பொங்கல் காய் குழம்பு
வறுத்து திரிக்க வேண்டிய பொருட்கள்
கடலைபருப்பு ( சென்ன தால்) – 1 மேசைகரண்டி
முழு தனியா – 1 மேசைகரண்டி
முழு சிவப்பு மிளகாய் – 7 எண்ணிக்காய்
முழு கருப்பு மிளகு – 7
கருவேப்பிலை – சிறிது
துருவிய தேங்காய் – 2 மேசைகரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
வேகவைக்க
துவரம் பருப்பு – 2 மேசைகரண்டி
வேர்கடலை – 2 மேசைகரண்டி
ஏழு காய் கறிகள் – அரைகிலோ
உருளை கிழங்கு
வாழக்காய்
சர்க்கரை வள்ளி கிழங்கு
அவரைக்காய்
பூசணிக்கா (அ) கத்திரிகாய்
கேரட்
பீன்ஸ்
தாளிக்க
எண்ணை – ஒரு மேசைகரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
கருவேப்பபிலை - சிறிது
பெருங்காயம் – கால் தேக்கரண்டி
புளி லெமன் சைஸ் அல்லது புளி கியுப் – 2 எண்ணிக்கை
வறுத்து பவுடர் செய்ய கூடிய பொருட்களை ஒவ்வொன்றாக வறுத்து கடைசியாக சீரகம் சேர்த்து, ஆறவைத்து பொடிக்கவும்.
காய்கறி வகைகளை நன்கு கழுவி தோலை சீவி விட்டு மீடியமாக கட் செய்து வைக்கவும்.
துவரம் பருப்பையும் வேர்கடலையையும் கழுவி தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
துவரம் பருப்பு, வேர்கடலை, அரிந்து வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
தனியாக தாளிக்கும் சட்டியில் எண்ணை விட்டு அதில் கடுகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளித்து புளி கியுப் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பவுடர் செய்த பொடியையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
கடைசியாக வெந்து வைத்துள்ள பருப்பு , காய் வகைகளை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.
சுவையான பொங்கல் குழம்பு ரெடி.
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா