கவுனி அரிசி பொங்கல் & கேபேஜ் வடை
You tube link - Cabbage ulunthu vadai posted on 21.1.18
Seven Veggie Pongal kuzambu
Pongal Recipe Collections
இந்த லின்கில் எல்லாவகையான பொங்கல் ரெசிபிகளும் இருக்கின்றன கிளிக் செய்து பார்க்கவும்.
அரிசிகளின் அரசி. கவுனி அரிசி
இது கருப்பு ரெட் கலரில் இருக்கும்
கவுனி அரிசி - அரை கப்
பாசிப்பருப்பு - கால் கப்
வெல்லம் - அரை கப் ( தேவைப்பட்டால் சிறிது கம்மி பண்ணிக்கலாம்)
நெய் - இரண்டு மேசைகரண்டி
சுக்கு பொடி - அரை தேக்கரண்டி ( நான் இனிப்பு பொங்களுக்கு சுக்கு சேர்ப்பேன்)
உப்பு - அரை சிட்டிக்கை
முந்திரி - 6 எண்ணிக்கை
செய்முறை
முந்திரியை ஒரு தேக்கரண்டிநெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும்.
கவுனி அரிசியையும் பாசிபருப்பையும் ஊறவைத்து முன்று டம்ளர் தண்ணீர் சிறிது பால்சேர்த்து வேகவைக்கவும்,இடையில் வெல்லத்தை மண் போக சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து இளக்கி வடித்து வெந்து கொண்டிருக்கும் கவுனி அரிசியுடன் சேர்த்து உப்பு சுக்கு தூள் நெய் ஒரு மேசைகரண்டி சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
வெந்தததும் முந்திரி சேர்த்து மேலும் சிறிது நெய் சேர்த்து கிளறி இரக்கவும்.
இது சிறப்பு விருந்தினர் பதிவில் முன்பு மனோ அக்கா செய்து இங்க நான் போஸ்ட் பண்ணி இருக்கேன்.
இது நான் இப்ப ஊருக்கு சென்றிருந்த சமயம் கவுனி அரிசி வாங்கி வந்தேன்.
உடனே செய்து பார்த்தாச்சு
இது வேக லேட் ஆகுது நான் ஒரு மணி நேரம் தான் ஊறவைத்தேன்.
மனோ அக்கா இரவே ஊற போட சொல்லி இருக்கிறார்கள்.நீங்கள் செய்வதாக இருந்தால் அரிசியை நன்கு ஊறவைத்துகொள்ளுங்கள்.
சரியாக வேக வில்லை என்றால் மீண்டும் தண்ணீர் சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விட்டு இரக்கவும்.
சுவையான சத்தான கவுனி அரிசி ( kavuni arisi) பொங்கல் ரெடி
வீடியோ வாக எடுத்துள்ளேன் பிறகு போஸ்ட் பண்ணுகிறேன்
கிழே உள்ளது ப்ளைன் உளுந்து வடையும் , கேபேஜ் உளுந்து வடையும்.
இங்க பிலாக்கில்நிறைய உளுந்து வடை தயிர் வடை , உளுந்து வடை டிப்ஸ் நிறைய கொடுத்துள்ளேன் அந்த லின்ங் எல்லாம்
கிழே கொடுக்கிறேன்.
வீடியோவை பாருங்கள் கமென்ட் லைக் பண்ணி சப்ஸ்கிரைப் செய்யுங்கள் , உங்கள் நண்பர்களுக்கு ஷேர்செய்யுங்கள்.
.
http://samaiyalattakaasam.blogspot.ae/2014/10/dill-leaves-vadai.html
http://samaiyalattakaasam.blogspot.ae/2013/07/curd-vadai.html
http://samaiyalattakaasam.blogspot.ae/2014/03/kids-colourful-dahi-vada.html
http://samaiyalattakaasam.blogspot.ae/2009/08/blog-post_29.html
உளுந்து வடை டிப்ஸ்
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா