Thursday, March 1, 2018

ராகி கம்பு குழி பணியாரம் - Ragi Bajra Kuzipaniyaram




சிலருக்கு ராகி கூழ் பிடிக்காது அதற்கு நாம் இப்படி குழிபணியாரமாகவும் செய்து சாப்பிடலாம்.
கம்பு எலும்புகளுக்கு வலுகொடுக்கும்.
ராகி கம்பு குழி பணியாரம்

தேவையான பொருட்கள்

ராகி மாவு - ஒரு கப்
கம்பு - ஒரு கப்
தோசை மாவு - ஒரு கப்
கோதுமை மாவு - 1 மேசை கரண்டி
ரவை - ஒரு  மேசைகரண்டி
பனைவெல்லம் - 2 கப்
ஏலக்காய் - 3
உப்பு - 2சிட்டிக்கை
முட்டை - 1
துருவிய தேங்காய் - 2 மேசைகரண்டி









செய்முறை

ராகிமாவு, கோதுமை மாவும்,கம்பு மாவை சலித்து கொள்ளவும்.
பனைவெல்லத்த்தை தூளாக்கி அதில் ஏலக்காய் தட்டி போட்டு பாகு காய்ச்சி ஆரவைக்கவும்.
தோசைமாவுடன் முட்டை, ரவை, சலித்து வைத்துள்ள முன்று மாவு வகைகள், வெல்ல பாகு அனைத்தையும் சேர்த்து திக்காக கரைக்கவும்.
தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
குழிபணியார சட்டியை காயவைத்து அதில் எண்ணையை சுற்றிலும்  ஊற்றி கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி மிதமான தீயில் கருகாமல் சுட்டு எடுக்கவும்.

இதை தோசையாகவும் சுட்டு எடுக்கலாம்.


பரிமாவும் அளவு - 4 நபர்களுக்கு
ஆயத்த நேரம் - 20 நிமிடம்
சமைக்கும் நேரம் : 30 நிமிடம்


(முன்பே போட்டு வைத்து இருந்த பழைய போஸ்ட் தான் ரெசிபி படஙக்ள் 2015)

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா