Prayer Hijab @ Chennai Plaza
Prayer Makkaannaa தொழுகை முட்டாக்கு படம்
இங்கு சென்று பார்க்கலாம்
தொழுகை முட்டாக்கு , மக்கான்னா இதை எல்லோரும் ஓவ்வொரு முறை ஹஜ் செல்லும் போதும் ஆண்களுக்கு தொப்பியும், பெண்களுக்கு இந்த ப்ரெயர் மக்கான்னா /தொழுகை முட்டாக்கும் வாங்கி வருவார்கள்.அது எல்லாமே எலாஸ்டிக் துணியில் தான் இருக்கும் சிலது இப்ப காட்டனிலும் லேஸ் வைத்து விற்கிறார்கள். வெள்ளை கலரில் அகோபா டிசைன் தொழுகை முட்டாக்குகளும் கிடைக்கின்றன.
யார் எத்தனை கொடுத்தாலும் பஞ்சுபோல் வாயில், காட்டன் துணிஎடுத்து அதை தைத்து போட்டு கொள்வது தான் எனக்கு பிடிக்கும்.
வீட்டில் இருக்கும் போது முன்பு இது போல் நிறைய் தைத்து வைப்பேன். வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தாலும் ஆளுக்கு ஒன்று கொடுத்து தொழுக கொடுக்க வசதியாக இருக்கும்.இது போல் காட்டன் துணியும் தைத்து கொண்டால் ஊருக்கு போகும் போது ஹாண்ட்பேக்கில் வைத்து கொள்ளலாம். எந்த வீட்டுக்கு போனாலும் தொழுகை முட்டாக்கை தேடிக்கொண்டு இருக்கவேண்டியதில்லை, மேலே படத்தில் உள்ளது இப்ப தைத்தது இல்லை. 7 வருடம் முன் தைத்தது.
1 & 2, 3 & 4 உயரம் - 35இன்ச்
1 & 3, 2 & 4 அகலம் மடிப்புடன் (போல்டிங்) 42 இன்ச்
1&5 (தலை) முகம் - ஒப்பன் - போல்டிங்) மடிப்புடன் - 9இன்ச் (மொத்தம் 9+9 - 18 இன்ச் வரும்)
6 & 7 அடியில் ஷேப் வரை
பைப்பிங் தைக்க ரோப் அல்லது எலாஸ்டிக்
அகலம் சைடில் மடிப்புடன் துணியை எடுத்து கொள்ளவும் , 42 இன்ச் அளவுக்கு அகலம் கிடைக்கவில்லை என்றால் ஒட்டு போட்டு கொள்ளலாம்.
உயரம் மடிப்பில்லாத பக்கம் வைத்துகொள்ளவும்.
தலையில் கொள்ளும் அளவுக்கு ஒரு பக்க 9, மற்றொரு பக்கம் இன்ச் மொத்தம் 18 இன்ச் வரும், உயரத்தை புடவைக்கு ஓரம் தைப்பது போல் மடித்து தைத்து கொள்ளவும்.
இரண்டு துணியையும் சேர்த்து உயரத்தில் 9 இன்ச் குறித்து கொண்டு மீதியை நேராக 5 & 2 இணைக்கவும்.
2 , 6, 7 & 3 இந்த ஷேப்பையும் அப்படியே அதே வடிவில் ஓரத்தை மடித்து தைக்கவும் .
தொழுகை முட்டாக்கு ரெடி, தலையில் மாட்டியதும் தொழும் போது வழுக்கி வழுக்கி வராமல் இருக்க 1& 5 க்கு நடுவில் சரியாக காதுக்கு கிட்டே வரும் அங்கிருந்து ஒரு நாடா இருபுறமும் தைத்து கொண்டு அதை அப்படியே தலையில் மாட்டி கொண்டால் பின்னந்தலையில் சரியாக நிற்கும், நாடாவிற்கு பதில் எலாஸ்டிக்கும் வைத்து தைத்து கொள்ளலாம்.
புர்கா பயன் படுத்துபவரக்ளுக்கு காட்டன் சுடிதார் துப்பட்டா அப்படியே புதுசாகவே இருக்கும். அது இந்த தொழுகை முட்டாக்குக்கு சரியாக இருக்கும்.
அதை கூட இப்படி தைத்துகொண்டால் வெயில் காலத்தில் அடிக்கும் வெயில் அடிக்கடி கரண்டும் கட்டாகிடும். பாலிஸ்டரை முட்டாக்கு போட்டு ஹாராரத்தா வருவதற்கு இப்படி இதமான காட்டன் தொழுகைமுட்டாக்கு போட்டு ஆனந்தமாய் தொழலாம்.இன்னும் டிசைன்னாக வேண்டும் என்றால் பார்டர் ஷேப் வரும் இடத்தில் பைப்பிங் , லேஸ் போன்றவை வைத்து தைக்கலாம்.
தொழுதுட்டு அப்படியே பிரேயர் மேட்டில் வேர்வையோடு சுற்றி வைப்பதால் வாடை வரும் வாரம் ஒரு முறை இந்த தொழுகை முட்டாக்கை கண்டிப்பாக துவைத்து வைக்கனும், கொஞ்சம் வாசனை செண்ட் போட்டு வைத்தாலும் நல்லது.
எங்க சென்னை ப்ளாசா கடையில் இந்த தொழுகை முட்டாக்கு வைத்துள்ளோம்.காட்டன் அக்கோபா துணியில் தேவைப்பட்டாலும் கிடைக்கும்.
https://www.facebook.com/pages/Chennai-Plaza/156896191130975 https://www.facebook.com/Samaiyalattakaasam
3 கருத்துகள்:
அன்பு ஜலீலா,
என் தளத்திற்கு வருகை தந்து கருத்துரை வழங்கி வருவதற்கு நன்றி!
உங்கள் சமையல் போட்டிகள் பற்றி படித்திருக்கிறேன். ஒரு முறையாவது கலந்து கொள்ள ஆசை.
உங்களின் முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
உபயோகமான குறிப்பு.
Chudi shawl ellam use panna solliyiruppathu nalla idea akka... en shawlkalum niraiya apdiye irukku... insha Allah unga idea try panren.. thankska.
Post a Comment
அன்பான பதிவுலக தோழ தோழியர்களே
உங்கள் அன்பான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்.
ஏதாவது சொல்லிட்டு போன எனக்கும் உற்சாகமாக இருக்கும்.
ஏதும் சமையல் பற்றின சந்தேகங்கள் இருந்தால் என்னை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம். feedbackjaleela@gmail.com
என்றும் உங்கள்
ஜலீலாக்கா