வெண்டைக்காய் வறுவல்/பொரியல்/Ladies Finger Stir Fry
வெண்டைக்காய் மூளை வளர்சிக்கு ஏற்ற காய், வெரும் தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் ரொம்ப சிம்பில் பேச்சிலர்களும் ஈசியாக செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்.
வெண்டைக்காய்
– கால் கிலோ
சாம்பார் பொடி
– ஒரு தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
தாளிக்க
எண்ணை –இரண்டு
தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்
பருப்பு, கடலை பருப்பு – ஒரு தேக்கரண்டி
கருவேப்பிலை சிறிது
வெங்காயம் பொடியாக
அரிந்தது – ஒரு மேசைகரண்டி
காஞ்ச மிளகாய்
– 3 எண்ணிக்கை
செய்முறை
வெண்டைக்காயை கழுவி
கொண்டையை யும் வாலையும் அரிந்து விட்டு நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
ஒரு வாயகன்ற காடாயில்
எண்ணை விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தாளிக்கவும்.
பிறகு வெண்டைக்காயை
சேர்த்து நன்கு வதக்கி உப்பு தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்கு கிளறி சிறிது
தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும்.
வேக வைக்கும் போது தீயின் தனலை மிகக்குறைவாக
வைக்கவும். 5 லிருந்து 7 நிமிடங்களுக்குள் வெந்துவிடும்.
பேச்சிலர்களுக்கும்
ஈசியாக செய்யக்கூடிய வெண்டைக்காய் வறுவல் ரெடி.
வெறும் மோர், ரசம்
தயிர் சாதத்துடன் சாப்பிடலாம்.
கவனிக்க : வெண்டைக்காயை
அரிந்து விட்டு கழுவக்கூடாது , கழுவிட்டு தான் அரியனும், இல்லை என்றால் கொழ கொழப்பாகிவிடும்.
சாம்பார் பொடிக்கு
பதில் மிளகாய் தூளும் போட்டு செய்யலாம்.
Tweet | ||||||
4 கருத்துகள்:
நானும் செய்திருக்கிறேன்...
ஆனால் வெண்டக்காயை சிறியதாக நறுக்கிக் கொள்வேன்... நீளவாக்கில் வெட்டுவது இல்லை....
இது எல்லா பேச்சுலர்களும் ஈசியாக செய்வது தான் ஆனால் இதை நீளவாக்கில் வெட்டுவதால் காய் உடைந்து போகாமல் அப்படியே வெந்து நிற்கும்.
வணக்கம் சகோதரி
நானும் இது போல் செய்வேன் ஆனால் வரமிளகாய்க்கு பதில் பச்சை மிளகாயும், நீர் தெளிக்காமலும் செய்வேன். அருமை.
குமார் சொல்வது போல் நானும் வட்டவட்டமாய் வெட்டி செய்வேன் .
நீர் தெளிக்காமல் மூடி வைத்து செய்வேன்.
நீங்கள் சொன்னது போல் நீளவாக்கில் வெட்டி சாம்பார் தூள் போட்டு செய்து பார்க்கிறேன் ஜலீலா.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா