Tuesday, February 13, 2018

பேலியோ குக்கர் கேக் - Paleo Cooker Cake



ஏற்கனவே முந்தய பதிவுகளில் தேங்காய் பவுடர் தயாரிக்கும் முறையை விளக்கி இருந்தேன் அந்த லிங்க் கிழே கொடுத்துள்ளேன்.
Cococnut Flour 
Coconut Bread
http://samaiyalattakaasam.blogspot.ae/2017/12/how-to-to-prepare-coconut-flour-for.html
http://samaiyalattakaasam.blogspot.ae/2017/12/paleo-bread-with-coconut-flour.html


Cookery Video 

தேவையான பொருட்கள்


தேங்காய் பவுடர் - அரை கப்
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
தேங்காய் எண்ணை - 3 தேக்கரண்டி
உப்பு ஒரு சிட்டிக்கை
டார்க் சாக்லேட் - ஒரு மேசைகரண்டி
பட்டை பொடி - கால் தேக்கரண்டி
முட்டை - ஒன்று
பால் (அ) தண்ணீர் (அ) காபி - ஒரு மேசைகரண்டி
நட்ஸ் தேவைப்பட்டால்
தேன் சிறிது - மெயிண்டனன்ஸ் டயட்டில் இருப்பவர்கள் சேர்த்து கொள்ளலாம்.

செய்முறை


முட்டை தேங்காய எண்ணை யை ஒன்றாக அடிக்கவும்
டார்க் சாக்லேட்டை உருக்கி சேர்த்து அடிக்கவும்.
பட்டை பொடி, தேங்காய் பவுடர் , பேக்கிங் பவுடர் உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்துசலித்து கொள்ளவும்.
முட்டை கலவையில் சிறிது சிறிதாக தேங்காய் பொடி கலவையை சேர்த்து கலக்கி தேவைக்கும் சிறிது பால் அல்லது தண்ணீர் சேர்த்து கலக்கவும். காபி சுவை பிடித்திருந்தால் காபியாக கலக்கி சேர்த்துகொள்ளலாம்



ஓவனை பிரீ ஹீட் செய்வது போல குக்கரில் அடியில் உப்பை கொட்டி பரப்பி விட்டு சிறு தீயில் வைத்து பிரீஹீட் செய்யவும்.



கலக்கிய கேக் கலவையை ஒரு கேக் ஓவன் அல்லது கண்ணாடி டம்ளர் அல்லது பேப்பர் கப்பில் ஊற்றி உள்ளே வைக்கவும்.
ஒரு முக்கியமான விஷியம் இதில் கவனிக்க வேண்டியது குக்கர் உள்ளே இருக்கும் வாசரை எடுத்து விடவேணும் ,

வாசரை எடுத்து விட்டு மூடி போட்டு வெயிட் போடாமல் சிறு தீயில் 20 நிமிடம் ஓவனில் வைப்பது போலவே வைத்து வேகவைக்கவும்.



சுவை கொஞ்சமும் மாறாதா ஓவன் கேக் போலவே இருக்கும்.

உங்கள் விருப்பத்துக்கு என்ன ப்ளேவர் கேக் வேண்டுமானாலும் வைக்கலாம்.


சுவையான தேங்காய் பூ கேக் ரெடி..



Coconut Flour Paleo Cake Without oven cooker method

Pressure Cooker Recipes,Cooker Cake,Cake without oven,Coconut Flour Cake
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

1 கருத்துகள்:

Priya Anandakumar said...

super akka very nice...

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா