் தான் முதலில் வாங்கி சாப்பிடுவது.  முன்பெல்லாம் யாரிடமாவது சொல்லி விட்டு வாங்கி சாப்பிடுவேன்.
இப்ப கடை ஆரம்பித்ததில் இருந்து க்டை வாசலிலேயே பழகடைகள் கிடைக்கின்றன . தினம் சென்னை ப்ளாசா கடைக்கு போகும் போது வாங்கி கொண்டு செல்வேன்.எல்லாரும் ஒன்றாக சாப்பிடுவோம்.



virunthu unna vaangka viji's show your style to world

10 கருத்துகள்:

SUMAZLA/சுமஜ்லா said...

ஹாய் அக்கா,
இதோ பதிவு போட முடியுதே!

Angel said...

பலா இன்னும் இங்கேவரல்லை ..இரண்டொரு வாரத்தில் கிடைக்கும் ..செய்கிறேன் விரைவில் :))thanks for the yummy recipe

கோமதி அரசு said...

ஜலீலா, முக்கனிஜுஸ் நல்லா இருக்கு.

திண்டுக்கல் தனபாலன் said...

முக்கனி ஜூஸ் அருமை... நன்றி சகோதரி...

சேக்கனா M. நிஜாம் said...

கோடைககேற்ற குளிர் பதிவு

இன்றைக்கே ட்ரைப் பண்ணிடவேண்டியதுதான்

தொடர வாழ்த்துக்கள்...

enrenrum16 said...

ஆமாக்கா... டின்னில் கிடைக்கும் பலாப்பழம் வாங்கினால் ஒரு டேஸ்ட்டும் இருக்காது... சப்பென்று இருக்கும்.. ஆனால் நேற்று கடையில் முழு பலாப்பழம் பார்த்தேன்... அதை வெட்ட உபகரணங்கள் எதுவும் இல்லாததால் வாங்கவில்லை. ஊருக்குச் செல்லும்போது பலாப்பழம், மாம்பழம், நொங்கு என்று கலந்து கட்டி அடிப்பது வழக்கம். பலாப்பழம் வெட்டும்போது குடும்பத்தில் அனைவரும் சேர்ந்து கமெண்ட் அடித்து ஒரு மாபெரும் நிகழ்ச்சி போல் இருக்கும்...

கொசுவத்தி ரொம்ப சுத்துது.. இத்தோடு முடித்துக்கொள்கிறேன்... இன்ஷா அல்லாஹ் மாம்பழ சீஸனில் இதை ட்ரை செய்கிறேன், அக்கா.

தலை மறைவான அதிரா said...

ஆஹா என்னா சூப்பர். வெயில் நன்கு ஆரம்பிக்கட்டும்.. இங்கு ரின்பலாப்பழம்தான் கிடைக்கும் செய்திடுவோம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, முக்கனிச்சாறு நினைக்கவே இனிப்பாக உள்ளது

அருமையான ருசியான பதிவு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

ஸாதிகா said...

முக்கனிகளையும் சேர்த்து கோடைக்கேற்ற பிரமாதமான ஜூஸ் செய்து அசத்திவிட்டீர்கள் ஜலீலா

ADHI VENKAT said...

முக்கனி ஜூஸ் பிரமாதம். செய்து பார்க்கிறேன்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா