கர்பிணி பெண்களுக்கு மற்றும் இல்லை அனைவருக்கும் இந்த ஊறுகாய் பிடிக்கும்.
உப்பு = தேவைக்கு
மஞ்சள் தூள் = கால் தேக்கரண்டி
வெல்லம் = ஒரு சின்ன துண்டு
காஞ்ச மிளகாய் = நான்கு
வெந்தயம் = கால் தேக்கரண்டி
தனியா = அரை தேக்கரண்டி
தாளிக்க
எண்ணை = இரண்டு மேசை கரண்டி
கடுகு = அரை தேகக்ரண்டி
காஞ்ச மிளகாய் = ஒன்று
கருவேப்பிலை = சிறிது
பூண்டு = முன்று பல்
1 . வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கொஞ்சமா எண்ணையில் வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும்.
2. மாங்காயயை பொடியாக அரிந்து கொள்ளவும், கொட்டையை தூக்கி போட்டுவிட வேண்டாம் அதை சாம்பார் (அ) மீன் குழம்பில் போட்டு கொள்ளலாம்.
3. ஒரு வானலியில் எண்ணை விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளிக்கவும்.
4. மாங்காயை போட்டு கிளறவும். உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து பொடித்த பொடியையும் போட்டு நன்கு பிறட்டி ஐந்து நிமிடம் வேகவிட்டு கடைசியாக வெல்லத்தை தூவி இரக்கவும்.
செய்யும் போதே நாவில் நீர் ஊற ஆரம்பித்து விடும்.
அப்படியே இரண்டு முன்று நாட்களில் சாப்பிட்டு முடிக்க வேண்டியது தான். கரிபிணி பெணகள் வாய்க்கு ருசிபடும், ஏன் நமக்குதான்.
குறிப்பு
வறுத்து பொடிக்க சோம்பேறி தனமா ? அப்படியே எண்னையில் போட்டு தாளிக்கவும், மிளகாய் தூள் ஒரு தேகக்ரண்டி, வெந்தய பொடி (அ) வெந்தயம், தாளித்தும் எண்ணையில் போட்டு விட்டு பிறகு மாங்காயை போட்டு பிறட்டவும், கலரும் சூப்பராக வரும்.
Linking to virunthu unna vaangka viji 's Show your style to world and Gayathiri's Walk through memory lane hosted by my home manthra
Tweet | ||||||
10 கருத்துகள்:
நாவூறுது ஊறுகாயை பார்த்ததும்,சூப்பர்!!
படிக்கப் படிக்க எச்சில் ஊறுது...
அருமை அக்கா...
மாங்காய் ஊறுகாய் மிக நன்றாக இருக்கிறது ஜலீலா.
இப்பவே மாங்கா ஊறுகா சாப்பிடணும்போல இருக்கு! ஆனா காலங்காத்தால மாங்கா சாப்பிட முடியாது! :)
நினைத்தாலே ...ஸ்ஸ்... யம்மாடி...!
நன்றி...
http://blogintamil.blogspot.in/2013/04/2013.html
தங்களின் இந்தப்பதிவு இன்று 20/04/13 வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள், இனிய நல்வாழ்த்துகள்.
சூப்பர் ஜலீலாக்கா... மாங்காய் கிடைக்கட்டும் செய்வேன்.. நினைக்கவே வாயூறுதே...
சூப்பர் ஊறுகாய்,.பார்க்க பார்க்க ஆசை தான்..மாங்காய் வாங்கி ஃப்ரிட்ஜில் இருக்கு,ஊறுகாய் ஊரில் இருந்து வந்து விட்டதால் வேறு ஏதாவது செய்ய வேண்டும்..
இதையும் செய்தாச்சு ,நான் தொக்கு போல grate செய்து செய்தேன்
வாவ்..சூப்பர்!சீஸனுக்கேற்ற ரெஸிப்பிதான்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா