#Liquiddietsoup#samaiyalattakaasam#Battlegourd#vietnamspecialsimplesoup#வியட்நாம்ஸ்பெஷல்சிம்பில்ஈசிசூப்#seasonalrecipe#winterrecie#PaleodietRecipes#UAEfoodblooger#
சுரக்காய் சூப் சூப் செய்வது பெரிய வேலை மலைப்பாக நினைக்கிறீர்களா வாங்க இது போல கூட சிம்பிளாக தினம் ஒரு காயில் செய்து சாப்பிடலாமே. இன்னும் பயனுள்ள பல கிச்சன் ரகசியங்களுடன் பதிவுகள்வரும். அதுக்கு முதலில் என் சேனலை சப்ஸ்கிரைப் செய்து தொடர்ந்து பார்க்கவும். சமையலே செய்யதெரியாதவர்களும் ஈசியாக இதை பார்த்து செய்துவிடலாம்.
ஆறு மாத குழந்தைகளுக்கு முதல் முதலில் என்ன சூப் செய்யலாம் என்று ஒரே குழப்பமாக இருக்கும்.
இது சுரைக்காயில் செய்துள்ளேன் இதே போல தினம் ஒரு காயில் கேரட், முல்லங்கி, கீரை பீட்ரூட் , உருளை என இதே போல செய்து கொடுக்கலாம், தேவைப்பட்டால் இதில் சிக்கனை வெந்து சேர்த்து கொள்ளலாம்.
வியட்நாமில் தினப்படி சமையலில் இந்த சூப் கண்டிப்பாக இடம் பெறும்,
தேவையான பொருட்கள்
சுரைக்காய் அ முட்டை கோஸ் அ கேரட் அ கீரை வகைகள் போன்றவைகளில் ஒரு காய் எடுத்து கொள்ளவேண்டும் - 200 கிராம்
வெங்காயம் - ஒன்று
உப்பு - தேவைக்கு
செய்முறை
ஒரு பெரிய வாயகன்ற சட்டியில் 3 டம்ளர் தண்ணீரை கொதிக்கவிட்டு அதில் துருவிய சுரைக்காய் , பொடியாக நறுக்கிய வெங்காயம் , உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வெந்தததும் நன்கு மசித்து வெந்த சூப்பை வடிகட்டவும்.
இது குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சிறிது நெய் விட்டு தேவைபட்டால் மிளகு தூள் தூவி சாப்பிடலாம்.
வெயிட் குறைக்க இதை தினம் செய்து குடிக்கலாம்.
ஆப்ரேஷன் செய்து இருப்பவர்களுக்கு சூப் கொடுக்க சொல்வார்கள் அப்ப என்ன செய்வது என்று தெரியாது ,
அந்த நேரத்தில் இது போல சூப் செய்து குடிக்கலாம்.
கிட்னி பிராப்ளம் இருப்பவர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம். நல்ல பலன் தெரியும்.
சுரைக்காயை வடிகட்டிட்ட்டு மீதி உள்ள காயை லேசாக தாளித்து தேங்காய் சேர்த்து பொரியல் போலவும் சாப்பிடலாம்/
செய்து பார்த்து உங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதை செய்பவர்கள் என் அந்த சமையலை ஒரு போட்டோ எடுத்து என் மெயில் ஐடிக்கு அனுப்பினால் முகநூலில் ஷேர் செய்வேன்.
மறக்காம என் சேனலை சப்ஸ்கிரைப் பன்ணிடுங்கள் , அப்ப தான் உடனுக்குடன் நான் இங்கு பதியும் குறிப்புகள் உடனே உங்களுக்கு கிடைக்கும்.
cookbookjaleela@gmail.com
please subscribe my you tube channel
தண்ணீ ஆகாரம், லிக்கியுட் டயட்
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975
https://www.facebook.com/Samaiyalattakaasam
http://www.chennaiplazaki.com/
Tweet | ||||||
0 கருத்துகள்:
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா