முருங்கக்கீரை ஆம்லேட் ரோல் - Moringa Omelette Roll
ஆயத்த நேரம் - 5 நிமிடம்
தயாரிக்கும் நேரம் - 3 நிமிடம்
பரிமாறும் அளவு - ஒரு நபருக்கு
ஆக்கம் : ஜலீலாகமால்
லன்ச் பாக்ஸ் அல்லது காலை உணவு அல்லது இரவு உணவிற்கு இந்த முட்டை ரோல் செய்யலாம். முட்டை ஆம்லேட் ரோல்
இதன் தனித்தன்மையே முட்டையில் முருங்கக்கீரை சேர்ப்பது தான். தினமும் கீரை உணவிற்கு இது ஒரு ஐடியா. பேலியோ டயட் செய்பவர்கள் இதில் சப்பாத்தியை தவிர்த்து முட்டையை மட்டும் சாப்பிட்டு கொள்ளலாம்.
தேவையான
பொருட்கள்
முட்டை
– 2
மிளகு
தூள் அரை தேக்கரண்டி
உப்பு
– அரை தேக்கரண்டி
சிவப்பு
மிளகாய் ப்ளேக்ஸ் – ¼ தேக்கரண்டி
முருங்ககீரை
பொடி – ½ தேக்கரண்டி
பொடியாக
அரிந்த சின்ன வெங்காயம் – 3
கொத்துமல்லிதழை - சிறிது
முட்டை ரோல் செய்ய ஒரு பெரிய சப்பாத்தி.
செய்முறை
முட்டையை நன்கு நுரை பொங்க அடித்து அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் முட்டையில் கலக்கவும்.
தோசை தவ்வாவை சூடு படுத்தி ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் + பட்டர் சேர்த்து கலக்கிய முட்டையை ஊற்றி இரண்டும் பக்கமும் கருகாமல் வேக வைத்து இரக்கவும்.
ரெடியாகிய முருங்ககீரை முட்டையை சப்பாத்தியின் மேலே வைத்து ரோல் செய்து சாப்பிட தகுந்த துண்டுகளாக போடவும்.
Tweet | ||||||
1 கருத்துகள்:
ஆஹா... சூப்பரு....
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா