தேங்காய் பர்பி என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் அதில் முந்திரி பாதம் போட்டு செய்வதை விட கொஞ்சம் வித்தியாசமாக பிஸ்தா பருப்பை பொடிட்து செய்து சாப்பிட்டு பாருங்கள். சுவை அருமையாக இருக்கும்
( பேலியோ டயட் பாலோ செய்பவர்கள் சர்க்கரை தவிர்த்து செய்து சாப்பிடலாம்.)
ஆயத்த நேரம் : 5 நிமிடம்
சமைக்கும் நேரம் : 10 - 15 நிமிடம்
பிஸ்தா தேங்காய் பர்பி
தேங்காய் துருவல் – 200 கிராம் ஃப்ரஷ் அல்லது ரெடிமேட்
சர்க்கரை – 200கிராம்
தண்ணீர் - கால் கப்
பிஸ்தா – அரை கப்
பிஸ்தா – அரை கப்
ஏலப்பொடி அரை தேக்கரண்டி
நெய் - ஒரு மேசை கரண்டி
நெய் - ஒரு மேசை கரண்டி
செய்முறை
ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் நெய் ஊற்றி பிஸ்தாவை பொடித்து சேர்த்து வறுத்து அதே பாத்திரத்தில் தேங்காயையும் போட்டு வறுத்து சர்க்கரை சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டுஅப்படியே கிளறி சுருண்டு வரும் வரை கிளறவும்.
நெய் தடவிய தட்டில் ஊற்றி சமமாக பரப்பி விட்டு சிறிது நேரத்தில் துண்டு போட்டு விடவேண்டும்.சிறிது நேரம் கழித்து துண்டு போட்டால் சரியாக துண்டு போட வராது.
இது அவரவர் விருப்பமான வடிவத்தில் கட் பண்ணலாம். ஆறியதும் பிரித்து எடுத்து ஒரு கண்டெயினரில் போட்டு வைக்கவும். 15 நாள் வரை கெடாது. சுவையான நட்ஸ் தேங்காய் பர்பி ரெடி
தேஙகாய் உணவுகள்
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா