Monday, April 8, 2013

மட்டன் பார்பிகியு (கீரின் மசாலா) - Mutton BBQ Green Masala







இது துபாயில் விடுமுறை நாட்களில் பார்க்குகளில் எங்கு பார்த்தாலும் பார்பிகியு  மட்டன் கபாப், சிக்கன் ஃப்ரை, கீமா கபாப்  என்று செய்து சாப்பிடுவார்கள். பார்க் முழுவதும் ஒரே மனமாக இருக்கும்
 இங்கு இந்தியர்களை விட அரபிகள் தான் அதிகமாக இதை விரும்பி பல வகைகளில் செய்வார்கள்.



( முன்பு அடிக்கடி இரண்டு முன்று பேமிலி ஒன்றாக சேர்ந்து போவோம், ஒரு பெருநாளுக்கு வேன் பிடித்து பத்து பேமிலிகள் ஒன்றாக கூட போயிருக்கோம்.அங்கு போய் பிள்ளைகல் இஷ்டம் போல விளையாடுவார்கள். நாங்களும் பார்க்குகளில் பார்பிகியு அடுப்புகள் இருக்கும் இருந்தாலும் நாங்க கிழே படத்தில் உள்ள அடுப்பு இரண்டு  கொண்டு போய் சிக்கன் ஹோல் லெக் ஃப்ரை, மட்டன் கபாப், ஷீக் கபாப் போன்றவை செய்து அனைவரும் ஒன்றாக கூடி சாப்பிட்டு விட்டு, பார்கில் இருக்கும் எல்லோரும் ( ஊஞ்சல், சீ சா )அனைத்திலும் ஏறி விளையாடி விட்டு, அடுத்து  எல்லாரும் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டு நெருப்பு மூட்டிய அந்த தனலில் கருஞ்சாயா இஞ்சி போட்டு  குடித்து விட்டு ஒரு நாள் பொழுதை கழித்து வருவோம்.) பிள்ளைகள் வளமேற்படிப்பு வர வர இப்ப வெளியில் போவதை நிறுத்தி கொண்டோம்.

இது முன்பு செய்தது, தமிழ் குடும்பம் டாட் காமிலும் பகிர்ந்துள்ளேன்.


தேவையான பொருட்கள்


மட்டன் எலும்பில்லாதது = ஒரு கிலோ
தயிர் ‍= நான்கு மேசை க‌ர‌ண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ‍ இரண்டு மேசை கரண்டி
தக்காளி ‍= ஒன்று பெரிய‌து

பச்ச மிள்காய் = ‍ ஐந்து
மிளகு தூள் = முன்று தேக்கரண்டி
மஞ்சள் தூள் = அரை தேக்கரண்டி
உப்பு தூள் = இரண்டு மேசை கரண்டி (அ)(ருசிக்கு)
கொத்து மல்லி தழை ‍= அரை கட்டு (பொடியாக அரிந்தது)
புதினா ‍ = ஒரு மேசைகரண்டி (பொடியாக அரிந்தது)
கருவேப்பிலை = ஒரு மேசைகரண்டி (பொடியாக அரிந்தது)
ஆலிவ் ஆயில் ‍= நான்கு மேசை கரண்டி
ஆவிவ் ஆயில் = சுட தேவையான அளவு
லெமன் ‍= முன்று








செய்முறை



1. தேவையான பொருட்களை ரெடியாக வைக்கவும்.மட்டனை நன்கு கழுவி தண்ணீரை வடிக்கவும், கொத்துமல்லி,புதினா,பச்சமிளகாய், கருவேப்பிலையை நன்கு மண்ணில்லாமல் கழுவி தண்ணீரை வடிக்கவும்.

2.மிக்சியில் கொத்து மல்லி,புதினா,பச்சமிளகாய்,கருவேப்பிலையை அரைத்து அத்துடன் மிளகுதூள் உப்பு தூள்,மஞ்சள் தூளை சேர்க்கவும்.

தக்காளியையும் அரைத்து சேர்க்கவும்.








3.அரைத்த மசாலாக்களுடன் ,தயிர்,மட்டன் ,இஞ்சி பூண்டு ஆகியவற்றை கலக்கவும்.

4.நன்கு கலக்கி ஆலிவ் ஆயிலும் சேர்த்து முன்று மணி நேரம் ஊறவைக்கவும்.







5.ஊறிய கறியை BBQ செய்ய கம்பியில் கோர்க்கவும்.

6.BBQ அடுப்பில் தீ மூட்டி நன்கு நெருப்பானதும் சுடவும்.

7.சிறிது சிறிதாக ஆலிவ் ஆயில் கறியில் விடவும்.

8.திருப்பி போட்டு மறுபடி சிறிது எண்ணை விட்டு நன்கு வேகவிடவும்.






9.நன்கு பொரிந்ததும் எடுக்கவும்.

10.சுவையான மட்டன் BBQ ரெடி.



குறிப்பு
இதற்கு கீரின் மாசாலா, மற்றும் ரெட் மசாலா அவரவர் விருப்பபடி எதுவேண்டுமானாலும் போடலாம்.
இதற்கு தொட்டு கொள்ள குபூஸ்,கார்லிக் சாஸ், சாலட் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட‌லாம்.


linking to vimitha's Huston Canola  oil Giveaway event

6 கருத்துகள்:

Menaga Sathia said...

ரொம்ப நல்லாருக்கு...

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமாக இருக்கிறது...

செய்முறைக்கு நன்றி...

ஸாதிகா said...

viththyaasamaaga irukku jali.

சாந்தி மாரியப்பன் said...

அருமையான குறிப்பு..

'பரிவை' சே.குமார் said...

அருமை அக்கா...

vettha.(kovaikavi) said...

நாவில் ஜலம் ஊறுகிறது.
செய்ய நேரமில்லை ஓடும் வாழ்வில்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா