Monday, April 1, 2013

அத்திபழ மில்க் ஷேக் - Fig Milk Shake



கோடை ஆரம்பித்து விட்டது சாப்பாடை விட ஒரு டம்ளர் ஜுஸ் அல்லது மோர் குடித்தால் சோர்வில்லாமல் இருக்கும்.



  அத்தி பழம் உயர் இரத்த அழுத்த்தை கட்டு படுத்தும். ஹிமோகுளோபின் அளவையும் அதிரிக்கவைக்கும்

அத்திபழ மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்
பழுத்த அத்திபழம் – 9
காய்ச்சி ஆறிய பால் – அரை லிட்டர்
சர்க்கரை – தேவைக்கு
ஐஸ் கட்டிகள் – 10
செய்முறை
1.       அத்தி பழம் உயர் இரத்த அழுத்த்தை கட்டு படுத்தும். ஹிமோகுளோபின் அளவையும் அதிரிக்கவைக்கும்.




2.       அத்தி பழத்தை சுத்தமாக கழுவி இரண்டாக வெட்டி கொள்ளவும்
3.       வெட்டிய பழத்தை தோல் தனியாக வரும் படி உள்ளிருக்கும் பழத்தைமட்டும் ஒரு ஸ்பூனினால் வழித்தெடுக்கவும்.



4.       தேவையான பொருட்கள் அனைத்தையும் தயராக வைக்கவும்.
5.       பாலை காய்ச்சி ஆறவைத்து பிரிட்ஜில் வைக்கவும்.



6.       மிக்சியில் ஐஸ் கட்டிகள், பால் சர்க்கரை,தோல் நீக்கிய அத்தி பழங்கள்
அனைத்தையும் சேர்த்து மிக்சியில் 5 நிமிடம் ஓடவிடவும்
7.       நல்ல நுரைபொங்க மிக்சியில் அடிக்கவும்.
வித்தியாசமான  சுவையில் ரொம்ப சத்தான ஜூஸ் ரெடி.

பரிமாறும் அளவு : 3 நபர்களுக்கு
சமைக்கும் நேரம் : 7 நிமிடம்


போன வருடம் சிகரம் மாத இதழிலும், வல்லமையிலும் வெளியானவை.






Linking to Gayathiri's walk through memory lane, 
Esay 2 prepare 15 minutes @ Aathithiyam, 
vimitha's Hearty N Healthy 






6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள மில்க் ஷேக் அருமை... நன்றி சகோதரி...

Asiya Omar said...

சத்தான மில்க் ஷேக்.அத்திப்பழம் பைல்ஸ் உள்ளவங்களுக்கும் மிக நல்லது என்று கேள்விபட்டிருக்கேன்..

Menaga Sathia said...

super healthy shake!!

கோமதி அரசு said...

அருமையான அத்திப்பழ மில்க்க்ஷேக் .
நன்றி ஜலீலா.

இளமதி said...

ஓ... அருமையான மில்க் ஷேக்...:)
இந்தப்பழம்தான் அத்திப்பழம்ன்னு சொல்வாங்களோ???

இங்கே ஜேர்மனியில இது உலர்ந்த பழமாக கிடைக்கும். விலை ஜாஸ்திதான். இருந்தாலும் அதன் ருசிக்காக வாங்குவோம்.

நல்ல குறிப்பு ஜலீலா... நன்றி!

ஸாதிகா said...

பார்க்கவே சூப்பராக உள்ளது.சமயத்துக்கு ஏற்ப குறிப்பு போட்டு இருக்கிங்க.இங்கு வெயில் கொளுத்துகிறது.ஒரு கிளாஸ் மில்க் ஷேக் குடித்தால் இதமாக இருக்கும்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா