எனதருமை அன்பர்களே, நன்பர்களே, சக பதிவர்களே, வாசகர்களே, கருத்துக்களை தயக்கமில்லாமல் வெளியிட்டு என்னை ஊக்கப்படுத்துபவர்களே மற்றும் என்னை பின் தொடர்பவர்களே, இனி தொடரப்போகிறவர்களே (அய்யய்யே... என்ன இது ஒரு எதுகை மோனைக்காக கூப்பிட்டா லேகியம் விக்கற எஃபக்ட் வந்துடுச்சி?)
மைக்க பிடிச்சா இப்படி தான் பேசனுமுன்னு அண்ணாமலையான் அவர்கள் தான் சொன்னாருங்க...
நானும் பதிவுலகமும். போன வருடம் இதே டிசம்பர் கடைசியில் பாயிஜா (தமிழ் குடும்பம்,அருசுவை மூலம் அறிமுகமான தோழி நான் ஒரு பிலாக் ஆரம்பித்து இருக்கேன், அதில் கலந்து கொண்டு ஆதரவு கொடுங்கள், என்று சொன்னாங்க.
அருசுவை தோழி இலாவின் உதவியால் உடனே பிலாக் என்றால் என்ன போன வருடமே இந்த பிலாக் பற்றி தெரிந்தும் இரண்டொரு பதிவு போட்டும், மறந்து போய் பிலாக் என்றால் என்ன எப்படி ஆரம்பிப்பது, மண்டைய போட்டு குடைந்து நானே ஒரு வழியா பிலாக் ஆரம்பித்தேன்,
ஹே ஹே எனக்கும் பிலாக் போட வந்து விட்டது, ஒரே சந்தோஷம்...தாங்க முடியல
எதுவும் பப்லிஷ் பண்ணல கட கடன்னு, மனதில் தோன்றிய எல்லா டிப்ஸ் சமையலும் போட்டாச்சு. பிப்ரவரியில் தான் ஒவ்வொன்றா பப்ளிஷ் செய்தேன்.
முதலில் எப்படி பாலோவர்ஸா ஜாயின்ட் பண்ணுவது என்று கூட தெரியாமல் இருந்தேன், பின்ன்னூட்டம் போடுபவர்கள் பதிவுக்கு பதில் எபடி போய் போடனும் என்று தெரியாது. அப்படி விழுந்து எழுந்திரிச்சாச்சு.
நெட்டில் பல சைட் களில் என் சமையல் குறிப்புகளும், டிப்ஸ்களும் கொடுத்து இருக்கிறேன்சமையல் குறிப்பு மூலம் நெட்டில் பல நாடுகளில் உள்ள பல தோழிகள் மூலம் நிறைய வாழ்த்து பெற்றுள்ளேன்.
அருசுவையில் தான் முதல் முதலில் குறிப்பு கொடுக்க ஆரம்பித்தேன். அதில் என் குறிப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
அருசுவையில் நான் கூட்டாஞ்சோறில் இரண்டாவது இடத்தில் உள்ளேன். யாரும் சமைக்கலாமில் படத்துடன் முடிந்த போது குறிப்புகள் கொடுத்து வருகிறேன்.
அருசுவை எழுத்துதவி மூலம் தான் தமிழ் டைப்பிங் கற்று கொண்டேன். அதை செம்மையாக நடத்தி வரும் பாபுவும் மிகவும் தன்மையானவர். நன்றி பாபு.
இதன் மூலம் நிறைய எல்லா நாடுகளிலுள்ள உள்ள தமிழ் தோழிகள் நிறைய கிடைத்துள்ளார்கள்.இதில் மன்றத்தில் எல்லா தோழிகளும் ஓவ்வொரு 100 குறிப்புகள் முடிந்தவுடனும் எல்லோரும் பாராட்டு தெரிவித்து என்னை ஊக்குவித்தார்கள்.
அருசுவை மூலமாக தான் தமிழ் டைப்பிங்கே கற்று கொண்டேன். நன்றி அருசுவைடாட்காம் சிலர் ரொம்ப நெருக்கமானவர்களாகவும் ஆகிவிட்டார்கள். பிலாக்கிலும் (பாயிஜா, மேனகா, மலிக்கா,ஹர்ஷினிஅம்மா,கீதா ஆச்சல் ,ஸாதிகா அக்கா, சுஹைனா, ஹுஸைன்னாம்மா,விஜி,சுஸ்ரீ)
அடுத்து ஹுஸைனாம்மா தான் சொன்னார்கள் தமிழ் டைப்பிங்க்கு www.tamileditor.org அதில் போய் டைப் செய்தால் ஈசியாக இருக்கும் என்றார்கள்,அருசுவை எழுத்துதவி கற்று கொண்டவர்களுக்கு இந்த தமிழ் எடிட்டர் ரொம்ப ஈசியாக இருக்கும்.
நன்றி ஹுஸைன்னாம்மா/
நெருக்கமான தோழிகள் என்று சொல்லபோனால் இன்னும் பல தோழிகள் இருக்கிறார்கள். ஆனால் இங்கு குறிப்பிட்டுள்ளது பிலாக்கில் தொடர்நத தோழிகள்.
அடுத்து தமிழ் குடும்பத்தில் நிறைய டிப்ஸ்கள் அங்கும் நல்ல வரவேற்பு என் டிப்ஸ் மற்றும் படத்துடன் குறிப்பு குறைந்த நாட்களில் 300 முடித்ததால் எனக்கு அவர்கள் சின்ன பரிசும் அங்கிருந்து அனுப்பிவைத்தார்கள்.சின்ன பரிசாக இருந்தாலும். அது நான் முதல் முதல் வாங்கியது அது எனக்கு பெரிய பரிசே ஆகும். இங்கும் பாயிஜா, மலிக்கா,மேனகா, சுஹைனா,சாருஸ்ரீ, கீதா ஆச்சல்
தமிழ் குடும்பத்தில் எனக்கு மிகவும் மதிப்பும் மரியாதையும் உண்டு.எதிர் பார்க்கவே இல்லை எனக்கு தீடிர் பரிசு அறிவித்து உங்கள் குறிப்புகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது என்று சொன்னார்கள். என்னால் தமிழ் குடும்பம் சரியாக கிடைக்கவில்லை என்றதும், பதிவுகளுக்காக இரண்டு முன்று பாஸ்வேட் கொடுத்து போட சொன்னார்கள், இல்லை அவர்களே கூட போட்டு விடுவார்கள்.
இது தமிழ் குடும்பத்தில் எனக்கு கிடைத்த பரிசு,
நன்றி தமிழ்குடும்பம்டாட்காம் ,இதை நடத்தும் தமிழ் நேசன் அவர்களுக்கு மிக்க நன்றி,
ஜீமெயில் ஓப்பன் பண்ணும் போதெல்லாம் சைடில் கண்ணில் படுவது சமையலறைடாட்காம், உடனே அதையும் போய் பார்த்தேன். அதில் நான் வெஜ் குறிப்புகளே இல்லாமல் இருந்தது ஆகையால் அதிலும் பங்கு கொண்டு குறிப்புகளை அனுப்பினேன்.பிறகு நேரமின்மையால் நிருத்தி விட்டேன்.
கீழக்கரை அஞ்சல் மாத இதழிலும், என் குறிப்புகள் வெளிவந்துள்ளது.
எல்லோரிடமும் சமையல் ராணி,டிப்ஸ் ராணி என்ற பட்டமும் கிடைத்துள்ளது.
என் சமையல் மூலம் சமையலே தெரியாதவர்களும் என் சமையலை பார்த்து செய்து அவரவர் வீட்டில் பாரட்டை பெற்றுள்ளார்கள்.
சமையலே சரியாக செய்ய தெரியாத ஒரு பெண் என் சமையல் மூலம் ஒரு கிரேட் குக். இன்னும் பலர் பயனடைந்து உள்ளனர்.
ஒரு காலத்தில் மற்றவர்கள் பேப்பரில் கொடுத்த சமையல் குறிப்பை பார்த்து என்னால் முடியுமா இது போலெல்லாம் என்பது போல் பெரு மூச்சு விட்டு கொண்டு இருந்தேன்.
இப்போது நானும் நெட்டில் என் குறிப்பும் வருகிறது என்கிறது போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
விக்கிஸ் கிச்சன் இவங்க கடந்த இரண்டு வருடமா சமையல் குறிப்பு ரொம்ப செம்மையாக போட்டு வருகிறார்கள், கேக் ரெசிபிகள் ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த Smart Chef அவார்டை விக்கி எனக்கு கொடுத்து இருக்காங்க.
மிக்க
VEGGIE PARADISE
நன்றி அருனா, இவர்கள் குறிப்புகள் அனைத்தும் வெஜ் தான்.... இதை என் பாலோவர்சுக்கும்,பின்னூட்டமிடுபவர்களுக்கும் கொடுக்கிறேன், வாங்கிக்கொள்ளுங்கள்.
நன்றி மேனகா, மலிக்கா, சுஸ்ரீ, சுதாகர் சார்,ஸாதிகா அக்கா
நன்றி மேனகா
நன்றி மேனகா
நன்றி மேனகா
இதை மலிக்காவிற்கு கொடுக்கிறேன்.
நன்றி சுவையான சுவை சுஸ்ரீ
நன்றி ஹர்ஷினி சுவையான சுவை சுஸ்ரீ
நன்றி சுதாகர் சார்
இதை ஸாதிகா அக்கா, விஜி, நாஸியா மற்றும் ஆசியாவிற்கு கொடுக்கிறேன்.
நன்றி பாயிஜா ,ஷஃபிக்ஸ் . இதான் முதல் முதல் வாங்கிய விருது சந்தோஷம் தாங்கல.
இந்த விருதை பற்றி ஒன்று சொல்லனும், எப்ப பார்த்தாலும் என் பெரிய பையனும், என் கணவரும் அடிக்கடி இது போல் அவார்டுகள், மெடல்கள் வாங்குவார்கள். வருடா வருடம் வந்து காண்பிப்பார்கள்.
அப்ப நானும் என் சின்ன பையனும் நம்மால் தானே இது போல் எதுவும் வாங்க முடியல என்று ஒரு ஏக்கம். சின்னவன் எப்படியோ ஒரு முறை பேன்சி டிரஸில் கலந்து கொண்டு அதிலும் பரிசு, ரன்னிங்கில் வின் செய்து ஒரு மெடல் வாங்கியாச்சு.
நான் தான் நினைத்து கொண்டே இனி எங்க போய் படிச்சி மெடலும், அவார்டும் வாங்குவது. என்று நினைத்து கொண்டேன்.
கொஞ்சம் கூட நினைக்கல பிலாக் ஆரம்பிப்பேன், இது போல் அவார்டு உங்களை போல் உள்ள பதிவுலக அன்புள்ளங்கள் மூலம் அவார்டு வாங்குவேன் என்றும் நினைக்கவில்லை.
பிலாக் ஆரம்பித்ததும் குறிப்புகள் கொடுக்க ஆரம்பித்தது சவுதியில் இருக்கும் தாஜ் க்காகவும், சிங்கப்பூரில் இருக்கும் கதிஜத்துக்காவும். தான் இப்போது ஒரே வருடத்தில் பதிவுகள் 300 ஐ தாண்டி விட்டது.
தொடர்ந்து என் பதிவுகளை ஆரம்பத்திலிருந்து படித்து கருத்து தெரிவித்து கொண்டு இருக்கும் பாயிஜா, மேனகா, ஹர்ஷினி அம்மா, ஷபிக்ஸ்,நவாஸ்,அதிரை அபூபக்கர், தாஜ்,கதிஜத்து மிக்க நன்றி.
இப்போது ஆறு மாத காலமாக பாலோவர்ஸாக இனைந்து கருத்து தெரிவித்து கொண்டிருக்கும், அன்புள்ளங்களுக்கும் மிக்க நன்றி.
(வடிவேலு ஜெயிலுக்கு போறேன் நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் என்பது போல்..
எல்லோரும் மாறி மாறி அவார்டு கொடுத்து சந்தோஷத்தை பிலாக் மூலம் பரிமாறிக்கொள்கிறோம்
ஹலோ 1 , 2 , 3 மைக் டெஸ்டிங்க
இது வரை என் பதிவுகளை படிக்கும், பின்னூட்டம் கொடுக்கும், ஓட்டு போட்டு என்னை சந்தோஷ கடலில் ஆழ்த்திக்கொண்டிக்கும் பதிவுலக தோழ தோழியர்களுக்கு மிக்க நன்றி.
Tweet | ||||||
45 கருத்துகள்:
வாழ்த்துகளுங்கோ ...
ஜலீலா அக்கா வாழ்த்துக்கள் .... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
மாஷா அல்லாஹ்! கலக்குங்க சகோதரி (ஆமா நான் உங்க நெருக்கமான லிஸ்டுல இல்லையா? :((((( )
அன்பார்ந்த ஜலீலாக்காவின். இந்த மகத்தான சாதனை பெருமைப்பட வைக்கிறது.
மேலும் தாங்கள் பலவிருதுகளும் பெறவும். சமையல் ராணி என்றபட்டத்துடன்
அனைத்து குறிப்புகளும் கொடுத்து அசத்தும் உங்களுக்கு
அசத்தல் மகாராணி. என்ற புதிய பட்டத்தை
இந்த அன்புதங்கை தாங்களுக்கு வழங்குறேன்.
மாஷாஅல்லாஹ் இன்னும் அனைத்து வகையிலும் முன்னேற வாழ்த்துக்கள்.
அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
சலாம் ஜலீலா
முத்தான துவாக்கள் தருவீக
நீங்க நல்ல சமையல் குறிப்பு தருவீக
சூப்பர் டிப்ஸ் தருவிக
குழந்தை வளர்ப்பு பற்றி சொல்லுவீக
என்று மட்டும்தானே நினைத்தேன்
அடி ஆத்தி இம்புட்டு அழகா
எழுதுறீகளே[பேசுறீகளே]
தாங்கள் மென் மேலும் வாழ்க வளர்க
சூப்பர் டூப்பர் குறிப்புகளை தருக
நான் தாயாய் ஒரு நேரம் தவித்த பொழுது உங்கள் குறிப்பு எனக்கு மிகவும் உத்வியிருக்கு நன்றி
விருதுக்கு வாழ்த்துக்கள் ஜலீலா. ஏதோ சுமாரா கேக் செய்ய ஆரம்பிச்சேன், உங்கள் பாராட்டை பெற்ற பின் இன்னும் உற்சாகமாக உள்ளது. நன்றி. உங்கள் காமெடி (மைக், மெடல்) படித்து சிரிப்பு தாங்கலை:) இங்கேயும் அதே கதை தான்:) ஹி ஹி....
அக்கா நீங்க ரியலி கிரேட் கா அக்கா...முதலில் என் க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....கைதட்டல் இல்லாத கூட்டமா???
2010-ம் இனிமையாய் வர புத்தாண்டு வாழ்த்துகள்....
க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....க்ளாப்ஸ்....
அக்கா ரொம்ப சந்தோஷம் இவ்ளோ அழகா தமிழ் வர்த்தைக்ளை அள்ளி போட்டு இருக்கீங்க எனது மனமார்ந்த வாழ்த்துக்க்ள் உங்கள் ப்ணி மேன்மேலும் தொடர என் இதய்ம் க்ணிந்த வாழ்த்துக்க்ள் உங்க சமைய்ல் பார்த்து கற்றுக்கொண்டு இருக்கிறவள் நானும் ஒருத்தி உங்க ச்மையல் க்ற்றுக் கொண்டு என் க்ண்வ்ரை அசத்த் போகிறேன் எனக்கு ச்மையலில் ரொம்ப் expert ஆக் இல்லைன்னு என்க்கு ஒரு வ்ருத்த்ம் இருந்து கொண்டே இருந்தது இப்போ உங்க ப்ளாக் ப்பார்த்து என்க்கு ந்ம்பிக்கை வ்ந்து விட்ட்து அக்கா என் சகோத்ரி மாறி உங்கள் நினைத்து கொண்டு உங்கள் follow ப்ண்றேன் எனக்கு தேவையான்வ்களை கொடுத்து உத்வுவீங்க்ன்னு நம்புகிறேன் உங்கள் மாறி தான் நானும் எதும் தெரியாம்ல் இங்கே வ்ந்து இருக்கிறேன் உங்க்ள் மாறி நானும் ஒரு ந்ல்லா ச்மைக்க்ணும் உங்க ப்ணி தொடரனும் அக்கா வாழ்த்துக்க்ள்
நாஸியா இந்த பதிவு போடுவதற்குள் பெரும் பாடா போச்சு பா.
இன்னும் நிறைய எழுதல விட்டு போச்சு, நிறைய எரர், முனு நாளா போட்டு முடிப்பதற்குள் 10, 15 ஆப் ஆகிவிட்டது.
அருசுவை, தமிழ் குடும்பம் மூலம் தொடர்ந்த பெண்பதிவர் தோழிகளை சொன்னேன் பா.
இப்ப பதிவுலகில் நீஙக் எல்லோருமே நெருக்கமானவர்கள் தான் கொஞ்சம் இருங்க உங்கள் மனசு நோக வேண்டாம் பதிவின் கீழ் ஒரு டிஸ்கி போட்டு சொல்லிவிடுகிறேன்
சகோதரர் ஜமால் வாழ்த்துக்கு மிக்க நன்றி.
சாருஸ்ரீ நன்றி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்களுக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
கலக்கல் மலிக்கா கையால் அசத்தல் மகாராணி பட்டமா? ரொம்ப சந்தோஷம் கருத்து தெரிவித்தமைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி
தாஜ் நான் பிலாக் ஆரம்பித்து இவ்வளவு குறிப்பு கொடுத்து இவ்வள்வு பேருடைய மனதில் இடம் பெற்றுள்ளேன் என்றால் அதற்கு நீங்களும் ஒரு முக்கிய காரணம். நன்றி.
உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புத்தாணு நல் வாழ்த்துக்கள்.
விக்கி ரொமப் நாளா உஙக்ள் பிலாக் பார்க்கிறேன் ஆனால் சில எரர் காரணமா என்னால் அங்கு பதில் போட முடியல.
எனக்கும் கேக் செய்ய தெரியும் ஏதோ ஓரளவிற்கு தான் ஆனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் நல்ல அயிட்டம் வித விதமான கேக்குக்கள் தான் அதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சீமான் கனி ரொம்ப சந்தோஷம், நீங்க இத்தனை க்ளாப்ஸ் கொடுத்ததும் தான் எனக்கு பேசி முடிச்ச எபக்ட் வருது.. ஹி ஹி
2010 எல்லோருக்கும் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள்
ஷீரின் உங்களை போல் உள்ள சகோதரிகளுக்கு என் சமையல் உதவு வது ரொம்ப சந்தோஷம். இப்ப கூட ஊரில் போன போது என்ன்னை பார்த்து தெரிந்தவர்கள் தெரியாதவர்கள், வெளியூரில் இருக்கும் எஙக்ளுக்கு உங்கள் குறிப்புகள் தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைத்தது போல், ரொம்ப பயனுள்ளதாக இருக்கு என்றார்கள்.
எல்லோரும் தூஆ செய்யுங்கள் பா அது போதும் எனக்கு
கண்டிப்பா தூஆ செய்கிறேன் அக்கா புது வ்ருடம் பிரக்க் போகிறது என்ன PLAN ப்ண்ணி வ்ச்சிருக்கீங்க அக்கா ANYHTING SPECIAL
உங்கள் துஆ இருந்தால் அது போதும் எனக்கு பிலான் எதுவும் கிடையாது, பையன் வந்து இருக்கிறான், ஜனவரி 2 ஊருக்கு போய் விடுவான் ஆகையால் கொஞ்சம் மனசு சோகம், கெஸ்ட் வருவார்கள். மெனு அப்ப நினைத்து அப்ப செய்வது தான்.
மாஷா அல்லாஹ், ரொம்ப சந்தோசம். தொடர்ந்து எழுதுங்க. நிறைய பேர் பயனடையட்டும்.
மனமார்ந்த பாராட்டுக்கள் சகோதரி.
உங்களது திறமைக்கு கிடைத்த அங்கீகாரம். இன்னும் நிறைய சாதனைகள் படைத்திட வாழ்த்துக்கள். All the best.
மாஷா அல்லாஹ்!
நல்லா எழுதி(பேசி) இருக்கீன்றீர்கள்.
// அப்படி விழுந்து எழுந்திரிச்சாச்சு. //
இந்த இடத்தில் அப்படி இப்படினு விழுந்து எழுந்திரிச்சாச்சு என்று எழுதினால் கோர்வையாக வரும்.
மைக் டெஸ்ட் பேச ஆரம்பிக்கும் முன்னர் செய்ய வேண்டும், இடையில் வேண்டுமானல் கொர்ர்ர்ர் சவுண்ட் கொடுக்கலாம்.
ஆமா நீங்க பேசுனா கடையிசில வடை பெற மாட்டீர்களா சீய்ய்ய் விடை பெற மாட்டீர்களா நன்றின்னு சொல்லி கபால்ன்னு முடிச்சுட்டிங்க.
அனாலும் உங்களுக்கு குசும்பு ரொம்ப ஜாஸ்திங்க. அரசியல் கூட்டம் போல ஆரம்பித்து விட்டு லோகியம் விக்கிறவன் மாதிரி சொல்லி அவங்களை கலாய்க்கின்றீர்கள்.
நல்லா இருக்கு மிகவும் நன்றி. நான் அழைத்து பதிவு இட்டமைக்கு மிகவும் ஸ்பெசல் நன்றி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நன்றி.
உங்களது திறமைக்கு வாழ்த்துக்கள் .... புத்தாண்டு வாழ்த்துகள்....
இதில் போஸ்ட் பண்ணும் போது ரொம்ப கேப் விட்டு வருது அதுக்கு என்ன செய்யனும். யாராவது உதவுங்கள்
நவாஸ் & ஷபிக்ஸ் உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.
உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பித்தன் சார் இன்னும் நிறைய பதிவு சேர்க்க முடியல. மேலே வடைக்கு பதிலா கூட்டத்தில் கொடுத்ததை சேர்த்து விட்டேன் பாருங்கள்.
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
மகா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
thanks and congrats for all your efforts jaleela.so sweet.
அன்பார்ந்த தோழமைகளே
இங்கே பாருங்கள்
நம்ம எம்ஜிஆர் தூக்கிய இருவிரல்களிலேயே ஜலீலாக்காவின் வெற்றி தெரிகிறதல்லவா
வாழ்க ஜலீலாக்கா வளர்க ஜலீலாக்கா
ஹையோ ஜலி..நீங்களாஆஆஆஆ...!!சத்யராஜ் படம்,எம் ஜி ஆர் படம் போட்டு ஒரு அரசியல் கூட்டத்தில் பேசும் எபக்ட் கொடுத்து விட்டீர்களே.இப்பதிவை தட்டச்சு செய்யும் பொழுது கூட சிரித்துக்கொண்டே தட்டச்சு செய்கிறேன்.ஜலியை நினைத்து எனக்கு ரொம்ப பெருமையாகவும்,சந்தோஷமாகவும் உள்ளது.இன்னும்,இன்னும் வல்ல இறைவன் உங்கள் நியாயமான ஆசைகளையும்,ஏக்கங்களையும்,தேவைகளையும் கபூல் செய்ய நான் இரு கரம் ஏந்தி துஆ செய்கிறேன்.
நன்றி ஆசியா கொஞ்ச நாளா உங்களை காணும். பிஸியா இருக்கீங்களா?
பிள்ளைகள் நலமா? இந்தியாவில் தான் இருக்கிறீர்களா?
மலிக்கா மைக்க பிடிச்சு போடடோ இல்லாமல் எப்படி அதான் புரட்சி தலைவர் போட்டோவ போட்டு ஒரு பில்டப்பூஊஉ
ஸாதிகா அக்கா இன்று பதிவினால் உங்களை சிரிக்க வைத்ததற்கு எனக்கு ரொம்ப சந்தோஷம்.
நன்றி எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அக்கா.
உங்கள் பதிவுகளை படித்து நானும் நிறைய கற்றுக்கொண்டேன்.
இன்னும் இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்கனும்.. என்று கேட்டுக்கொள்கிறேன்.
(முன்பு போல் என்னால் அதிகம் நெட் பக்கம் வர முடியாததால் பதிவுகளை உடனே பார்க்க முடியலை)
ரொம்ப சந்தோஷம்...
மென்மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்..
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்...
அக்கா, நல்ல சுவராசியமா, பேசிக்கிற மாதிரியே அழகா எழுதியிருக்கீங்க. அதுலயும் இதுக்குப் போட்ட படங்கள் சூப்பர்!!
என்னையும் மறக்காம உங்க தோழிகள் லிஸ்ட்ல குறிப்பிட்டது ரொம்ப சந்தோஷம் அக்கா!! அதுலயும் அல்-அய்ன் வந்துட்டு, என்னையும் ஃபோன் செஞ்சி விசாரிச்சீங்க பாருங்க, இப்பத்தான் புரியுது, நீங்க எப்படி இவ்வளவு உயரத்தை அடைஞ்சீங்கன்னு, மனம் போல் வாழ்வு!!
உங்க நல்ல மனசும், பரந்த மனப்பான்மையும் இன்னும் இங்களை அதிக உயரத்துக்குக் கொண்டுபோகும்கிறதுல சந்தேகமே இல்லைக்கா!!
பாயிஜா முடிந்த போது வாங்க.உடம்பை பார்த்து கொள்ளுங்கள்.
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
அண்ணாமலையான் அவர்களுக்கு நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஹுஸைன்னாம்மா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி, என்னால் இப்படி தான் பா எழுத முடியும்.. , இடத்தில் இருந்தும் பார்க்க முடியல உங்கள் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிஒரே .
புத்தாண்டு வாழ்த்துக்கள்
ஜலீலா அக்கா ...ரொம்ப அழகா உங்க ஆதி,அந்தம் எளிய நடையில் சொல்லியிருக்கீங்க...உங்க அவார்டு ஏக்கம் தீர்ந்ததில் எங்களுக்கும் ரொம்ப சந்தோஷம். உங்கள் சமையல் குறிப்புகளால் பாராட்டு பெற்றவர்களில் நானும் ஒருத்தி. உங்க பில்டிங்கும் பேஸ்மென்டும் ஸ்ட்ராங்காக அமைய வாழ்த்துக்கள்.
மருமகளே தாஹிரா வாங்க வாங்க வந்தது ரொம்ப சந்தோஷம்.
உங்கள் சமையல் குறிப்புகளால் பாராட்டு பெற்றவர்களில் நானும் ஒருத்தி. கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு
உங்க பில்டிங்கும் பேஸ்மென்டும் ஸ்ட்ராங்காக அமைய வாழ்த்துக்கள். ஹா ஹா ஒரு வித்தியாசமான வாழ்த்து
ஜலீலா
இது உங்க பதிவா. இன்றுதான் இந்த ப்ளாக்கை கண்டு பிடித்தேன். (ஹை, கொலம்பஸ் கொட்டை). கண்ணைக்கட்டி காட்டில் விட்டா மாதிரி இருக்கு. ஒண்ணும் புரியலை. இது சாதிகா ப்ளாக்தானே. ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன். சூப்பரோ சூப்பர். கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு ஜலீலா ரொம்ப அழகா கோர்வையா எழுதி இருக்கீங்க. இதெல்லாம் பார்த்தா எனக்கும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கணும் போல தோணுதே. என்ன செய்ய.
வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஜேமாமி
ஹைய் ஜே மாமி ஜே ஜே மாமி நான் உங்களை அப்படி தானே கூப்பிடுவேன்.
வாங்க வாங்க ரொம்ப சந்தோஷம் என் பிலாக்கிற்கு வருகை தந்தமைக்கு.
ஏன் இவ்வளவு சிரமம் என் பிலாக்கை கண்டு பிடிக்க. ஸாதிகா அக்கா கிட்ட கேட்டு இருந்தா லிங்க் கொடுத்து இருப்பார்களே.
எல்லோருக்கும் இது போல் பிலாக் பார்த்தா ஆரம்பிக்கனும் என்று ஆசையா தான் இருக்கும், ம்ம் கலக்குங்க மாமி////
ம்க்கும்.
சாதிகா அக்காவா. உங்க அக்கா அதான் என் தங்கச்சி போனையே எடுக்க மாட்டேங்கறாளே. ஜனவரி 1 சாதிகாவும் போன் எடுக்கல, அந்த மர்ழியாவும் போன் எடுக்கல. இன்னிக்கு சாதிகா வீட்டுக்கு போன் செய்தா அக்கா இல்ல தங்கச்சி கிட்டதான் பேசினேன். இன்னிக்கும் அக்கா மொபைல எடுக்கவே இல்ல. அந்தம்மா ப்ளாக்கையே நேத்து நானா கண்டு பிடிச்சேன். இந்த லட்சணத்திலே உங்க அக்கா கிட்ட லிங்க் வாங்கவா. எதாவது கேட்டா மாமின்னு ஒரு சிரிப்பு சிரிப்பாங்க. அவ்வளவுதான் நான் அம்பேல்.
ஒரு ரெண்டு நாள் உங்க ரெண்டு பேர் ப்ளாக்கையும் சுத்தி வந்தாதான் புரியும் போல இருக்கு. ஆனா கொஞ்சம் வாடைதான் (அதுதான் ஊர்வன, பறப்பன, நீந்துவன எல்லாம்) தூக்கலா இருக்கு. பரவாயில்லை நட்புக்காக மூக்கை மூடிண்டு சுத்தி வரேன்.
அன்புடன்
ஜேமாமி
ஜே மாமி, ஸாதிகா அக்கா ஊருக்கு போய் இருக்காங்க.
மர்லி இரண்டாவது குழந்தை பிறந்ததிலிருந்து ஒரே பிஸி தலைய பிச்சிகொன்டு இருக்காங்க.
நட்புக்காக மூக்கை மூடிண்டு வருவது ரொம்ப சந்தோஷம், ஆனால் எனக்கு உங்காத்து சகவாசம் தான் சின்னதிலிருந்து அதிகம், எல்லோருமே நட்புக்காக தான் நான் சமைத்ததை (வெஜ் அயிட்டம்) சந்தோஷமா சாப்பிடுவாங்க.
உங்களுக்கு நான் இருக்கேன் மாமி, வந்தது சந்தோஷம்.
உபயோகமான குறிப்புக்கள் நிறையக் கொடுக்கிறீர்கள். இத்தனை விருதுகள் வாங்கி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் ஜலீலா.
நான் வெகு காலமாகவே உங்கள் வலைப்பூ பார்வையிட்டு வருகிறேன். கண்ணை மூடிக் கொண்டு (பறப்பன கண்ணில் படாதிருக்கத்தான்) மீதி எல்லாம் படித்துவிடுவேன். :) இப்போ அழைப்பு வேறு வைத்து விட்டீர்கள். உங்களை வாழ்த்தவும் என் வருகையை நிரூபிக்கவுமென இந்தப் பதிவு. :)
மீண்டும் வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா
Thank you imma
ஜலீலா அக்கா சூப்பரா இருக்கு உங்க ப்ளாக் நேற்று ஸாதிகா அக்கா சொல்லி தான் நீங்க ப்ளாக் ஓப்பன் செய்திருப்பது தெரியும்.
நீங்க அசத்தல் ராணின்னு தெரியும் இப்படி அசத்துவீங்கன்னு எதிர்பார்கலை. மேலும் தொடர வாழ்த்துகள்.
அன்புடன் செய்யதுகதீஜா.
கதிஜா வாங்க வாங்க பிள்ளைகள் நலமா?
வருகைக்கு மிக்க நன்றி, உங்கள் பாராட்டுக்கும் மிக்க சந்தோஷம்.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா