#முஸ்லீம்வீட்டுகல்யாண# பச்ச போடும் நாஷ்டா #பாய் வீட்டுமட்டன் சேமியா பிரியாணி# #பாய்வீட்டு# கல்யாணத்தில் செய்யும் டிபன் வகைகளில் மிகவும் பிரபலமான உணவு
இதில் ஆட்டுகறீ 1 1/4 கிலோ என்பது கல்யாண விருந்துகளுக்கு அப்படி சேர்க்கனும் சாதாரனமாக வீட்டில் செய்வதாக இருந்தால் முக்கால் கிலோ போட்டால் போதும்.டால்டான்னு சொன்னது பெரிய விருந்து களீல் டால்டா சேர்ப்பார்கள்.
ஆட்டு கறி - 1 1/4 கிலோ
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 1/2 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட் - எட்டு தேக்கரண்டி
எண்ணெய் - அரை கப் (100 கிராம்)
நெய் - 50 கிராம் கால் கப்
மிளகாய் தூள் - முன்று தேக்கரண்டி
டால்டா or ghee - இரண்டு தேக்கரண்டி (சேமியா வறுக்க)
கொத்தமல்லி தழை - அரை கட்டு
புதினா - பத்து இதழ்
பச்சை மிளகாய் - ஐந்து
பட்டை - ஒரு அங்குலம் துண்டு இரண்டு
ஏலம், கிராம்பு - தலா இரண்டு
தயிர் - அரைகப்
உப்பு தேவைக்கு
எண்ணெயை காய வைத்து பட்டை, ஏலம், போட்டு வெங்கயத்தை அரிந்து போட்டு வதக்கவும். வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி தக்களியை போட்டு மிளகாய் தூள், உப்பு சேர்த்து மூடிபோட்டு தக்காளியை வேக விடவும்.
வெந்ததும் கறியை போட்டு இரண்டு மூன்று நிமிடம் கிளறிக்கொண்டே இருக்கவும். பிறகு தீயை சிம்மில் வைத்து கறியை போட்டு வேக விடவும்.
சேமியா அளவு ஒன்றுக்கு ஒன்றரை கப் வீதம் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் சேமியாவை கொட்டி இரண்டு மூன்று கொதி வந்ததும் சிம்மில் வைத்து வேக வைத்து அடுப்பை ஆஃப் பண்ணி விட்டு பத்து சிறூ தீயில் வைத்து தம்மில் விடவும், பதினைந்து நிமிடம் கழித்து பிரட்டி விட்டு பரிமாறவும்.
சுமார் 9 லிருந்து 10 பேர் சாப்பிடலாம்
இதற்கு தொட்டுக்கொள்ள புதினா துவையல், எல்லா வகையான ஊறுகாய்கள் பொருத்தமாக இருக்கும்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா