மூவர்ண பிஸ்கட் & குக்கர் கேக்
தேவையான பொருட்கள்
மைதா – ஒரு கப்
பட்டர் – 75 கிராம்
சர்க்கரை – ¾ கப்
பேக்கிங் பவுடர் – 1
¼ தேக்கரண்டி
முட்டை – 2
தண்ணீர் – அரை கப்
உப்பு – சிறிது
வென்னிலா எசன்ஸ் – சிறிது
லெமன் ஜூஸ் – அரை மூடி
துருவிய லெமன் - ஒரு தேக்கரண்டி
புட் கலர் – ரெட் மற்றும் பச்சை
நியுட்டெல்லா
செய்முறை
பட்டரையும் சர்க்கரையையும் சேர்த்து ஒன்றாக நன்கு அடிக்கவும்
முட்டையை ப்ளபியாக
நன்கு நுரை பொங்க அடித்து சர்க்கரை பட்டர் கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
மைதா,பேக்கிங் பவுடர் உப்பு மூன்றையும் சலித்து கொள்ளவும்.
பிறகு சலித்த மைதாவை அதில் சிறிது சிறிதாக தூவி நன்கு கலக்கவும்.
கடைசியாக வென்னிலா எசன்ஸ் , லெமன் சாறு கலக்கவும்.
ஒரு பவுளில் நியுட்டெல்லாவை ஒரு மேசைகரண்டி அளவு கலக்கவும்
மற்றொரு பவுளில் பச்சை மற்றும் சிவப்பு நிறத்தைக்கலக்கவும்.
ஒரு பவுளில் வண்ணங்கள் எதுவும் கலக்க வேண்டாம்
இதை ஜஸ்ட் ஒரு ட்ரேவில் தேசிய கொடி போல ஸ்பூனால்
எடுத்து ஊற்றி தட்டையாக வைக்கவும்..
200 டிகிரி முற்சூடு படுத்திய ஓவனில் 10 நிமிடம்
வைத்து எடுக்கவும்.
மீதி உள்ள கலவையை ஒரு பெரிய டீ கப்பில் மார்பிள்
போல பச்சை, வெள்ளை , சிவப்பு , ப்ரவுன் கலர் அடுக்காக ஊற்றவும் கலக்க தேவையில்லை வேகும்
போது பரவலாகி அதுவே கலந்து விடும்.
குக்கரில் அடியில் உப்பை போட்டு ஓவன் போல 10 லிருந்து
15 நிமிடம் குக்கரை சூடு படுத்தவும்.
பிறகு டீ கப்பில் ஊற்றிய கேக் கலவையை குக்கரில்
வைத்து மூடி ஓவனில் பேக் செய்வது போல பேக் செய்து எடுக்கவும் . இதில் முக்கியமான விஷியம்
கவனிக்க வேண்டியது குக்கரில் வாசர் ( உள்ளே ரப்பர் ) போட கூடாது , வெயிட்டும் போட கூடாது)
குக்கரை அப்படியே வைக்கிறோமே என்ன ஆகுமோ என்று பயப்படவேண்டாம்
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா