இந்த மட்டன் தக்குடி இஸ்லாமிய இல்ல பல வகை சமையல் வகைகளில் இதுவும் ஒன்று
மிகவும் சத்தான டிபன் வகை.
எங்க வீட்டு கல்யாணங்களில் கல்யாணம் முடிந்து அன்று மாலை அல்லது மறுநாள் பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு பூஜோடிச்சி அனுப்பும் போது அன்று அனைவருக்கும் செய்யும் ஸ்பெஷல் டிபன் வகை. ரொம்ப அருமையாக இருக்கும்.
இது நிறைய செய்வது ரொம்ப சிரமம், இப்போது யாரும் செய்வதில்லை வேலை பாடு ஜாஸ்தி என்று , மட்டன் சேமியா, மட்டன் மக்ரூனி அதுவும் வெளியில் ஆர்டர் கொடுத்து விடுகின்றனர்.
முன்பு கல்யாண வீட்டில் நாங்கள் அனைவரும் ஒன்று கூடி மொத்தமாக உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டே இந்த தக்குடியை நன்கு குழைத்து பிடித்து பெரிய பெரிய தாலா க்களில் வைத்து சமையனாவிடம் கொடுது அனுப்புவோம்.
அடுத்து இப்ப இரண்டு வருடம் முன் ஒரு கல்யாணத்தில் தக்குடி தான் போடனும் என்று முடிவு செய்து ஒரு வாரம் ஆள் வைத்து சமைத்தார்கள்.
அன்று தக்குடி போட்டார்கள், பூ ஜோடிப்பு எல்லாம் முடிந்தது, சமையல்காரரும் தக்குடி தம் போட்டு விட்டு வேறு வேலையாக வெளியில் போய் விட்டார். சட்டிய திறந்து தக்குடி எடுக்கிறார்கள் அது கொழுக்கட்டை பிடித்து போட்ட மாதிரி அப்படியே இருக்கு வேகவில்லை.
பிறகுதான் வந்த சமையனாவுக்கு தக்குடி போட தெரியாது, அதை பிரியாணி போல் தாளித்து தம் போட்டு விட்டு போய்விட்டார்,
தக்குடி செய்வதாக இருந்தால் கறி தாளிச்சி தண்ணீர் அளந்து ஊற்றி தர தரன்னு கொதிக்கும் போது ஓவ்வொரு குழக்கடைகளாக பிடிச்சி போடனும் சிறிது நேரம் கழித்து உடையாமல் அதறகென நீட்டு கண் அகப்பை கொண்டு லேசாக கிழிருந்து மேலாக பிரட்டி விடனும், இதே போல் 10 நிமிடத்துக்கு ஒரு முறை அடி பிடிக்காமல் கிளறி விடனும்
நல்ல பழக்க பட்டவர்களுக்கு ஈசி , பதம் பார்த்து இதை செய்ய்யாவிட்டால் எல்லாம் வீணாகிடும்.
இன்னும் தெளிவாக ஸ்டெப் பை ஸ்டெப்பாக இந்த குறிப்பை பார்க்க இங்கு சென்று பார்க்கலாம்
******************************
வருத்த மாவு - 400 கிராம்( இரண்டு டம்ளர்)
மட்டன் - 400 கிராம்
******************************
வெங்காயம் - இரண்டு
பச்ச மிளகாய் - ஒன்று
கொத்து மல்லி தழை - கால் கப்
புதினா - கால் காப்
தேங்காய் துருவியது - அரை முறி
உப்பு - அரை தேக்கரண்டி
*****************
பட்டை - ஒரு அங்குலம் அளவு ஒன்று
கிராம்பு - இரண்டு
ஏலக்காய் - இரண்டு
வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்ச மிளகாய் - ஒன்று
கொத்து மல்லி - சிறிது
புதினா - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு மேசை கரண்டி
தனியாத்தூள் - ஒன்ன்ரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - முன்று தேக்கரண்டி (தேவைக்கு)
கடைசியில் கரைத்து ஊற்ற
******************************
வருத்த மாவு - இரண்டு மேசை கரண்டி
***************
2. இஞ்சி பூண்டு பேஸ்ட்,உப்பு,மாவு, மாவில் கலக்க வேண்டிய வெங்காயம்,பச்சமிளகாய்,கொத்து
3.ஒரு பெரிய வயகன்ற சட்டியில் எண்ணையை காய வைத்து அதில் பட்டை,கிராம்பு,ஏலத்தை போட்டு பொரிய விட வேண்டும். பொரிந்ததும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
4.வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் பொட்டு நன்கு பச்ச வாடை போகும் வரை வதக்க வேண்டும்.
5.தக்காளி, கொத்துமல்லி, புதினா, பச்சமிளாயை போட்டு நன்கு வதக்கவும்.
10. மசாலா தண்ணீரை மாவில் போட்டு பிசறி நன்கு அழுத்தி குழைத்து கொள்ள வேண்டும்.(மசாலா தண்ணீர் ஊற்றி பிடித்தால் தான் இது நல்ல டேஸ்டாக இருக்கும்)
13. போட்ட தும் கரண்டியை போட்டு கிண்ட கூடாது கொழுகட்டை கரைந்து விடும்.
ஒரு தோசை கரண்டி அல்லது கட்டை கராண்டியால் லேசாக ஒன்றோடு ஒன்று ஒட்டமல் பிறட்டி விட வேண்டும்.
14.கறியும், கொழுக்கட்டையும் ஒரே நேரத்தில் வெந்துவிடும். முதலே கறி வெந்துவிட்டால் கறிக
15.இப்போது கரைத்து ஊற்ற வேண்டிய மவை தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
17. கடைசியில் தம் போடும் கருவி (அ) தோசை தவாவை வைத்து பத்து நிமிடம் சிம்மில் வைத்து இரக்கவேண்டும்.
இதை ( கொழுக்கட்டை, வெல்லம் உருண்டை ,வணக்கம், சுத்திரியான், தட்டு ரொட்டி ( அரிசிமாவு ரொட்டி, பத்திரி) , புட்டு, இனிப்பு கொழுக்கடை) போன்றவை செய்ய பயன்படுத்தலாம்,
திரித்த மாவை ஒரு பெரிய இரும்பு வானலியில் போட்டு நன்கு அடி பிடிக்காமல் வறுக்கனும்.
வறுத்ததை ரவை சலிக்கும் சல்லடையில் சலித்து கொள்ளவேண்டும் .
அப்படி இல்லை என்றால் ஆட்டு தக்குடி என்பார்கள் , அதாவது அரிசியை ஊறவைத்து மிக்சியில் கெட்டியாக ஆட்டி அதனுடன் சிறிது ரெடி மேட் அரிசி மாவு கலந்து தக்குடியாகவும் செய்யலாம்.
இதைராகி மற்றும் ரவையிலும் செய்யலாம். ரவையை நன்கு வறுத்து கொள்ள வேண்டும்.
எலும்புடன் உள்ள மட்டன் போட்டால் போட்டால் தான் சுவை அதிகமாக இருக்கும்.
கறிக்கு பதில் சிக்கன், இறால், வெஜிடேபுள்ஸ் சேர்த்தும் செய்யலாம்.
Tweet | ||||||
15 கருத்துகள்:
விரிவான செய்முறை குறிப்பிற்கு நன்றி சகோதரி...
நேற்றுதான் ஒரு பதிவாளர் வடகம் செய்வது எப்படி என்று பதிவு போட்டு எனது சிறு வயது ஞாபகத்தை கிளறிவிட்டார். இன்று உங்கள் முறை போல தக்கடி போட்டு மீண்டும் ஞாபகங்களை கிளறி விட்டு இருக்கிறீர்கள்.அம்மா இருந்தவரை நீங்கள் சொன்ன முறையில் தக்கடி செய்துதருவார்கள்.
ஆனால் இப்போது அதே முறையில் மட்டனை தவிர்த்து மீதி எல்லாவற்றையும் சேர்த்து வெஜிடேரியன் முறையில் தக்கடி செய்து சாப்பிடுகிறோம் ஹும்ம்ம்ம்ம்ம்ம் ஐ ஆம் மிஸ்ஸிங்க் மட்டன் தக்கடி....
பெண்களை நீங்கள் நல்லா இருங்கப்பா.....
இந்தியா வரும் போது உங்க வீட்டிற்கு விசிட் செய்ய வேண்டியதுதான்
இந்த தக்கடி உணவு நெல்லைப் பகுதியை சார்ந்ததுதானே?
நீங்கள் நெல்லை காரரா?
எங்க ஊரில் கல்யாண விருந்தில் நிச்சயம் ஏழு நாளில் ஒரு நாள் இந்த தக்கடி இருக்கும்.அதுவும் மொத்த தக்கடி மணக்க மணக்க சூப்பராக இருக்கும்.நானும் மாதம் ஒரு முறையாவது இங்கும் செய்வதுண்டு.என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
வித்தியாசமான குறிப்பு. செய்வது கஸ்டம்போல இருக்கு.. ஆனா சூப்பர் சுவையாக இருக்கும்போல இருக்கே.
இந்தப் பெயரே புதிதாக உள்ளது.
அறிந்தது மிக மகிழ்ச்சி .
நன்றி ஜலீலா....
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
விரிவான புகைப்படங்கள்! தெளிவான செயல் முறைகள்! நன்றாக எழுதியிருக்கிறீர்கள் ஜலீலா! நானும் என் சினேகிதி ஒருவரிடம் ' கறி திக்கடி' என்று இதைக்கற்று செய்திருக்கிறேன்! கறிக்கு பதிலாக கோழியிலும் செய்திருக்கிறேன்!!
தனபாலன் சார் உங்கள் தொடர் வருக்கைக்கு மிக்க நன்றி.
அவர்கள் உண்மைகள் , உங்கள் பெயர் தெரியவில்லை,
ஆமாம் அந்த வாடம்பதிவு நானும் பார்த்தேன், அதை பார்த்ததும் என் அம்மா செய்யும் போது நானும் கூட உதவியது எல்லாம் பழைய ஞாபகங்கள் அசை போட்டு கொண்டு இருந்தது.
மட்டனில் போடுவது தான் பாரம்பரியம்
ஆனால் இப்ப மட்டனை அனைவரும் தவிர்ப்பதால், இறால், சிக்கன், வெஜிடேபுள்ஸ் சேர்த்து செய்கிறார்கள்.
வாங்க தக்குடியே செய்து கொடுத்து விடுகிறேன்.
நாங்க முன்பு நெல்லை காரர்கள் தான் , ஆனால் இப்ப எல்லாரும் சென்னை காரர்கள்...
வருகைக்கு மிக்க நன்றி
ஆமாம் ஆசியா எங்க் வீட்டு கல்யாணங்களிலும் இது கண்டிப்பாக வைப்போம்.
எனக்கு ரொம்ப பிடித்த டிபன்.
அதிரா இது ரொம்ப ஈசியான சமையல் தான் ஆனால் பக்குவமாக செய்யனும் பூஸார் ரெஸ்ட் எடுத்துட்டு வந்தாச்சு போல இருக்கே
வாங்க வேதா, நீங்கள் என்று இல்லை பல பேர் இந்த குறிப்பு அறிந்திருக்க வாய்ப்பில்லை,
இது இஸ்லாமியர்களின் பல பாரம்பரிய சமையல் வகைகளில் இதுவும் ஒன்று
வருகைக்கு மிக்க நன்றி
மனோ அக்கா வாங்க உங்களை இங்கு பார்த்ததில் மிக்க மகிழ்சி.
இது சிக்கன் மற்றும் இறாலிலும் செய்யலாம்.
மீதியான கறீ குழம்பு , சிக்கன் குழம்பு, எலுப்பு சால்னாவிலும் செய்யலாம்.
Wow,my fav thakkadi.Perfectly done sis:-)
உங்க தக்கடி ரெசிபி பார்த்துத்தான் முதன் முதலில் என் கையால் நானே முன்பு தக்கடி செய்தேன்.. இப்ப அடிக்கடி செய்றதுண்டு... தேங்க்ஸ் ஃபார் த ரெசிபி அக்கா.
ஆஹா..தக்கடி எனக்கு மிகவும் பிடித்தமான ஐட்டமாசே.அதிலும் படத்தில் பார்க்கும் தக்கடியில் கொழுக்கட்டை மிருத்துவாக மசிந்து காணப்படுவது..ம்ம்...சூப்பர்.அது சரி தக்கடியா தக்குடியா?
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா