பேலியோ டயட் கடைபிடிப்பவர்களுக்கு இந்த ரெசிபி உதவும். இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் அசைவ பக்க உணவுகளுடன் பேலியோவில் சொல்ல பட்ட எண்ணை வகைகளை சேர்த்து கொண்டால் மிகவும் இலகு.
மட்டன் கூட எல்லா காய்கறிகளும் நாங்கள் சேர்த்து செய்வோம்/
மட்டன் முருங்கக்காய் சால்னா
மட்டன் உருளை சால்னா
மட்டன் கத்திரிக்காய் சால்னா
மட்டன் வெண்டைக்காய் சால்னா
மட்டன் கருனை கிழங்கு சால்னா
என்ன காய்கள் சேர்க்கும் நேரமும் வேக வைக்கும் நேரமும் மாறுபடும்
என் யுடியுப் சேனலில் முடிந்த அளவு குறிப்புகள் போஸ்ட் பண்ணி கொண்டு இருக்கிறேன்,.
உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து சப்ஸ்கிரைப் செய்ய கொள்ளுங்கள்
இந்த பிலாக் ஆரம்பித்து 7 வருடங்கள் மேல் ஆகி விட்டது,
யாருக்கு என்ன குறிப்பு போடனும் என்று சொன்னாலும் செய்து வீடியோவாக தர பார்கிறேன்.
இத்தனை வருடம் ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி இனியும் உங்கள் அனைவரின் ஆதரவும் தொடரும் என நம்புகிறேன்.
என் குறிப்புகளை செய்து பார்ப்பவர்கள் அதை சுவையை இங்கே பகிர்ந்து கொண்டால் மிகவும் சந்தோஷ படுவேன்.
மட்டனுடன் மற்ற காய்கள் போடுவதை விட முருங்கக்காய் சேர்த்து செய்தால் கம கமன்னு 10 வீட்டு கதவை தட்டும்.. இந்த சாலானாவின் வாசனை...
கறி முருங்ககாய் சால்னா
தேவையான பொருட்கள்
கறி மட்டன் 1/2 கிலோ
வெங்காயம் 2
தக்காளி 2
முருங்கக்காய் 2
நல்லெண்ணை
நெய்
தயிர் கால் கப்
பட்டை ஏலக்காய் லவங்கல்
தனியா தூள் 3 தேக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
ம்ஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
தேங்காய் கால் கப்
செய்முறை
குக்கரில் நல்லெண்ணை + நெய் போட்டு பட்டை லவங்கம் ஏலக்காய் பெரிய ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் நீளவாக்கில் அரிந்து சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் மடங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து பச்ச வாடை போக நன்கு வதக்கவும்.
அடுத்து தக்காளி, பச்சமிளகாய் புதினா கொத்துமல்ல்லி எல்லாம் சேர்த்து நன்கு வதக்கவும்
தக்காளி மடங்கியதும் மசலா தூள் வகைகளை சேர்த்து கிளறி 5 தயிர் சேர்த்து வதக்கவும். இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றில் குக்கரை மூடி மட்டனை வேக விடவும், 5 விசில் விட்டு இரக்கவும்.
குக்கர் ஆவி அடங்கியதும் முருங்க்க்காயை கட் செய்து சேர்த்து தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்க விட்டு இரக்கவும். முருங்க்காய் சேர்த்ததும் 5 நிமிடத்தில் வெந்துவிடும் ரொம்ப நேரம் விட்டால் குச்சி தான் மிஞ்சும். குக்கரில் இருந்து சால்னாவை வேறு ஒரு சட்டிக்கு மாற்றி விட்டு முருங்க்கக்காய் , தேங்காய் சேர்த்து கொதிக்க விட்டு இரக்கவும்.
Linking to #livogenironchef the Iron Chef contest on IndiBlogger.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975https://www.facebook.com/Samaiyalattakaasamhttp://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
3 கருத்துகள்:
இன்னிக்கு விரதம் முடிச்சுட்டு வந்து பார்க்குறேன்
வாங்க ராஜி ரொம்ப சந்தோஷம் கண்டிப்பா செய்து பாருங்கள்
வீடியோ சமையல் 100 %கொடுக்க முடியல நிறைய சரியா போஸ்ட் பண்ன முடியல , முடிந்த அளவிற்கு போட்டு இருக்கேன்/
Delicious satisfying thick gravy/soup. Loving it.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா