வெயில் காலம் ஆரம்பித்து விட்டது இனி கூல் கூலாகா இருப்போம், நோன்பு காலமும் சரியான கொளுத்தும் வெயிலில் ஆரம்பித்துள்ளது.
வித்தியாசமான பாக்கிஸ்தானி ஸ்டைல் ஃப்ரூட் கஸ்டட் ( தூல் துல்காரி)
நாம் செய்யும் ஃப்ரூட் கஸ்டட் தான் மேலும் சுவை ஊட்ட ரசகுல்லா & குலோப் ஜாமூன்.
இந்த கோடைக்கு ஏற்ற குளு குளு கஸ்டட், பிள்ளைகளுக்கு ரொம்ப பிடிச்சது பிள்ளைகளுக்கு மட்டுமா பெரியவர்களுக்கும் தான்.
ஈசியா செய்துவிடலாம்.
தேவையானவை
பால் - அரை லிட்டர்
கஸ்டட் பவுடர் - ஒன்னறை மேசை கரண்டி
பாதம் ஃபிளேக்ஸ் - ஒரு மேசை கரண்டி
ஸ்வீட்டன்ட் கன்டெஸ்ட் மில்க் - அரை கப்
வாழைபழம் - ஒன்று பெரியது
மாதுளை - கால் கப்
ஆப்பில் - கால் கப் துண்டுகளாக வெட்டியது
பச்சை மற்றும் கருப்பு திராட்சை - தலா 5
சின்ன ரசகுல்லா - 5
குலோப் ஜாமூன் - 5
பச்சை வண்ண ஜெல்லி அ கடல் பாசி - வேண்டிய வடிவில் கட் செய்தது.
குங்குமப்பூ - சிறிது
செய்முறை
பாலில் கஸ்டர் பவுடரை கரைத்து பிறகு பாலை காய்ச்சவும்.
சூடான பாலில் கரைத்தால் கட்டி தட்டும்.
கண்டெஸ்ட் மில்க் , பாதம் பிளேக்ஸ் சேர்த்து காய்ச்சவும், கைவிடாமல் கிளறவும், கட்டியாகி வரும், அப்படியே ஆறவிட்டு குளிறவிடவும்.
குளிர வைத்த கஸ்டடில் வெட்டிய பழவகைகளை ( ஆப்பிள் மற்றும் வாழைப்பழம்) மற்றும் மாதுளை சேர்த்து கலக்க்கவும்.
மேலே குலோப் ஜாமூன், ரசகுல்லா, திராட்சை வகைகள் சேர்த்து குங்கும பூ தூவி பரிமாறவும்.
வித்தியாசமான பாக்கிஸ்தானியர்களில் ஃப்ரூட் கஸ்டர் ( Dhoodth Dullaari ) ரெடி.
இது என்னுடைய பைனாப்பிள் கஸ்டட் ரெசிபியை அறுசுவை மற்றும் முகநூல் தோழி அப்சரா செய்து அனுப்பியது
கிழே உள்ளது பைனாப்பிள் கஸ்டட் வித் அகர் அகர்
குறிப்பு:
இத பார்ர்டியில் வைத்தாலும் கலர்ஃபுல்லாக இருக்கும்.
வாழை [பழம் அரிந்ததும் கருத்துவிடும், கருத்து போகாமல் இருக்க அரிந்தது சிறிது எலுமிச்சை சாறு ஊற்றி கொள்ளலாம்.
உடனே சாப்பிடுவதாக இருந்தால் எலுமிச்சை சாறு தேவையில்லை
வாவ் யெம்மி யெம்மி ஒன்ஸ் மோர்.....தான் போங்க
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா