//மீதம் ஆன பரோட்டாவில் தால் கொத்து பரோட்டா செய்வார்கள்//
தேவையானவை
கோதுமை பரோட்டா = 4
எண்ணை = முன்று தேக்கரண்டி
பட்டர் (அ) நெய் = ஒரு தேக்கரண்டி
தக்காளி = ஒன்று
வெங்காயம் = ஒன்று
பச்ச மிளகாய் = ஒன்று
கொத்துமல்லி கருவேப்பிலை = சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் = ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் = அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் = சிறிது
உப்பு = ருசிக்கு தேவையான அளவு
கேபேஜ் = பொடியாக அரிந்தது 4 மேசை கரண்டி
கேரட் = கால் துண்டு பொடியாக அரிந்தது
கேப்சிகம் = பொடியாக அரிந்தது முன்று மேசை கரண்டி
பீன்ஸ் = பொடியாக அரிந்தது நான்கு
ஸ்பிரிங் ஆனியன் = இரண்டு ஸ்டிக்
ப்ரோஜன் பீஸ் மற்றும் கார்ன் = இரண்டு மேசைகரண்டி
செய்முறை
பரோட்டாவை அடுக்கி வைத்து கத்திரி கோலால் குறுக்கும் நெடுக்குமாய் பொடியாக கட் பண்ணி கொள்ளவும்.
காய்கறிகளை சுத்தம் செய்து பொடியாக அரிந்து வைக்கவும்.
எண்ணையை காயவைத்து ஒரு சிறு பட்டை சேர்த்து வெங்காயம், இஞ்சி பூண்டு கருவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து தாளிக்கவும்.
வெங்காய தாள், கேப்சிகம் தவிர மற்ற காய்களை சேர்த்து நன்கு வதக்கவும்.
மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கி பிறகு இப்போது வெஙகாய தாள், கேப்சிகம் சேர்த்து வதக்கி ஒரு நிமிடம் வேக விட்டு பொடியாக வெட்டிய பரோட்டாக்களை சேர்த்து நன்கு கிளறி மசாலாக்கள் பரோட்டாவுடன் சேர்ந்ததும் இரக்கிவிடவும்.
கடைசியாக எலுமிச்சை சாறு, மிளகு தூள் தூவி கெட்சப்புடன் சாப்பிடவும்.
கவனிக்க:
கொத்து பரோட்டா என்றாலே பிடிக்காதே ஆளே கிடையாது, மீந்து போன பரோட்டாவில் செய்வது தான் கொத்து பரோட்டா. இதை மைதா மாவில் செய்தால் இன்னும் சுவை கூடும். இதில் கோதுமை மாவு பயன் படுத்தி செய்துள்ளேன். கத்திரிகோலால் கட் பண்ணுவதால் ஒரே சீராக ஹோட்டலில் இருப்பது போல் இருக்கும். இதில் முட்டை சேர்த்தும் செய்யலாம். வெளியில் கட்டி எடுத்து போக ரொம்ப சூப்பரான டிபன். வயிறும் நிறையும்.
Tweet | ||||||
21 கருத்துகள்:
salam jaleela
பராட்டா பீஸ் தெரியுதே கொத்த மாட்டீர்களா?இல்லை சட்டுவம் வைத்து கொத்த கூடாதா?
உண்மை தான் பிடிக்காதவர் யார் இருக்கா
கெச்சப் பிடிக்காதெனக்கு(இனிப்பு)
வேற எதுனா சைட் டிஷ் ஐடியா.
இதுக்கு பொதுவா தேவையில்லை தான் இருப்பினும் ஒரு ட்ரை ...
My all time favorite.....
Love to share an award with u . Kindly accept it
கடையில் கொத்தும் கொத்தை பார்த்தே கொத்து வெறுத்துப் போன எம் போன்றவர்களுக்கு ஒரு நல்ல சமையல் என்று நினைக்கிறேன்..... முயற்சி செய்கிறேன் அக்கா....
அக்கா முடியுமானால் Fruit Salad செய்முறை ஒன்று எனக்காக பதிவிடவும்.....
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அக்கா.....
ஆகா. இது ரொம்பவே டாப்பா இருக்கு. கண்டிப்பா செய்யனும்
அக்கா, கொத்துபுரோட்டான்னா பிடிக்காத ஆள் உண்டா?
இதில் மீந்த குழம்பு எதுவும் இருந்தால் ஊற்றலாம். அல்லது ஒரு அரைகப் பால் ஊற்றினால் ரொம்ப டிரையாக இருக்காது. சாப்பிடும்போது விக்கல் வராது.
முட்டைக் கொத்துதான் எங்கள் வீட்டில் ஃபேவரைட். காய்கறி சாப்பிட வைக்க நல்ல வழி.
தாஜ், சட்டுவம் வைத்துக் கொத்துவதைவிட, வெட்டிப்போடுவது சுலபம்.
சலாம் தாஜ்
கோதுமை பரோட்டா நல்ல ஷாஃப்டாக இருக்கும். சும்மா பிரட்டினல் போதும்.
கட் பண்ணி போடுவது நல்ல இருக்கும்.
ஆமாம் கொத்து பரோட்டா பிடிக்காத ஆளே கிடையாது தான்.
இதற்கு கொத்துமல்லி சட்னி தொட்டு சாப்பிடலாம். தொட்டுக்க ஒன்றும் தேவைபடாது (லெமன்பிழிந்து, மிளகு தூவி) மனம் சுவை அருமையாக இருக்கும்.
நன்றி அருனா வந்து பெற்று கொள்கிறேன்.
சப்ராஸ் அபூ பக்கர் வாஙக் ரொம்ப நாள் ஆச்சு உஙக்ள் பின்னூட்டம் பார்த்து இது மீந்து போன பரோட்டாவில் செய்வது, சுலபமும் கூட இன்னும் சுலபம், வெக்ன்காய முட்டை செய்து கூட அதில் பிரட்டி கொள்ளலம், முட்டை கிமா சேர்த்து இதே போல் செய்யலாம். புருட் சாலட் நோன்பிலெயே கொடுத்து விட்டேன் பாருங்கள்.
நவாஸ் செய்து பாருங்கள் ரொம்ப ஈசி.
ஹுஸைனம்மா குழம்பு ஊற்றியதில்லை, கடையில் வாங்கும் பரோட்டாவில் செய்தால் ஹார்டாக இருக்கும், இது என் கோதுமை ரொட்டி நல்ல ஷாஃப்டாக இருக்கும், (இருந்தாலும் நீஙக்ள் சொன்னது மனதில் வைத்து கொள்கிறேன், சமையத்துக்கு ஆகும் (சால்னா சேர்ப்பது) )
நாங்களும் முட்டை கொத்து பரோட்டா தான் அடிகக்டி செய்வது, இது பிரட் ரைஸ், நூடுல்ஸ்க்கு வாங்கி மீதியான காய் கள் மற்றும், இரவு மீதியான ரொட்டி
அட காய் கறியை வச்சு சூப்பரா செஞ்சிட்டீங்களே..
உங்க கிட்ட ரொம்ப நாளா கேக்கனும்னு நினைச்சேன்.. எங்களுக்காக பிரட் ஸ்வீட்/ஹல்வா செஞ்சு காமிங்களேன் ப்ளீஸ் (அப்படியே ஒரு கால் அடிச்சா உங்க வீட்டுக்கே வந்துடறேன்!)இன்ஷா அல்லாஹ்
அக்கா இந்த செய்முறை விதியாசமாக இருக்கு. நல்ல ரிச்சாவும் ஹெல்தியாவும் இருக்கு செய்து பார்க்கிறேன்
நாஸியா உங்களுக்கில்லாமலா?
ம்ம் முடிந்த போது செய்து விட்டு ஒரு கால் அடிக்கிறேன்.
பாயிஜா வாங்க எப்படி இருக்கீங்க வெகு நாட்களாச்சு உங்களுடன் பேசி
ஆமாம் ரிச் + ஹெல்தி, சூப்பரான காலை உணவு.
ரொம்ப நல்லா இருக்கு கொத்து பரோட்டா , பார்கும் போதே சாப்பிட தோணுகிறது
Hmmmmmmmmmm looking great and mouth watering...Happy New Yr
புதுவருட வாழ்த்துகளுடன் உங்களுக்கு என் சிறிய பரிசு :-)
http://singakkutti.blogspot.com/2009/12/blog-post_25.html
முட்டை சேர்க்காத வெஜிடபிள் கொத்துபரோட்டா.வித்தியாசமானதுதான்.மகன் வந்து விட்டார் என்று தினமும் அசத்துகின்றீர்கள் ஜலி.
வெஜிடபிள் கொத்து ரோட்டா ரொம்ப நல்லா இருக்கு. Super + easy too.
I will make monthly onece.Nice recipe jalee.
வெறும் பரோட்டாவும் தாலும் பார்த்து வெறுத்து போன எனக்கு இது அமிர்தமா இருக்கும் ட்ரை பண்ணிடுவோம்...நன்றி அக்கா..
Hi Jaleela,
How r u.. long time no see.. mail me
Aamir
Akka super I will try soon!!!!!
சாருஸ்ரீ கருத்து தெரிவித்தமைக்கு.மிக்க நன்றி
சரஸ்வதி நன்றி, புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சிங்கக்குட்டி விருதுக்கு நன்றி புத்த்தாண்டு வாழ்த்துக்கள்.
ஸாதிகா அக்கா ஆமாம் பையன் வந்துள்ளதால், தினம் அசத்தல்
விஜி வாங்க கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. நானும் மாதம் ஒரு முறை செய்வேன்.
ஆமாம் சீமான் கனி வெரும்பரோட்டா தாலை விட , இது நல்ல இருக்கும் செய்வதும் சுலபம்.
அனானி ஆமிர் யாருன்னு தெரியலையே
நன்றி சுஸ்ரீ
உங்களின் இந்தக் குறிப்பை நீங்கள் பதிவு செய்த அன்றே செய்து பார்த்து விட்டேன். பதிவு போடத்தான் நேரம் கிடைக்கவில்லை. மிகவும் சீக்கிரத்திலேயே செய்து முடிக்கக் கூடிய சுவையான குறிப்பு.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்/எம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அன்புடன்
பிருந்தா
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா