Sunday, October 28, 2018

மொரு மொரு பகோடா - Crispy Onion Pakoda






பகோடா விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் தெருவுக்கு தெரு ஒரு அவசர ஸ்நாக்ஸ் என்றால் #பகோடா, #வெங்காய பகோடா தான்..அதையே நாம் இன்னும் சுவையாக ஹெல்தியாக நாம் வீட்டில் காய்கறிகள் ( முட்டைகோஸ், சுரைக்காய்,கீரைவகைகள் ( பொன்னாங்கண்ணி, முருங்ககீரை, வெந்தய கீரை இது போல பல வகை கீரைவகைகள் சேர்த்து ஹெல்தியாக செய்யலாம்.
#street Food#Evening Snacks


அபப்டி என்ன தான் இருக்கு இப்படி மொரு மொருன்னு வர வாஙக் கிழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பாருங்கள், இனி தினம் ஒரு போஸ்ட் பகோடோ நான் இதுவரை எத்தனை வகை செய்தேனோ அத்தனை வகையும் இங்கு பதிவாகும்.





இது கண்டிப்பாக நோபன்புகாலத்தில் மாலை நோன்பு திறக்க கஞ்சி யுடன் செய்வேன்.



மொரு மொரு பகோடா

தேவையான பொருட்கள்
கடலை மாவு - ஆறு குழி கரண்டி
அரிசி மாவு  - முன்று குழி கரண்டி
வெங்காயம் - நான்கு பெரியது
பச்ச மிளகாய் - இரண்டு
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
பூண்டு  - ஆறு பல்லு
இஞ்சி சிறிய துண்டு
உப்பு தேவைக்கு
எண்ணை - ஒரு தேக்கரண்டி
நெய் (அ) பட்டர் - ஒரு மேசை கரண்டி
பெருங்காயப் பொடி - அரை தேக்கரண்டி
கொத்து மல்லி, புதினா, கருவேப்பிலை - அரை கப் (பொடியாக சாப் பண்ணது)
இட்லி சோடா  - ஒரு  பின் ((தேவைப்பட்டால்)





செய்முறை

வெங்காயத்தில் சிறிது உப்பு, எண்ணை ஒரு தேக்கரண்டி போட்டு வெறவி வைக்க வேண்டும்.
கடலை மாவு, அரிசி மாவில் உப்பு, பட்டர், மிளகாய் தூள், இஞ்சி பொடியாக அரிந்து போட்டு, பூண்டை நன்கு ஒரு பேப்பரில் வைத்து தட்டி போட்டு, பெருங்காயப்பொடி, கருவேப்பிலை, புதினா, கொத்து மல்லியை மண் போக நன்கு கழுவி பொடிகாக நருகி சேர்க்க வேண்டும்.பச மிளகாயையும் பொடியாக அரிந்து போடு நன்கு கிளறி இப்போது வெறவி வத்துள்ள வெங்காயத்தையும் சேர்த்து நல்ல பிசறி, லேசாகா தண்ணீரை கொஞ்சம் தெளித்து கட்டியாக பிசந்து இரண்டு நிமிடம் வைக்க வேன்டும்.
பிறகு நல்ல ஒரு இரும்பு வாஅனலியில் எண்னையை காய வைத்து கொஞ்ச கொஞ்சமா கொள்ளுகிற அள்வுக்கு சிவற கருகாமல் பொரித்து சாப்பிடவும்.
சுவையான மொரு மொரு பகோடா ரெடி.
குறிப்பு
இதில் பூண்டு, பச்சமிளகாய், இஞ்சி சேருவதால் கேஸ் பிறாப்ளமும் வராது.
இதை நோன்பு காலங்களில் கஞ்சி நல்ல தொட்டுக்க சூட்டகும் , தீடி விருந்தாளிகளை அசத்தலாம், வெள்ளை உப்பு மாவிற்கு தொட்டுக்க சூப்பரா இருக்கும்.
செய்து பார்க்கவும்.
pakoda ,

https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam http://www.chennaiplazaki.com/

0 கருத்துகள்:

Post a Comment

அன்பான பதிவுலக தோழ தோழியர்களே

உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com








என்றும் உங்கள்
ஜலீலாக்கா