Sunday, April 1, 2012

பார்லி இட்லி - Barley Idli + கர்பிணி பெண்களுக்கு டிப்ஸ்




அருனா மாணிக்கத்தின் பார்லி இட்லி 
( இதை கர்பிணி பெண்களுக்கு கொடுக்கலாம்)

தேவையானவை 

இட்லி அரிசி - 1 கப்
பார்லி - 1 கப்
உளுந்து - அரை கப்
வெந்தயம் - அரை தேக்கரண்டி

செய்முறை
அரிசியையும் பார்லியையும் ஒன்றாகவும்
உளுந்தையும் வெந்தயத்தையும்  தனியாகவும் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.
முதலில் வெந்தயம் உளுந்து இரண்டையும் மையாக அரைத்து விட்டு, அரிசியையும் பார்லியையும் ஒன்றாக அரைத்து இரண்டையும் ஒன்றாக கலந்து8 மணி நேரம் புளிக்க விடவும்.




மாவில் உப்பு தேவைக்கு + இட்லிசோடா சிறிது இரண்டையும் தண்ணீரில் கலந்து சேர்த்து பதமாககரைத்து இட்லி பானையில் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
சுவையான ஷாப்டான பார்லி இட்லி ரெடி.

டிப்ஸ்: இது கர்பிணி பெண்களுக்கு 7 மாதத்துக்கு பிறகு கால் வீக்கத்துக்கு பார்லி ஊறவைத்து வேகவைத்த தண்ணீரை பருகினால் கால் வீக்கம் குறையும்.

அந்த தண்ணீர் சில கர்பிணி பெண்களுக்கு குமட்டும் குடிக்க முடியாது.

இப்படி சமையலில் டிபன் அயிட்டத்தில் நாம் செய்து சாப்பிட்டால் கொஞ்சம் ருசியாகவும் சாப்பிடலாம்.

நாம் பார்லி பல வகை சமையலாக பருப்படை, Barley  சூப், Barley sweet pongal, Barley தட்டை, இட்லி, தோசையில் கலந்து செய்து சாப்பிடலாம்.

இந்த எலலா விதமும் நான் அடிக்கடி சமைப்பது தான், இட்லி செய்து பார்த்ததில்லை. அருனா மாணிக்கம் பதிவில் பார்த்து செய்தது. ரொம்ப அருமை , நன்றி அருனா.


டிஸ்கி: மற்றவர்கள் ச்மையலை செய்து பார்த்தால் தயவு செய்து அவர்களுக்கு ஒரு நன்றியும் அவர்கள் லின்கும் கொடுங்கள், ஓவ்வொருத்தரும் வேலை மென்க்கெட்டு சிந்தித்து செய்கிறோம் , அதை ஈசியாக காப்பி அடித்து போட்டு கொள்ளாதீர்கள்.இது இங்கு வந்து காப்பி அடிக்கும் வெப்சைட் காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் தவறாக எண்ணவேண்டாம்.


sending this recipe to umm mymoon's healthy morsels pregnancy

13 கருத்துகள்:

சாந்தி மாரியப்பன் said...

வித்தியாசமான குறிப்பு.. நன்றி ஜலீலாக்கா.

schmetterlingwords said...

Migavum arumaiyaana kurippu... Barleyil ivvalavu nanmai iruppadhai therindhu kondom. Healthy Morsels - Pregnancy Event il pagirndhamaikku nanrigal pala.. Thodarndhu aadharavu aliyungal :)

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பயனுள்ள பகிர்வுகல்.. பாராட்டுக்கள்..

Asiya Omar said...

பார்லி கஞ்சி கேள்வி பட்டிருக்கிறேன்.இது மாதிரி வாய்க்கு ருசியாக செய்து கொடுத்தால் மிக நன்றாக இருக்கும்.
எதிலும் உங்கள் முத்திரை தனி தான் ஜலீலா.

ஸாதிகா said...

பார்லியில் இட்லியா?சூப்பர்.

Menaga Sathia said...

மிகவும் சத்தான குறிப்பு,அரு்மை!!

Jaleela Kamal said...

வாங்க சாந்தி உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

//Migavum arumaiyaana kurippu... Barleyil ivvalavu nanmai iruppadhai therindhu kondom. Healthy Morsels - Pregnancy Event il pagirndhamaikku nanrigal pala.. Thodarndhu aadharavu aliyungal :)//

வருகைக்கு மிக்க நன்றி ஆயிஷா

Jaleela Kamal said...

//Migavum arumaiyaana kurippu... Barleyil ivvalavu nanmai iruppadhai therindhu kondom. Healthy Morsels - Pregnancy Event il pagirndhamaikku nanrigal pala.. Thodarndhu aadharavu aliyungal :)//

வருகைக்கு மிக்க நன்றி ஆயிஷா

Jaleela Kamal said...

இராஜ ராஜேஸ்வரி வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

//பார்லி கஞ்சி கேள்வி பட்டிருக்கிறேன்.இது மாதிரி வாய்க்கு ருசியாக செய்து கொடுத்தால் மிக நன்றாக இருக்கும்.
எதிலும் உங்கள் முத்திரை தனி தான் ஜலீலா.//


அதுக்கென்ன ஆசியா அல் அயினுக்கு பார்சல் அனுப்பிடவா??

Jaleela Kamal said...

ஆமாம் ஸாதிகா அக்கா அடிக்கடி பார்லியை சூப் மற்றும் அடையில் செய்வதுண்டு.,
இட்லியில் எப்படி வருமோன்னு நினைத்தேன் சூப்பராக வந்தது,

உஙக்ள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி

Jaleela Kamal said...

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மேனகா

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா