Wednesday, June 14, 2017

இறால் காலிப்ளவர் முட்டை குதும்பு ( சைவம் & அசைவம்) .




இறால் காலிப்ளவர் முட்டை குதும்பு ( சைவம் &அசைவம்)
.
வெஜிடேரியன் சமைப்பவர்கள் இதே முறையில் இறாலைமட்டும் தவிர்த்து காலிப்ளவர் முட்டையில் செய்து கொள்ளலாம். காய் அரைகிலோவும்,முட்டை 3 ம் சேர்த்து கொள்ளலாம்.
இறால் காலிப்ளவர் முட்டை குதும்பு கொஞ்சம் நிறை கூட்டோடு 4 பேருக்கு போதுமானதாக இருக்கும்.



  • பெரிய இறால்கால் கிலோ
  • முட்டைஇரண்டு
  • காலிப்ளவர் – கால் கிலோ
  • வெங்காயம் - இரண்டு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள் ஸ்பூன்
  • தக்காளி - இரண்டு
  • பச்சை மிளகாய் - இரண்டு
  • மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
  • பட்டை - ஒரு சிறிய துண்டு
  • எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன்
  • கொத்தமல்லி - சிறிது
 செய்முறை
  • இறாலை சுத்தம் செய்து நடுவில் மேலும், கீழும் உள்ள அழுக்கை எடுத்து கழுவி தனியாக வைக்கவும்.காலிப்ளவரை பூக்களாக பிரித்து கழுவி வைக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து பட்டை, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி பச்சை மிளகாய் ஒடித்து போட்டு தக்காளியை துண்டுகளாக்கி சேர்க்கவும். இரண்டு நிமிடம் மூடி போட்டு வேகவிடவும்.
  • பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு சுத்தம் செய்து வைத்திருக்கும் இறால் மற்றும் காலிப்ப்ளவர் சேர்த்து  ஒரு கிளறு கிளறி மூடி போட்டு பத்து நிமிடம் வேக வைக்கவும்.
  • முட்டையில் எலுமிச்சை சாறு பிழிந்து நல்ல அடித்து வெந்து கொண்டிருக்கும் இறாலின் மீது பரவலாக ஊற்றவும். ஊற்றி மூடி போட்டு சிம்மில் வைத்து வேக விடவும்.
  • இரண்டு நிமிடம் கழித்து தோசை திருப்புவது போல் முட்டையோடு சேர்ந்து இறலை திருப்பி விட்டு மறுபடியும் மூடிபோட்டு சிம்மில் வைத்து வேக விடவும்.
  • வெந்ததும் நல்ல ஒரு கிளறு கிளறி நன்கு கொத்தி விட்டு  கொத்தமல்லி தூவி இறக்கவும்.








https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா