இந்த வருடம் சிறப்பாக நோன்பு நிறைவேறியது இனி வருகிற வருடமும் ஆண்டவன் சிறப்பாக நிறைவேற்றி தர துஆ கேட்போம்.
பீட்ரூட் ஹல்வா//ஈத் பற்றி மெயிலில் வந்த த்கவல்/
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
ஈது பெருநாட்கள் கடமையாக்கப்பட்ட விபரம்:
இஸ்லாத்தில் ஈது பெருநாட்கள் கடமையாக்கப்பட்டதற்கு காரணம்;
1.அல்லாஹுத்தஆலா அடியானுக்கு இட்ட கட்டளையை ஏற்று, அவனுக்கு முற்றிலும் அடிபணிந்து அதை நிறைவேற்றிய மகிழ்ச்சியை அவனது தூதர் காட்டிய வழியில் வெளிப்படுத்துவது.
2. இரத்த பந்த உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உதவி செய்து அவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்வது.
அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹுடைய தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு (ஹிஜ்ரத் செய்து) வந்த சமயம் மதீனாவாசிகள்(அன்சாரிகள்) இரண்டு நாட்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவ்விரு நாட்களில் ஏன் விளையாடுகிறீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு, அறியாமைக்காலத்தில் இவ்விரு நாட்களில் விளையாடுவோம் என்று பதில் கூறினார்கள். அப்போது அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் இவ்விரு நாட்களை விட சிறந்த நாட்களை உங்களுக்கு பகரமாக்கி இருக்கின்றான். அதுதான் ஈதுல் அழ்ஹா, ஈதுல் ஃபித்ரு (ஆகிய இரு பெருநாட்கள்) ஆகும்.
(அஹ்மத்நஸயீஇப்னு ஹிப்பான்)இதன்படி, முதல் ஈதுல் ஃபித்ரு பெருநாள் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதல் கடமையாக்கப்பட்டது.
ஈதுல் ஃபித்ரு பெருநாள் தினத்தில் கடைப்பிடிக்க வேண்டிய செயல் பாடுகள்:
1. குளிப்பது
2. புதிய ஆடைகள் அணிந்து கொள்ளுதல், அல்லது தன்னிடம் இருக்கும் ஆடைகளில் சிறந்த ஆடையை அணிந்து கொள்ளுதல்.
3. தொழுகைக்கு புறப்படும் முன் உணவு உண்டுகொள்ளுதல். நபி(ஸல்) அவர்கள் ஈதுல் ஃபித்ரு பெருநாளன்று தொழுகைக்குச் செல்லும் முன் ஒற்றைப்படையாக பேரீத்தம் பழங்களை சாப்பிட்டார்கள் என்று அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4. ஜக்காத்துல் ஃபித்ரை தொழுகைக்கு முன்பே உறியவர்களுக்கு கொடுத்து விடுதல். இரண்டரை கிலோ கோதுமை அல்லது அரிசி போன்ற தானியமாகவோ, அல்லது அதன் கிரயத்தையோ ஃபித்ராவாக நிறைவேற்ற வேண்டும்.
5. இரத்த பந்த உறவினர்கள் ஏழைகளுக்கு உபகாரம் செய்தல்.
6. தொழுகைக்குச் செல்லும்போது ஒரு வழியாகவும், திரும்பும்போது மற்றொரு வழியாகவும் வருதல்.
7. பெருநாளன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் விளையாட்டுக்களிலும் ஈடுபடலாம்.இதனால் கடமையான தொழுகையைவிட்டு விடாமலும், முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் நடந்து கொள்ள வேண்டும்.
ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள்:நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக அபூ அய்யூப்(ரழி) அறிவிக்கிறார்கள்: யார் ரமழான் மாத்தில் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நோன்புகள் வைக்கிறாரோ அவர் காலம் முழுவதும் நோன்பு வைத்தவர் போன்றாவார். (முஸ்லிம்)தொகுப்பு: மவ்லவி அ. சீனி நைனார் முஹம்மது தாவூதி. துபாய். (0559764994)
35 கருத்துகள்:
முப்பது நோன்பை தவராதுக் கடை பிடித்து, இறைவனை பய பக்த்தியோட தொழுதுற்ற அனைத்து நெஞ்சங்களையும்,நீங்கள் நோயில்லாமலும் ,எந்த ஒருக் கஷ்ட்டம் இல்லாமலேயும்,நீடூழி வாழ "துஆ"செய்தவன்னமாக பெருநாளைக் கொண்டாடுகிறேன்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனம் கனிந்த இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள் அக்கா.
:)
my heartiest ramalan wishes to you and to your family members.....
ஜலீலாக்கா, நலமா? உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்.
ஜலீ,உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்.
இனிய ரமலான் வாழ்த்துக்கள்!!
ஈத் திருநாள் கொண்டாடும் விதம் பற்றிய குறிப்புகள் பற்றி தெரிந்து கொண்டேன். Thank you.
ஈத் முபாரக்!
ஜலீலாக்காவுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இதயம் நிறைந்த பெருநாள் வாழ்த்துக்கள்!
அருமை.அன்புடன் அனைவருக்கும் ஈத் முபாரக்.
ஈத் முபாரக்!!
பெருநாளைக் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது அன்பான வழ்த்துக்கள்.
அத்தோடு எனது பதிவில் உள்ள பெருநாள் வாழ்த்து அட்டையை தமிழில் உலகெங்கிலும் உள்ள உங்கள் உறவுகளுக்கு அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்
நன்றி
http://thagavalthulikal.blogspot.com/
உங்கள் அனைவருக்கும் எனது இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துகள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பெருநாள் வாழ்த்துகள்..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பெருநாள் வாழ்த்துகள்..
என் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்..
என் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்..
பீட் ரூட் ஹல்வா எடுத்துக் கொண்டேன். ஈ மெயிலில் வந்ததையும் படித்து மகிழ்ந்தேன். உங்களுக்கு மின்னஞ்சலில் வாழ்த்தை பகிர்ந்து கொண்டாலும், மீண்டும் ஒரு முறை.....
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய ஈத் அல் ஃபித்ர் நல் வாழ்த்துகள்!!
as Salamu alaykum Jaleelakkaa,
Eid Mubarak to you and your family!!
ஈகை திருநாள் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய ஈத் அல் ஃபித்ர் நல் வாழ்த்துகள்!!ஜலீக்கா
முதலில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்,
நண்பர்கள், உறவினர்கள், சகோதர சகோதரிகள் மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்..
ஜலீலா குடும்பத்தாருக்கு என் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
இனிய ரமலான் வாழ்த்துக்கள்.
eath mubarack to my dear sister.
convay my wishs to your family and all.
Tell to malikka,husainamma, nasiya,jailani to other blog wrriters.
hope you and all are fine, pray for the same.
Insaw allahh may fullfill all joys and wealth. good health also.
eid spl ennamma???
Briyani parcel annupunga?
kudavay antha udaikka mudiyatha koluuk kattaiyum annuppavum.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஈகை பெருநாள் நல் வாழ்த்துகள் அக்கா
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனம் கனிந்த இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்.
இனிய ஈத் முபாரக்.. பெருநாள் வாழ்த்துகள்..
பெருநாள் வாழ்த்துக்கள் :-)
நன்றி முகம்மது அய்யுப்
நன்றி பிரபா
நன்றி சாரு
நன்றி அஸ்மா
நன்றீ சை கொ ப
நன்றி சசி தம்பி
நன்றி மேனகா
நன்றி தோழி விஜி
நன்றி சித்ரா நன்றி கவி சிவா
நன்றி ஆசியா
நண்றி ஸதிகா அக்கா
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா