Tuesday, October 16, 2018

Betel Leaf Salad for Diet, Paleo Deit by Jaleelakamal




வெற்றிலை சாலட்
கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றிலையை நாம் சாலட் ஆகவும் சாப்பிடலாமே.

வெற்றிலை சாலட் தயாரிக்க தேவையான பொருட்கள்



வெற்றிலை ‍ 5 எண்ணிக்கை அல்லது தேவையான அள்வு



பொடியாக அரிந்த தேங்காய் துண்டுகள் கால் கப்

பொடியாக அரிந்த வெங்காயம் ‍ 1

பொடியாக அரிந்த இஞ்சி ‍ இரண்டு மேசைகரண்டி

முந்திரி அல்லது வேர்கடலை

மிளகு 15 அல்லது பழுத்த மிளகாய் இரண்டு தேக்கரண்டி

தேங்காய் எண்ணை , நெய் தேவைக்கு



செய்முறை



வெற்றிலையை சுத்தம் செய்து வைக்கவும்.

தேங்காயை தேங்காய் எண்ணையில் வறுத்து வைக்கவும்

முந்திரியை நெய்யில் வறுத்து வைக்கவும்





வெற்றிலையில் முன்று மிளகு, வறுத்த தேங்காய் அரை தேக்கர்ண்டி, வறுத்த முந்திரி அரை தேக்கரண்டி, பொடியாக அரிந்த இஞ்சி சிறிது, வெங்காயம்,அரை தேக்கரண்டி சேர்த்து வெற்றிலையை மடித்து சாப்பிடவும்.



கவனிக்க ‍ மிளகின் அளவு அவரவர் காரத்துக்கு ஏற்றார்போல அதிகம் சேர்த்து கொள்ளலாம்.



(பேலியோவில் இல்லாதவர்கள் இதில் தேன் மற்றும் ப்ரவின் சுகர், வேர்கடலை இது போல சேர்த்து கொள்ளலாம்.




வெற்றிலை சாலட் குழந்தைகளுக்கு 


குழந்தைகளுக்கும் சளி தொல்லை மற்றும் செரிமானத்துக்கு இதை சிறிது பெரிய குழந்தைகள் ஆனதும் இதை பழக்கலாம்.

வெற்றிலை

தேன்
சோம்பு மிட்டாய் அல்லது ஜெம்ஸ் மிட்டாய்
மிளகு ஒன்று அல்லது முன்று

இதை வைத்து மடித்து கொடுக்கலாம். இல்லை தேனுக்கு பதில்  ஜாம் வைத்து கூட கொடுக்கலாம்

வெற்றிலை கிடைக்கவில்லை என்றால் ஏதாவது சாலட் கீரைகளில் லெட்டியுஸ் போனற இலைகளில் இதை வைத்து சாப்பிடலாம்.










இதுவரை சமையல் அட்டகாசம் யுடியுப் சேனலை
சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் 'subscribe' என்ற பட்டனை அழுத்தி பக்கதில் உள்ள பெல் ஐக்கானையும் கிளிக் செய்யுங்கள்.








வெற்றிலை சாலட்
பேலியோடயட்
டயட்
சளி தொல்லைக்கு ஏற்ற அருமருந்து
சிறியவர் முதல் பெரியவர் வரை சாப்பிடலாம்.
ஒவ்வாமைக்கு ஏற்றது
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும்.உணவு உண்ணலாம்.

Verrilai (Betel Leaves) வெற்றிலை Salad for Diet, Paleo Deit,cough and Allergy
இதில் இரண்டு வகை கொடுத்துள்ளேன்
பெரியவர்களுக்கும் கடைசியில் சிறியவர்களுக்கு எப்படி கொடுக்கலாம் என்றும் கொடுத்துள்ளேன்.

லைக் செய்து உங்கள் பொன்னான கருத்துக்களை பகிருங்கள் இதுவே அடுத்த பயனுள்ள பதிவுக்கு எனக்கு பூஸ்ட்

வெற்றிலை சூப் ( சளியை குணமாக்கும் )கிழே லின்கை கிளிக் செய்து பார்க்கவும்.

கல்யான வீடுகளில் தாம்பூலமாக பயன் படுத்தும் வெற்றிலை, கல்யான சாப்பாட்டுக்கு பிறகு செரிமாணத்துக்காக சாப்பிடப்படும் வெற்றிலையை நாம் சாலட் ஆகவும் சாப்பிடலாமே.



இதுவரை சமையல் அட்டகாசம் யுடியுப் சேனலை

சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் 'subscribe' என்ற பட்டனை அழுத்தி பக்கதில் உள்ள பெல் ஐக்கானையும் கிளிக் செய்யுங்கள்.



https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா